வெனிசுலாவின் வரலாறு: அரசாங்க வேலையே ஆனாலும் 1000 ரூபாய்க்கு கீழே தான் சம்பளம்!

History of Venezuela
History of Venezuela
Published on

History of Venezuela!

வெனிசுலா இயற்கை அமைப்பு!

உலகின் 33வது பெரிய நாடான வெனிசுலா 9,16,000 ச.கி.மீ. பரப்பளவை கொண்டது. இங்கு வாழும் 35 மில்லியன் மக்களில் 80 % பேர் நகரங்களிலும் 20% மக்கள் கிராமங்களிலும் வசிக்கின்றனர். 51% பெண்களும் 41% ஆண்களும் வசிக்கும் வெனிசுலாவில் 89 % பேர் கிறிஸ்தவர்கள்.

தென் அமெரிக்க நாடான வெனிசுலாவின் தலைநகரான கராகஸ் மலைகளால் சூழப்பட்ட இயற்கை எழில் கொஞ்சும் மிகப்பெரிய நகரமாகும். அரசியல் நிலப்பரப்பும் நிர்வாக மையமும் இந்த நகரத்திலிருந்து ஆரம்பிக்கிறது. சுமார் 50 ஆண்டுகளுக்கு முன்பு உலகின் விலை உயர்ந்த நகரமாக இருந்ததை நம்ப முடியாத அளவிற்கு இன்று கராகசின் சாலைகள், கார்கள், மற்றும் கட்டிடங்கள் மிகவும் பழமையானவையாக இருக்கின்றன. 

வாழ்க்கை ,வேலைவாய்ப்பு!

பெரிய எண்ணெய் வளம் வெனிசுலாவில் கண்டுபிடிக்கப்பட்ட பின்பு இங்குள்ள மக்கள் ஆயிரக்கணக்கான கார்களையும், மோட்டார் சைக்கிள்களையும் வாங்கி பணக்கார இளவரசர்களைப் போல வாழ்ந்தார்கள்.

அமெரிக்கா வெனிசுலாவை தாக்குவது இது முதல் முறை அல்ல. தாக்குதலுக்கு பல ஆண்டுகளுக்கு முன்பே பல்வேறு தடைகளை அமெரிக்கா விதித்ததால் உலகின் ஏழ்மையான நாடாக மாறிவிட்டது. வெனிசுலாவின் பொலிவார் (VEF) என்று அழைக்கப்படும் இந்த நாட்டின் நாணயத்தின் மதிப்பு வெகுவாக வீழ்ச்சியடைந்துள்ளது. இந்தியாவின் 1000 ரூபாய் மதிப்பு இங்கு லட்சங்களாகும் .லட்சக்கணக்கான ரூபாய்கள் இங்கு நாணயத்தாள்களில் அச்சிடப்படுகின்றன.

மாத சம்பளம்  5-7 டாலர் மட்டுமே இங்கு பெற முடியும் என்பதால் ஒரு சம்பளத்தில் வாழ்வது கடினம் என்பதால் அரசாங்க மற்றும் தனியார் வேலையில் இருப்பவர்கள் வேறு ஏதாவது வேலையைக் கண்டிப்பாக செய்கிறார்கள்.

ஐரோப்பியர்களின் வருகைக்கு முன்பு வாழ்ந்த பழங்குடியினர் விவசாயம் செய்து கடற்கரையில் வாழ்ந்தனர். இவர்கள் தங்களுக்கென மொழி, கலாச்சாரம் கொண்டிருந்தனர். கொலம்பசால்  முதலில் கண்டுபிடிக்கப்பட்ட ஐரோப்பிய ஆய்வாளர்கள் வந்தபோது சூழ்நிலைகள் மாறியது. ஸ்பானியர்கள் வரத் தொடங்கியதும் அவர்களை பின்பற்றி பழங்குடியினர் தங்களது வாழ்க்கை முறை, உணவு பழக்க வழக்கங்கள், மொழிகள் போன்ற தங்களது அடையாளங்களை இழந்தனர். சைமன் பொலிவர் தலைமையின் கீழ் விடுதலை உணர்வு மேலிட்டு சுதந்திர நாடானது.

இதையும் படியுங்கள்:
இந்த 20 நாடுகளுக்கு பயணம் செய்ய வேண்டாம்… அமெரிக்கா எச்சரிக்கை!
History of Venezuela

பொழுதுபோக்கு!

இசையும் ,நடனமும் இங்குள்ள மக்களின் பொழுதுபோக்கு அம்சங்களாகும்.மிஸ் யுனிவர்ஸ்,மிஸ் வேர்ல்டு  பட்டங்களை பலமுறை வென்றுள்ள இங்குள்ள பெண்கள் உலகின் மிகவும் அழகானவர்களாக இருக்கின்றனர். உலகின் மிகவும் சக்தி வாய்ந்த பெரிய கழுகு ஒன்று இந்நாட்டின் சுதந்திரம் மற்றும் வலிமையின் சின்னமாக கருதப்படுகிறது.

சுற்றுலா!

கரீபியன் கடலில் உள்ள லாஸ் ரோக்ஸ் சிறிய பெரிய தீவுகளை உள்ளடக்கி இயற்கை எழில் கொஞ்சம் சுற்றுலா தலமாக உள்ளது. வெள்ளை மணல், தெளிவான நீர் கொண்டுள்ளதோடு டைவிங், ஸ்னோர்கெல்லிங் போன்ற நீரடி சாகசங்கள் செய்ய நினைப்பவர்களுக்கு சொர்க்க பூமியாகும்.

இதையும் படியுங்கள்:
ஐநாவிலிருந்து விலகுகிறதா இஸ்ரேல்?
History of Venezuela

வெனிசுலா நாட்டின் தென்கிழக்கு பகுதியில் பொகோடா மாகாணத்தில் அமைந்துள்ள கிராண்ட் சவானா உயர்ந்த அழகிய மலைகளுக்கும், பரந்த பசுமைவெளிகளுக்கும், அழகிய வீழ்ச்சிகளுக்கும் பெயர் பெற்ற உலகின் மிகச்சிறந்த சுற்றுலா தலமாகும். அமேசான் மலை காடுகள் இங்கிருந்து வெகு தூரத்தில் இல்லை.

இவ்வளவு இயற்கை எழில் சூழ்ந்த வெனிசுலா நாடு தன்னுடைய ஒப்பற்ற எண்ணெய் வளத்தின் காரணமாகவே இன்று ஏழ்மை நிலையில் இருப்பது அங்குள்ள மக்களுக்கு மட்டுமல்ல உலக நாடுகளுக்கும் கண்ணீரை வரவழைக்கிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com