கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற்ற இந்தியாவின் வியக்கவைக்கும் சாதனைகள்!

Guinness Records India - இந்திய சாதனைகள்
Guinness Records India - இந்திய சாதனைகள்AI Image
Updated on

பொது நிகழ்ச்சிகள், மதச்சார்புடைய நிகழ்ச்சிகள் நடத்துவதற்காக நடந்த சண்டையின் காரணமாக 1205 ம் ஆண்டு புனே நகரில் மலோஜி தோரட் என்பவர் வழக்கொன்றை தொடர்ந்தார். தலைமுறை தலை முறையாக நடந்து வந்த அந்த வழக்கு 1966 ம் ஆண்டு ஏப்ரல் 28 ம் தேதி அவரது வம்சாவளியைச் சேர்ந்த பால் சாகேப் பட்லோஜி தோரட் என்பவருக்கு சாதகமாக தீர்ப்பு வழங்கப்பட்டது. 761 ஆண்டுகளாக நடைபெற்ற வழக்கு இது என்று கின்னஸ் புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது.

ந்தியாவில் பிரிட்டிஷ் ஆட்சி காலத்தில் 1872 ம் ஆண்டு ஜூலை 10 ம் தேதி கர்னல் வில்லியம் பார்கலியின் மகனாக பிறந்த பில்லி சென்ட் பார்க்லேவிற்கு மதராஸ் மிலிட்டரி ஃபண்டிலிருந்து அவருக்கு திருமணமாகும் வரை தினசரி பென்சன் தரும்படி உத்தரவாகியது. திருமணம் ஆகாமலேயே 1969 ம் ஆண்டு அக்டோபர் 29 வரை - அதாவது 97 ஆண்டுகள் 3 மாதங்கள் வரை அவர் தினமும் பென்ஷன் பெற்று வந்தார்.

'மனித கம்பியூட்டர்' என்று புகழ்பெற்றவர் சகுந்தலா தேவி.1980 ம் ஆண்டு ஜூன் 18 ம் தேதியன்று லண்டன் இம்பீரியல் கல்லூரியில் இவருக்கு கொடுக்கப்பட்ட கணக்கு இதுதான் 7,686,369,774,8750 x 2,465,099,745,799. இதன் சரியான விடை:18,947,668,177,993,426,462,773,730. இதற்கு சரியான விடை சொல்ல அவர் எடுத்துக்கொண்ட நேரம் 28 விநாடிகள். இது ஒரு கின்னஸ் சாதனை.

ரு நாளைக்கு 5 முதல் 7 மணி நேரம் புத்தரின் போதனைகளைத் தொடர்ந்தாற்போல் இந்தியாவில் 60 மணி நேரம் உபதேசித்திருக்கிறார் திபெத்தில் இருந்து வெளியேற்றப்பட்ட 14 வது தலாய்லாமா. 1969 மே 31 ம் தேதி முதல் ஜூன் 10 ம் தேதி வரை இந்த நிகழ்ச்சி நடந்தது. இது ஒரு கின்னஸ் சாதனை.

Guinness Records India - இந்திய சாதனைகள்
Guinness Records India - இந்திய சாதனைகள்AI Image

1917 ம் ஆண்டு செப்டம்பர் 7 முதல் 1981 ம் ஆண்டு மார்ச் 28 ம் தேதி வரை தொடர்ந்து 63 ஆண்டுகள் 6 மாதங்கள் ஒரு பத்திரிகையின் ஆசிரியராக பணியாற்றி சாதனை புரிந்தார் மைசூரைச் சேர்ந்த எம்.எஸ். கிருஷ்ணா ராவ். பத்திரிகை பெயர் - சத்கவதி.

ந்தியர்களால் மட்டுமே சாதிக்கக்கூடிய சாதனைகள் உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த சுவாமி மெளஜ்கிரி மகராஜ் இவர் 1955 முதல் 1973 வரை தொடர்ந்து 17 ஆண்டுகள் நின்றபடியே தவம் இருந்தார். இவர் தூங்கும் போது மட்டும் தன் பக்கத்தில் இருந்த மரப்பலகையில் சாய்ந்து கொள்வாராம்.1980 ம் ஆண்டு தன் 85 வது வயதில் காலமானார்.

இதையும் படியுங்கள்:
அழிவின் விளிம்பில் இந்திய சர்க்கஸ்: ஒரு பொற்காலத்தின் சோகக்கதை!
Guinness Records India - இந்திய சாதனைகள்

தொடர்ந்தாற்போல் 13 ஆண்டுகள் பாடல்களைப் பாடி சாதனை புரிந்திருக்கிறார் ஆச்சார்ய பிரேம் பிகூஜி‌.1964 ம் ஆண்டு இவர் பாடலைப்பாடி துவக்கி வைக்க இவரது சீடர்கள் அதை தொடர்ந்து பாடி ஒரு சுற்று முடிய ஜூலை 31, 1977 ம் ஆண்டு முடித்து வைத்தார்கள்.

1979 ம் ஆண்டு ஆகஸ்ட் 11ம் தேதி ஏற்பட்ட குஜராத் மாநிலத்தின் மார்வி அணைக்கட்டு உடைப்பில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 5000. உலகிலேயே மிக பயங்கரமான விபத்து இது. அதேபோல் 1981 ம் ஆண்டு ஜூன் 6 ம் தேதியன்று பீகார் பாக்மதி ஆற்றுப் பாலத்தின் மீது நடைபெற்ற ரயில் விபத்தில் காலமானவர்கள் எண்ணிக்கை 800.

1973 ம் ஆண்டு ஏப்ரல் மாதம் மகாராஷ்டிரா மாநில அகமத் நகரில் வறட்சி பணிக்காக அமைக்கப்பட்ட சமையல் கூடம் தான் உலகிலேயே அமைக்கப்பட்ட மிகப்பெரிய சமையல் கூடமாகும். தினசரி 12 லட்சம் மக்களுக்கு இங்கு உணவளிக்கப்பட்டது. இது ஒரு கின்னஸ் சாதனை.

1982-83 ம் ஆண்டில் கல்கத்தாவில் உள்ள சவுத் பாயிண்ட் உயர்நிலைப் பள்ளியில் 13,000 மாணவர்கள் நாள் தவறாமல் பள்ளிக்கு வந்து கின்னஸ் சாதனை புரிந்திருக்கிறார்கள்.

இதையும் படியுங்கள்:
பித்தளை vs வெண்கலம்: உங்கள் வீட்டு பூஜை அறைக்கு எந்தச் சிலை அதிர்ஷ்டம் தரும்?
Guinness Records India - இந்திய சாதனைகள்

லகிலேயே மிக அதிகமாக 1861 ம் ஆண்டு ஜூலை மாதம் முழுவதும் மேகாலயாவில் உள்ள சிரபுஞ்சியில் பெய்த மழையின் அளவு 366.14 அங்குலம். ஓராண்டு முழுவதும் பெய்த மழையின் அளவு 1041.78 அங்குலம். இது ஒரு கின்னஸ் சாதனை.

மிகப் பெரிய ஒரே வெள்ளித்தகட்டினால் செய்யப்பட்ட ஒரு ஜோடி தண்ணீர் கூஜாக்களின் எடை 242.7 கிலோ, உயரம் 5 அடி 3 அங்குலம், சுற்றளவு 8 அடி 1.5 அங்குலம். ஜெய்பூர் மகாராஜாவிற்காக 1902 ம் ஆண்டு கோவிந்த் நாராயண் என்பவரால் உருவாக்கப்பட்ட இந்த கூஜாக்கள் 182 லிட்டர் நீர் கொள்ளளவு கொண்டது. இது இன்றும் ஜெய்ப்பூர் அரண்மனையில் உள்ளது. உலகின் பிரமாண்டமான கூஜா என்று கின்னஸில் இடம் பெற்றுள்ளது.

இந்தத் தகவல்களை வாசிப்பதன் மூலம், இந்தியாவின் மறைக்கப்பட்ட வரலாற்று உண்மைகள் மற்றும் அசாத்திய மனித சாதனைகள் பற்றிய ஆழமான அறிவைப் பெற்று, நண்பர்களுடனான உரையாடல்களில் உங்களை ஒரு சிறந்த வரலாற்று அறிஞராக வெளிப்படுத்திக் கொள்ள முடியும்.

logo
Kalki Online
kalkionline.com