வாழ்நாளில் ஒருமுறையாவது பார்க்க வேண்டிய டாப் கலாச்சார விழாக்கள்!

Best Global Events - கலாச்சார விழாக்கள்
Best Global Events - கலாச்சார விழாக்கள்AI Image
Updated on

வ்வொரு நாட்டிலும் அதன் கலாச்சாரம் மரபுகள் பழக்க வழக்கங்களை பிரதிபலிக்கும் சிறப்பு விழாக்கள் நடைபெறுகிறது மக்களின் மனநிலை உற்சாகமாக்கி விடிய அனுபவங்களை வழங்குகின்றன. உலகம் முழுவதும் நடைபெறும் சிறந்த விழாக்கள் ஒவ்வொன்றும் தனித்துவமானவை.

ஒவ்வொரு நாட்டின், கலாச்சாரத்தை மக்களின் மகிழ்ச்சியை கொண்டாடும் இந்த விழாக்கள் மக்கள் ஒருவரோடு ஒருவர் இணைவதற்கும் புதிய அனுபவங்களை பெறுவதற்கும் உதவுகின்றன. இது மனிதர்களின் வாழ்க்கையில் மகிழ்ச்சியை நிறைவும் சேர்க்கும் ஒரு சிறப்பம்சமாக அமைந்துள்ளது. உலகின் சில சிறந்த பிரபலமான விழாக்களை பற்றி தெரிந்துகொள்வோம்.

மனிதர்களை மகிழ்விக்கும் கலாச்சார விழாக்கள்:

மங்கோலியா

மங்கோலியாவில் நடைபெறும் நாடம் விழா இந்த நாட்டின் பாரம்பரிய விளையாட்டு, இசை, நடனங்களை உள்ளடக்கியது. இது ஒரு புராணக்கதைகளை அடிப்படையாகக்கொண்ட விழாவாகும். குதிரை பந்தயம் அம்பு எறிதல், குத்துச்சண்டை போன்ற போட்டிகள் இதன் முக்கிய அம்சங்களாக நடைபெறும்.

பப்புவா நியூ கினியா

பப்புவா நியூ கினியாவின் புகழ் பெற்ற கோரோக்கா ஷோ என்பது ஒரு பாரம்பரிய நடனம் மற்றும் இசை விழா ஆகும். பல்வேறு பழங்குடியினர் கலாச்சாரங்களை கொண்டாடும் இந்த விழாவில் வண்ணமயமான உடைகள் முகக் கவசம், இசை நிகழ்ச்சிகள் இடம்பெறும்.

இந்தோனிஷியா - பாலி

இந்தோனேசியாவின் பாலி தீவில் கொண்டாடப்படும் நைபி விழா பாரம்பரிய நடனத்திற்காக பிரபலமானது. இது பாலியின மக்களின் புத்தாண்டாக கருதப்படுகிறது. இந்த விழாவில் கதைகள், இசை, மற்றும் முக கவசங்கள் மூலமாக சொல்லப்படுகிறது.

மெக்சிகோ

இங்கு டியா டி லோஸ் மு எர்டோஸ் என கொண்டாடப்படும் மரித் தோரின் தினம் என்பது மறைந்த உறவினர்களின் ஆன்மாக்களுக்கு மரியாதை செலுத்தும் விழாவாகும். இதில் வண்ணமயமான அலங்காரங்கள், முக கவசம் மற்றும் நினைவு ஊர்வலங்கள் இடம் பெறும்.

பிரேசில்

பிரேசில், வெனிசுலா மற்றும் பல்வேறு நாடுகளில் கொண்டாடப்படும் கார்னிவல் உலகின் மிகப்பெரிய நடனங்களில் ஒன்றாகும். ரியோ டி ஜெனிரோவில் நடைபெறும். இந்த விழாவில் அதிரடியான ஊர்வலங்கள், இசை மற்றும் நடனங்கள் பிரம்மாண்டமாக நடக்கும்.

ஆஸ்திரேலியா

இங்கு அபோரிஜினல் இனக் குழுவினர் நடத்திய இந்த விழா அவர்கள் பாரம்பரிய ஆடல்களை மற்றும் கதைகளை கொண்டாடுவதற்காக நடத்தப்படுகிறது. மூன்று நாட்கள் நடைபெறும் இந்த விழாவில் கேப், யார்க், மற்றும் டோரஸ் ஜலசந்தி முழுவதிலிருந்து வரும் மக்கள் இசை நடனம் பாடல் மற்றும் கலாச்சார நிகழ்ச்சிகளுடன் கொண்டாட ஒன்று கூடுகின்றனர்.

ஸ்காட்லாந்து

இங்கு எடின்பர்க் நகரத்தில் நடைபெறும் எடின்பர்க் ஃ பிரிஞ்ச் விழா உலகின் மிகப்பெரிய கலை மற்றும் நாடக விழாவாகவும் இதில் நாடகங்கள் காமெடி நிகழ்ச்சிகள் இசை மற்றும் பல்வேறு கலாச்சார நிகழ்ச்சிகள் இடம் பெறும்.

Best Global Events - கலாச்சார விழாக்கள்
Best Global Events - கலாச்சார விழாக்கள்AI Image

இங்கிலாந்து

இங்கு நடைபெறும் கிளாஸ் டன் பரி விழா உலகின் மிகப்பெரிய இசை விழாக்களில் ஒன்றாகும். இது பல்வேறு இசை வகைகள், நடனங்கள் மற்றும் கலைகளை கொண்டாடும் ஒரு மெகா திருவிழாவாகும். பிரமிட் மேடையில் நடைபெறும் உயர் ரக ராக், பாப் மற்றும் மாற்று இசை நிகழ்ச்சிகளை பார்ப்பது மிகவும் சிறந்த அனுபவமாகும்.

கரிபியன் தீவுகள்

இங்கு நடக்கும் இந்த கார்னிவல் விழா வண்ணமயமான உடைகள், ஆடல் மற்றும் இசைக்காக பிரபலமாகும் .இதில் கலந்து கொள்வது வாழ்வில் ஒரு முறையாவது அனுபவிக்கவேண்டிய ஒன்று என்று கருதப்படுகிறது. கார்னிவல் சீசன் பிப்ரவரியில் தொடங்கி மாதம் முழுவதும் விருந்துகள் நிகழ்வுகள் நடைபெறும். பூமியில் மிகச்சிறந்த நிகழ்ச்சி என்று அழைக்கப்படும் முக்கிய அணிவகுப்பு சாம்பல் புதன்கிழமைக்கு முந்தைய திங்கள் மற்றும் செவ்வாய்க்கிழமைகளில் நடைபெறும்.

ஆஸ்திரேலியா

இங்கு டாஸ்மேனியாவில் நடைபெறும் டார்க் மோஃபோ என்பது கலை இசை தொலைக்காட்சிகளில் கலவையாக இது புதுமையான அனுபவங்களை வழங்கும் திருவிழாவாகும். ஒவ்வொரு ஆண்டும் ஜூன் நடுப்பகுதியில் நடைபெறும்.

அமெரிக்கா

இங்கு நடைபெறும் நியூ ஆர்லியன்ஸில் நகரத்தில் நடைபெறும் மார்டி கிராஸ் பிரபலமான ஊர்வலங்களுடன் கூடிய ஒரு வண்ணமயமான விழா ஆகும். இது இசை, நடனம் மற்றும் மகிழ்ச்சியாக கொண்டாடும் ஒரு சிறப்பான விழாவாகும்.

இதையும் படியுங்கள்:
சொப்பு சாமான்கள்: அம்பாசமுத்திரத்தின் உலகப் புகழ்பெற்ற பாரம்பரிய மர விளையாட்டுகள்!
Best Global Events - கலாச்சார விழாக்கள்

தெருக்களில் விருந்து வைக்கும் சிறிய நண்பர்கள் குழுக்கள் முதல் தொழில் ரீதியாக கட்டப்பட்ட மிதவைகள் அணிவகுப்பு, இசைக்குழுக்கள் மற்றும் ஆடம்பரமான உடைகளில் நடை பயிற்சி செய்யும் க்ரூக்கள் வரை அதன் அணி வகுப்புகளுக்குஇது மிகவும் பிரபலமானது.

இந்தியா

இந்தியாவின் மிக பிரபலமான நிறங்களின் திருவிழா ஹோலி. இது மகிழ்ச்சியும் ஒற்றுமையும் கொண்டாடும் ஒரு விழாவாகும். இதில் மக்கள் ஒன்றாகக் கூடி நிறங்களை தெளித்து நடனம் மற்றும் சுவையான பண்டிகை உணவுகளுடன் வட இந்தியாவின் பல பகுதிகளில் அனுபவிக்கின்றனர். நெருப்பு இசை மற்றும் நடனம் மற்றும் சுவையாக பண்டிகை உணவுகளுடன் வட இந்தியாவில் பல பகுதிகளில் ஹோலி மிகவும் ஆடம்பரமான கொண்டாட்டம் ஆகும்.

வெவ்வேறு கண்டங்களில் உள்ள மக்களின் மகிழ்ச்சியான தருணங்களை உற்று நோக்குவதன் மூலம், உங்கள் வாழ்வில் புதிய உற்சாகமும் நேர்மறை எண்ணங்களும் பிறக்கும். இந்த உலகளாவிய கொண்டாட்டங்களைப் பற்றிய அறிவு, நண்பர்கள் மற்றும் உறவினர்களுடனான உரையாடல்களில் உங்களை தனித்துவமாக காட்டும்.

logo
Kalki Online
kalkionline.com