நமக்கு இது கொடுமையான வெயில்... அவர்களுக்கு இது குடும்பப் பெயர்! ஒரு சுவாரஸ்யமான தகவல்!

interesting-facts
interesting-facts
Published on

பொதுவாக நம் தமிழ் மொழியில் வெயில் என்றால் அது எதை குறிக்கும்? வெப்பத்தை தானே குறிக்கும். இதோ வெயில் இப்பவே கொளுத்த ஆரம்பித்துவிட்டது. வெயிலின் கொடுமை போக போக இன்னமும் அதிகமாகும். மே மாதம் முதல் வாரத்திலிருந்து கத்திரி வெயில் ஆரம்பமாகும்.

சரி, இதிலிருந்து நமக்கு தெளிவாக தெரிவது என்னவென்றால், வெயில் என்கிற நம் தமிழ் வார்த்தைக்கு வெப்பம், சூடு, சூரிய ஒளி, இவை தானே பொருளாகும். ஆனால் ஒரு சில நாடுகளில் வெயில் என்றால் அது அவர்களுடைய குடும்ப பெயரை அதாவது டைட்டில் பெயரை குறிக்குமாம். ஆச்சரியமாக இருக்கிறது இல்லையா.. சற்று யோசித்து பாருங்கள்.. ஒரு நபரை பார்த்து, டேய், வெயிலு, இங்க வாடா என்றால் எப்படி இருக்கும். வினோதமான பெயரை வைத்து கொள்கிறார்கள்... சரி, இப்போது எந்த நாட்டினர் வெயில் என்ற பெயரை வைத்து கொண்டிருக்கிறார்கள் என்று பார்க்கலாமா..?

வெயில் என்ற குடும்பப்பெயர் ஜெர்மன் வம்சாவளியைச் சேர்ந்தது, இது மத்திய உயர் ஜெர்மன் வார்த்தையான "வைலே" என்பதிலிருந்து உருவானது, இதன் பொருள் "கிராமம்" அல்லது "குடியேற்றம்". இது பொதுவாக ஒரு கிராமத்திற்கு அருகில் வசிக்கும் ஒருவருக்கு ஒரு நிலப்பரப்பு பெயராகவோ அல்லது ஒரு குறிப்பிட்ட பெயரிடப்பட்ட இடத்தைச் சேர்ந்த ஒருவரின் வாழ்விடப் பெயராகவோ பயன்படுத்தப்பட்டது. இந்த பெயரை கொண்டவர்கள் தென்மேற்கு ஜெர்மனியில், குறிப்பாக ஸ்வாபியா மற்றும் அல்சேஸ் பகுதிகளில் பரவலாக இருக்கிறார்கள்.

இந்தப் பெயர் யூத வம்சாவளியைக் கொண்டிருக்கலாம் என்று கருதப் படுகிறது. இது ஒரு அலங்கார குடும்பப்பெயராகவும் ஏற்றுக்கொள்ளப்படுகிறது. இந்த பெயரை மையமாக வைத்து பெறப்பட்ட அல்லது தொடர்புடைய பெயர்களில் வெய்லர், வெயில் மற்றும் வெய்லர்ட் ஆகியவை அடங்கும்.

குறிப்பிடத்தக்க வகையில் பல நபர்கள் வெயில் என்ற பெயரைக் கொண்டுள்ளார்கள்.

இதையும் படியுங்கள்:
காதல் சின்னமா? கட்டிடக்கலை அதிசயமா? தாஜ்மஹால் பற்றி நீங்கள் அறியாத திடுக்கிடும் உண்மைகள்!
interesting-facts

சைமன் வெயில் என்பவர், ஒரு பிரெஞ்சு தத்துவஞானி, ஆன்மீகவாதி மற்றும் அரசியல் ஆர்வலர் ஆவார், ஆன்மீகம், சமூக நீதி மற்றும் மனித நிலை குறித்த அவருடைய ஆழமான எழுத்துக்களுக்கு அவர் பெயர் பெற்றவர். ஏழைகள் மற்றும் ஒடுக்கப்பட்டவர்களுக்கான அர்ப்பணிப்பு மற்றும் அறிவுசார் கடுமை மற்றும் ஆன்மீக ஆழத்தின் தனித்துவமான கலவைக்காக அவர் இன்றளவும் மக்களால் நினைவு கூறப்படுகிறார்.

ஆண்ட்ரூ வெயில் என்பவர், ஒரு அமெரிக்க மருத்துவர் மற்றும் எழுத்தாளர் ஆவார். இவர், வழக்கமான மருத்துவ நடைமுறைகளை மாற்று சிகிச்சைகளுடன் இணைக்கும் ஒருங்கிணைந்த மருத்துவத்திற்காக பிரபலமானார். இவர், ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்விற்கான முழுமையான அணுகுமுறைகளின் ஆதரவாளராக திகழ்ந்தார்.

இந்த வெயில் என்ற பெயர், இன்றளவும் அமெரிக்கா, பிரான்ஸ், ஜெர்மனி, இஸ்ரேல் போன்ற நாடுகளில் பிரபலமாக இருக்கிறதென்றே சொல்லலாம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com