நைல் நதியில் முற்காலத்தில் ஆண்டிற்கு ஒருமுறை வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதை பல ஆண்டுகளாக ஒரு எகிப்திய மதகுரு கவனித்து வந்தார். ஒருமுறை வெள்ளம் ஏற்பட்டு பின் மறுமுறை வெள்ளப்பெருக்கு ஏற்படும் இடைவெளியில் வானில் சந்திரன் 12 முறை பௌர்ணமி ஏற்படுவதை கவனித்தார். அப்படி 12 முறை சந்திரன் தேய்ந்து வளரும் முறையை ‘மூன்ஸி’ என்று அழைத்தனர்.
இதுவே பின்பு ‘12 மந்த்ஸ்’ என அழைக்கப்பட்டது. இப்படி சந்திரனை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட நாட்காட்டி ‘லூனார் நாட்காட்டி’ எனப்பட்டது. இதுவே சூரியனின் இயக்கத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட நாள்காட்டி. இது ‘சோலார் நாட்காட்டி’ என்று அழைக்கப்பட்டது.
ஒவ்வொரு ஆண்டிலும் கால் நாள் கூடிக்கொண்டே வந்தது. இதை சரி செய்ய ஜூலியஸ் சீசர் லீப் ஆண்டு முறையை அறிமுகப்படுத்தினார். இதற்குப் பிறகும் நாள் கூடியது. இந்தக் குழப்பத்தைத் தீர்த்து நவீன நாட்காட்டியை நாம் தற்போது பயன்படுத்தும் நாட்காட்டியை ரோமாபுரியை ஆண்ட பாப்பரசர் கிரிகோரி x111 - 1582ல் உருவாக்கினார்.
முதல் நாட்காட்டி கி.மு. 700ல் ரோம் நகரை உருவாக்கிய ரோமுலஸ் அரசரால் உருவாக்கப்பட்டது. கி.மு. 46ல் எகிப்து மீது படையெடுத்த ஜூலியஸ் சீசர் எகிப்தியரின் சிறப்பான நாட்காட்டி பற்றி அறிந்து ரோமானிய நாட்காட்டியை சீர்படுத்தினார். அதன்பின் வந்த அகஸ்டஸ் சீசரும் பல திருத்தங்களைச் செய்து முடிவில் கிரிகோரியன் உருவாக்கிய நாட்காட்டி முறையை திருத்தப்பட்ட நாட்காட்டி முறையாக ஏற்றுக் கொண்டனர்.
மாயன் நாட்காட்டியின் முதல் நாள் 0000 எனத் தொடங்குகிறது. மிகவும் சிக்கலான, ஆனால் மிகத் துல்லியமாகக் கணிக்கப்பட்ட நாட்காட்டி அது. பழங்காலத்தில் ரோமானியர்கள் வீடுகளில் நாட்காட்டியை மாட்டுவதில்லை. மாதப் பிறப்பன்று ஊர்ப் பணியாளர்கள் வீதிகளில் வந்து புது மாதப் பிறப்பை அறிவிப்பார்.
நியூ கினியா மக்களுக்கு காலண்டர் முறை தெரியாது. ஒவ்வொரு கிறிஸ்துமஸ் சமயமும் முட்டையிட வரும் ஆமைகளை வைத்தே தங்கள் வயதைக் கணக்கிட்டனர். இவ்வாறு நாட்காட்டி பலவித மாற்றங்கள் கண்டு இன்று துல்லியமாகக் கணிக்கப்பட்ட நாட்காட்டியாக சமூகம் முன்னேறி இருக்கிறது.