கின்னஸ் சாதனைப் படைத்த ‘மிகபெரும் மரபுவழி நடனம்’!

Konyak Dance
Konyak Dance

இந்தியாவில் நாகலாந்து மாநிலத்தில் வசிக்கும் 16 பழங்குடி இனத்தவர்களில், மோன் மாவட்டத்தில் (Mon District) வசிக்கும் கொன்யாக் பழங்குடியினர்களும் (Konyak Tribes) இருக்கின்றனர்.

கொன்யாக் மக்கள் பழங்குடியினப் போர்வீரர்களாக அறியப்பட்டாலும், அவர்கள் மூர்க்கத்தனமான குணமுடையவர்களாகவும் இருப்பார்கள். இருப்பினும், அவர்கள் அணியும் பல நிறங்களிலால் ஆன உடைகள் மற்றும் அணிகலன்கள், அவர்கள் பாடும் பாடல்கள், ஆடும் நடனங்கள் போன்றவை மற்ற பழங்குடியினத்தவர்களில் இருந்து முற்றிலும் மாறுபட்டு இருக்கும்.

கொன்யாக் பழங்குடியினர் ஒவ்வொரு ஆண்டும் வசந்த காலத்தைக் கொண்டாடும் வகையில், ஏப்ரல் 1 முதல் ஏப்ரல் 6 ஆம் நாள் வரை அயோலியாங் (Aoleang) எனும் திருவிழாவைக் கொண்டாடி மகிழ்வர். அத்திருவிழாக் காலத்தில் கொன்யாக் ஆண்கள், பெண்கள், சிறுவர்கள் என்று அனைவரும் தங்களது மரபு வழியிலான உடைகளை அணிந்து ஆடிப்பாடி மகிழ்ச்சியுடன் இருப்பார்கள்.

இதையும் படியுங்கள்:
வாக்கு எண்ணிக்கை நடைபெறும் விதம் தெரியுமா?
Konyak Dance

கொன்யாக்கின் வளமான, பன்முகத்தன்மை கொண்ட கலாச்சாரத்தைப் பாதுகாக்கும் நோக்கத்துடன் தொடங்கப் பெற்ற சமூக அமைப்பான கொன்யாக் கூட்டமைப்பு, அயோலியாங் திருவிழாவில் கொன்யாக் இனப் பெண்களின் மரபு வழி நடனத்தைச் சாதனை நிகழ்ச்சியாக மாற்றி, அவர்களது பண்பாட்டை உலகறியச் செய்திட வேண்டுமென்று நினைத்துச் செயல்பட்டது.

அதனைத் தொடர்ந்து, 2019 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 5 ஆம் நாளில் மோன் மாவட்டத்திலுள்ள 130 கிராமங்களைச் சேர்ந்த 4687 கொன்யாக் இனப் பெண்கள் ஒன்றாகச் சேர்ந்து, மரபு வழியிலான வண்ண உடைகள் அணிந்து, ஒரு மெல்லிசைப் பாடலுடன் கொன்யாக் மரபுவழி நடனத்தை 5 நிமிடங்கள் 2 வினாடிகள் ஆடி சாதனை படைத்தனர்.

இந்நடனம் ‘மிகபெரும் மரபுவழி நடனம்’ (Largest Traditional Dance) என்கிற சாதனையாக கின்னஸ் சாதனைப் புத்தகத்தில் இடம் பெற்றிருக்கிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com