குளிர்காலத்தில் உடலுக்கு ஆற்றலைத் தரும் 7 வகை கீரைகள்!

Spinach that give energy to the body in winter
Spinach that give energy to the body in winter
Published on

கீரைகளில் பொதுவாக ஊட்டச்சத்துக்கள் நிறைந்து காணப்படுகின்றன. குளிருக்கு இதமாக சில கீரைகள் புத்துணர்ச்சி மற்றும் ஊட்டச்சத்துடன் உணவுக்கு சுவையையும்  கொண்டுவரும். குறிப்பாக குளிர் மாதங்களில் உடலுக்கு தேவையான ஆற்றலைக் கொடுக்கும். இந்த குளிர் மாதங்களில் சாப்பிடவேண்டிய 7 கீரைகள் குறித்து இந்தப் பதிவில் காண்போம்.

1. பாலக்கீரை: பசுமையாக இருக்கும் பாலக்கீரையில் அதிக அளவில் இரும்புச் சத்துக்களும், கால்சியம் சத்துக்களும் மற்றும் வைட்டமின் ஏ மற்றும் சி சத்துக்கள் அதிக அளவில் உடலுக்கு நன்மையை கொடுக்கின்றன. இது நோய் எதிர்ப்பு சக்தி, பார்வைத் திறன் மற்றும் எலும்பை வலுப்படுத்துவதால் குளிர்காலத்திற்கு ஏற்ற கீரைகளின் பட்டியலில் உள்ளது. இந்தக் கீரையை சூப்கள், சாலட்கள், பாலக், பன்னீர் ஆகியவற்றில் பயன்படுத்த முடியும்.

2. வெந்தயக்கீரை: வெந்தயக்கீரை செரிமானத்தை மேம்படுத்துவதோடு, இரத்த சர்க்கரை அளவை முறைப்படுத்துகிறது. மேலும், சரும ஆரோக்கியத்தையும் அதிகரிப்பதால் குளிர்காலத்திற்கு ஏற்ற சிறந்த கீரையாக உள்ளது. வெந்தயக்கீரை பராத்தாக்கள், தேப்லாக்கள் செய்து உணவில் எளிதில் சேர்த்துக்கொள்ளலாம்.

இதையும் படியுங்கள்:
வெண்பொங்கல் சாப்பிடுவதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள்!
Spinach that give energy to the body in winter

3. கடுகுக்கீரை: காஷ்மீரின் உணவான சர்சன்டா சாக் செய்வதற்கு முக்கியமான உட்பொருளே கடுகுக் கீரைதான். வட இந்தியாவில்அதிகம் எடுத்துக்கொள்ளப்படும் கடுகுக்கீரையில் வைட்டமின்கள் ஏ, கே மற்றும் சி ஆகியவை உள்ளதால், இதய ஆரோக்கியத்துக்கு உதவி செரிமானத்தை அதிகரிப்பதால் குளிர் காலத்திற்கு ஏற்ற உணவாக இந்தக் கீரை உள்ளது.

4. சிவப்பு தண்டுக்கீரை: சிவப்பு தண்டுக்கீரையில் அதிகளவில் இரும்பு, கால்சியம் மற்றும் புரத சத்துக்கள் நிறைந்துள்ளதால் அனீமியாவை எதிர்த்துப் போராடி எலும்பு ஆரோக்கியத்தை அதிகரிக்கின்றன. குளிர்காலங்களில் இதமளிக்கும்  இந்த கீரையை பருப்புடன் கடைந்து அல்லது வேகவைத்து சாப்பிட்டால் அது ஊட்டச்சத்துக்கள் நிறைந்த உணவாகும்.

5. சக்ரவர்த்தி கீரை அல்லது பருப்புக்கீரை: சக்ரவர்த்தி கீரை என்ற பருப்பு கீரையில் கழிவு நீக்க குணங்கள் அதிகம் இருப்பதோடு கால்சியம், வைட்டமின் ஏ மற்றும் சி சத்துக்கள் அதிகளவில் இருப்பதால் இது உடலுக்கு எண்ணற்ற நன்மைகளைக் கொடுக்கின்றது. இதை பருப்புடன் கடைந்து அல்லது ரைத்தாவுடன் சேர்த்து சாப்பிட குளிர்காலத்திற்கு சிறந்த உணவாக உள்ளது.

இதையும் படியுங்கள்:
பேக்கிங் சோடா மற்றும் பேக்கிங் பவுடர் உபயோகங்கள்!
Spinach that give energy to the body in winter

6. முள்ளங்கிக்கீரை: முள்ளங்கிக் கீரையில் வைட்டமின் சி, கால்சியம் மற்றும் நார்ச்சத்துக்கள் நிறைந்துள்ளதால், இது செரிமானத்தை அதிகரித்து, நோய் எதிர்ப்பாற்றலை தூண்டுகிறது. இதை பராத்தாக்களாக அல்லது வேகவைத்து சாப்பிட சுவை அள்ளும்.

7. காலர்ட் கீரை: காலர்ட் கீரையில் நார்ச்சத்துக்கள் மற்றும் வைட்டமின் கே, ஃபோலேட்கள் அதிகம் உள்ளதால் இது செரிமான ஆரோக்கியம் மற்றும் எலும்பு ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. இக்கீரையை பல்வேறு வழிகளிலும் உணவில் சேர்த்துக்கொள்வதால், குறிப்பாக குளிர்கால ஆரோக்கியத்தை மேம்படுத்த இந்த கீரை சிறந்ததாக அமையும்.

மேற்கூறிய 7 கீரை வகைகளும் குளிர்காலத்தில் அதிக அளவில் நன்மை பயக்கும் என்பதில் சற்றும் ஐயமில்லை.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com