1400 ஆண்டுகள் பழமையான கோண்ட் கலை: உலகை வெல்லும் பழங்குடியினரின் அற்புதம்!

பாரம்பரிய கோண்ட் கலை உலகளவில் புதிய பரிமாணத்துடன் ஜொலிப்பது எப்படி? முழு விவரம்.
கோண்ட் கலை - Tribal Craft
கோண்ட் கலை - Tribal CraftImage credit: Gemini
இந்திரா கோபாலன்

மங்கையர் மலரின் 40 வருஷத்து வாசகியான எனக்கு படிப்பது எழுதுவது மிகவும் பிடித்த விஷயம். புத்தக வடிவிலிருந்து ஆன் லைன் அவதாரத்தை ம.மலர் எடுத்தபின்பும் என்எழுத்து. ஆர்வத்தை ஊக்குவிக்கும் படி என் படைப்புகளை வெளியிடுவதில்.மகிழ்ச்சி. பி.எஸ சி பட்டதாரியான நான் திருமணத்திற்குப் பிறகு தான் எழுத்துப் பணியைத் தொடர்ந்தேன். ஃபெமினா சவ்வி உமன்ஸ்ஈரரசொசைடி போன்ற பல பத்திரிகைகளில் பல கடிதங்கள் எழுதி பரிசு பெற்றுள்ளேன்.தொடர்ந்து மங்கையர் மலருக்கு படைப்புகளை அனுப்புவதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்.

Updated on

ரு பாரம்பரிய  பழங்குடியினரின் கலைநயம் மிக்க வேலைப்பாடு  புதுமுகத்துடன் திரும்ப வந்துள்ளது.‌ 12 கைவினைக் கலைஞர்களால் கோண்ட், பில், ஒர்லி கலை வேலைப்பாடுகள் இணைப்பு மூலம் கோண்ட் கலை என்ற பாரம்பரிய கைவேலைப்பாடு பிரபலமாகியுள்ளது.  முதல் முதலாக கோண்ட்வானா கலைப் ப்ராஜெக்ட் இன் முதல் கண்காட்சி ஹைதராபாத்தில்  சினிமா நகரில் உள்ள  ராமா நாயுடு ஸ்டுடியோவில் நடைபெற்றது.

கோண்ட்வானா கலையின் நிறுவனர் சந்தீப் பண்டாரி அவர்கள் இந்தக் கண்காட்சிக்குப் பிறகு கோவிட் சமயத்தில் பழங்குடியினரை அதிக அளவில் பலரும் சந்தித்து அவர்கள் கைவேலையைப்பற்றி அறிவதாகக் கூறினார்.‌

கோண்ட் கலை பாரம்பரியம்:

கோண்ட் என்பதன் அர்த்தம் பச்சை மலையாகும்.‌ இது கோண்ட் இனத்தைச் சேர்ந்தவர்களின் கலை வேலைப்பாடு ஆகும்.‌ இந்த கைவேலைப்பாடு மத்தியபிரதேஷ், ஆந்திரபிரதேஷ், சட்டிஸ்கர் மற்றும் ஒடிசி பகுதியில் உள்ள கோண்ட் இனத்தைச் சேர்ந்தவர்களின் பாரம்பர்ய கைவேலைப்பாடாகும்.

இது சுமார் 1400ஆண்டுகள் பழமையானது. இக்கைவேலைப்பாட்டில் சிறந்த டிசைன்கள் கண்ணைப்பறிக்கும் வண்ணங்களில் படைப்புத் திறமையோடு செய்யப்படுகின்றன.  இந்த கோண்ட் இனத்தவர்கள் சமீபகாலமாக  மற்றவர்களுடன் இணைந்து பல புதிய கலைநயத்தோடு டிசைன்களை  தயாரிப்பது குறிப்பிடத்தக்கது. இந்த கைவேலையில் முதலில்  புள்ளிகள் வைக்கப்பட்டு பிறகு உருவங்களைக் தயாரிக்கின்றனர்.

இதையும் படியுங்கள்:
வாழ்நாளில் ஒருமுறையாவது பார்க்க வேண்டிய டாப் கலாச்சார விழாக்கள்!
கோண்ட் கலை - Tribal Craft

இந்தப் புள்ளிகள் பலவித வண்ணங்களால் அலங்கரிக்கப்பட்டு டிசைன்கள் உருவாகின்றன. இக்கலையில் யானைகள், பட்டாம்பூச்சி பசு, சிங்கம், மயில் மற்றும் பலவித பறவைகளின் உருவங்கள் இடம் பெறுகின்றன.

பல ஆண்டுகள் பழமையான இக்கலை மண் சுவர்களிலிருந்து பேப்பர்களிலும், கான்வாஸ்களிலும் இடம் பெற்றுள்ளது.‌ கடவுளின் உருவங்கள், மரங்கள மற்றும் காட்டு விலங்குகள் என்று பலவும் இடம்பெறுகின்றன.  இந்தக்கலை இந்தியா மட்டுமல்லாமல் பிரான்ஸ், லண்டன் மற்றும் அமெரிக்காவிலும் பரவியுள்ளது‌. மரங்கள் மிக முக்கியமானதாக இக்கலையில் கருதப்படுகின்றன.

பழங்காலத்தில் கோண்ட் கலைஞர்கள் பானா என்ற வாத்தியம் மூலம் கோண்ட் மன்னர்களைப் பற்றிய விவரங்களைப் பாடல்கள் மூலம் மற்றவர்களுக்குச் சொல்லியது தெரியவருகிறது.  கோண்ட் கலையின் நிறுவனர், நேஷனல் இன்ஸ்டிட்யூட் ஆப் ஃபாஷன் டெக்னாலஜி மூலம் கோண்ட் கலைஞர்கள் இணைந்து பல ஒர்க்ஷாப்கள் நடத்தப்பட்டது ‌என்பதை தெரிவிக்கிறார்.

கோண்ட் கலை - Tribal Craft
கோண்ட் கலை - Tribal CraftImage credit: Gemini

மார்க்கெட்டில் தங்கள் கலைக்கு ஒரு நல்ல வரவேற்பு ஏற்பட ஆன்லைன் மூலம் கலைஞர்கள் கண்காட்சிகள் நடத்துகின்றனர்.‌ குறிப்பாக கோவிட் காலத்தில் ஆன்லைன் மூலமாக கோண்ட் வேலைப்பாட்டிற்கு இந்தியா மற்றும் ஐரோப்பாவிலும் நல்ல விற்பனை ஆனது குறிப்பிட்டுச் சொல்லவேண்டிய விஷயம்.

நாகாலாண்ட், ஜார்கண்ட் மத்யபிரதேஷ் மற்றும் மகாராஷ்டிராவைச் சேர்ந்த கலைஞர்கள் பயிற்சி அளிக்கப்பட்டிருக்கிறார்கள்.‌ பதிய வழிமுறைகளும் இவர்களுக்குக் கற்றுக் கொடுக்கப்பட்டிருக்கிறது. இதுவரையில் கோண்ட் கலை ப்ராஜெக்ட் ஆஸ்திரேலியா இங்கிலாந்து போன்ற இடங்களிலும் மும்பை, ஜெஹாங்கீர் காலெரி மற்றும் டெல்லி, பீகாரிலும் கண்காட்சிகள் நடத்தியுள்ளன.

கோண்ட் கலையில் முக்கியத்துவம் பெறும் மரங்கள் கூறும் கதைகள்;

கஞ்சா மஹுவா மரம்

இந்த மரம் மேல்சாதி பிராமணன் ஒருவன் கீழ்சாதி பெண்ணுடன் ஏற்பட்ட காதலைச் சொல்கிறது. இவர்கள் காதலை யாரும் ஏற்றுக்கொள்ளாததால் அவர்கள் காட்டுக்குள் சென்று கஞ்சா மற்றும் மாஹுவாமரமாக ஆகினர். மேலும் கஞ்சா மாஹுவா இரண்டையும் சேர்த்து அருந்தக்கூடாது என்கிறார்கள்.

 சஜா மரம்

இந்த மரம் கோண்ட் இனத்தவரால் கடவுளாகக் கருதப்படுகிறது.

பக்ரி மரம்

இந்த மரத்தில் புதிய இலைகள் உருவாகும்போது இந்த இலையிலிருந்து உணவைத் தயாரித்து உண்பதால் நோய்நொடி மில்லாமல் இருப்பார்கள் என்று கோண்ட்  இன் மக்கள் நம்புகிறார்கள்‌.

இதையும் படியுங்கள்:
தமிழ்நாட்டில் கர்நாடக இசைக்குள் வயலின் நுழைந்தது எப்படி? 280 கோடி சொத்தாக மாறிய உலகப் பேராச்சரியம்!
கோண்ட் கலை - Tribal Craft

புளியமரம்

இந்த மரத்தை மிகப் புனிதமாக கோர்ட் மக்கள் கருதுகிறார்கள்.‌ இந்த மரத்தடியில் கடவுளைவக்க மேடையைக் கட்டுகிறார்கள்.

அரசமரம்

அரசமரத்தில் கடவுள் இருப்பதாக கருதுகிறார்கள். இது கோர்ட் இனத்தவருக்கு மிக முக்கியமான மரமாகும்.

பாரம்பரியம் மிக்க கோண்ட் கலை பழங்குடியின ரிடமிருந்து புதிய அவதாரம் எடுத்து உலகெங்கும் தற்பேது  புகழ்பெற்று விளங்குகிறது.

logo
Kalki Online
kalkionline.com