காதல் சின்னமா? கட்டிடக்கலை அதிசயமா? தாஜ்மஹால் பற்றி நீங்கள் அறியாத திடுக்கிடும் உண்மைகள்!

Wonder of the world
Wonder of the world
Published on

உத்தரப் பிரதேசம் மாநிலம் ஆக்ரா நகரில் யமுனா நதிக்கரையை ஒட்டி தாஜ்மஹால் அமைந்துள்ளது. வெள்ளை நிற பளிங்கு கற்களால் ஆன மாளிகை உலக அதிசயமாக பார்க்கப்படுகிறது. 1632 இல் தொடங்கி சுமார் 22 ஆண்டுகள் கட்டப்பட்டது. இதன் ரகசியங்கள் 22 மூடப்பட்ட நிலத்தடி ரகசிய அறைகள் ஆகும்.தவிர நேரத்திற்கு தகுந்தார் போல் நிறம் மாறும் பளிங்கு கற்கள் உள்ளன. 42 ஏக்கர் வளாகம் மற்றும் யமுனா நதிக்கரையில் அமைந்துள்ள இந்த தாஜ்மஹால் பலரையும் ஈர்த்து வருகிறது.

தாஜ்மஹாலின் பிரதான தளத்தில் அடியில் 22 அறைகள் உள்ளன. இவை 300 ஆண்டுகளுக்கும் மேலாக மூடப்பட்டு உள்ளது. 1978ல் ஏற்பட்ட வெள்ள நீர் இந்த அறைகளில் புகுந்ததால் இதனை தொல்லியல் பாதுகாப்பு துறையினர் இவற்றை நிரந்தரமாக மூட உத்தரவிட்டனர்.

தாஜ்மஹால் நாள் முழுவதும் நிறம் மாறிக்கொண்டே இருக்கும். இது ஒரு பிரம்மை என்று கூறலாம். காலையில் இளம் சிவப்பு நிறமாகவும் நண்பகளில் வெள்ளை நிறமாகவும் மாலையில் தங்க நிறத்திலும் காட்சி அளிக்கும் வகையில் கட்டப்பட்டுள்ளது

தாஜ்மஹாலில் உள்ள நான்கு கோபுரங்களும் சற்று வெளியே நோக்கி சாய்ந்து கட்டப்பட்டுள்ளது. ஒருவேளை நிலநடுக்கம் ஏற்பட்டால் பிரதான கல்லறைகள் மீது விழாதவாறு இருக்கும் வகையில் கட்டப்பட்டுள்ளது.

ஷாஜகான் யமுனை ஆற்றின் மறு கரையில் தனக்காக ஒரு கருப்பு பளிங்கு கற்களால் ஆன கல்லறை கட்ட திட்டமிட்டு இருந்தார். ஆனால் இதற்கு உறுதியான சான்றுகள் எதுவும் கிடைக்கவில்லை. அந்த காலத்தில் இந்த கதை மிகவும் பிரபலமாக பேசப்பட்டது.

இந்த வளாகம் முழுவதும் 42 ஏக்கர் பரப்பளவில் பரந்து விரிந்து காணப்படுகிறது. செந்நிற கற்களால் சூழப்பட்டுள்ளது. 20,000 மேற்பட்ட கட்டிடப் பணியாளர்கள் இதற்காக பணியாற்றினார்கள்.

தாஜ்மஹாலை நெருங்கும்போது பெரியதாகவும் தூரத்தில் இருந்து பார்த்தால் சிறிதாகவும் தெரியும் வகையில் கட்டப்பட்டுள்ளது.

இதையும் படியுங்கள்:
சிங்கத்தின் வாயில் கங்கை நீர்: ராஜேந்திர சோழனின் வரலாற்றுச் சின்னம்!
Wonder of the world

தாஜ்மஹாலை கட்டி முடித்ததும் ஷாஜகான் அதில் உள்ள முக்கிய 37 கட்டிட கலைஞர்களின் கைகளை வெட்டியதாக வரலாறு உண்டு. ஆனால் அதற்கு உரிய ஆவணம் எதுவும் கிடைக்கவில்லை.

ஷாஜகான் மனைவி மும்தாஜ் தனது 14வது குழந்தை பிறப்பின் போது இறந்துவிட்டார். அவர்கள் நினைவாக ஷாஜகான் தாஜ்மஹாலை கட்டியதாக கூறப்படுகிறது. இந்தியாவின் மிகப்பெரிய சுற்றுலா தளமாகவும் உலக அதிசயங்களில் ஒன்றாகவும் தாஜ்மஹால் பார்க்கப்படுகிறது.

இங்குள்ள பூட்டப்பட்ட 22 நிலத்தடி அறைகள் கோடைகாலத்தில் மன்னர்களின் குடும்பங்கள் தங்குவதற்கு வசதியாக ஏற்படுத்தப்பட்டது என கூறப்படுகிறது. இந்த 22 அறைகளும் யமுனா நதிக்கரையை பார்க்கும் வண்ணம் அமைக்கப் பட்டுள்ளது. 1978 இல் ஏற்பட்ட வெள்ளம் இந்த அறைகளில் புகுந்துவிட்டது. அதன் காரணமாக இந்த ரகசிய அறைகள் நிரந்தரமாக மூடிவிட்டார்கள்.

தாஜ்மஹாலில் மும்தாஜின் உடல் மூன்று முறை அடக்கம் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. இதன் முக்கிய கல்லறை 1648 இல் கட்டி முடிக்கப்பட்டது. இதனை சுற்றியுள்ள தோட்டங்கள் 1653 ஆம் ஆண்டு நிறைவடைந்தது. இது ஒரு யுனெஸ்கோ பாரம்பரிய தலமாக கருதப்படுகிறது. இதன் தலைமை கட்டிடக்கலைஞர் உஸ்தாத் அகமது லகோரி ஆவார். இவர் தலைமையில் 37 கட்டிடக்கலைஞர்களும் மற்றும் 20,000 பணியாளர்களும் பணிபுரிந்து இந்த தாஜ்மஹாலை உருவாக்கினார்கள்.

இதை கட்டுவதற்காக வெள்ளை நிற பளிங்கு கற்கள் மற்றும் இளம் சிவப்பு நிற பளிங்கு கற்கள் ராஜஸ்தானில் உள்ள மக்ரானாவில் இருந்து கொண்டுவரப்பட்டது. ஷாஜகான் ஆட்சியைப் பிடிப்பதற்காக தன் உடன் பிறந்த மூன்று சகோதரர்களையும் கொன்றுவிட்டார்.

மும்தாஜை மணப்பதற்கு முன்பாக ஷாஜகான் இரண்டு திருமணம் செய்து கொண்டார். மூன்றாவதாகதான் மும்தாஜ் திருமணம் நடைபெற்றது.

இதையும் படியுங்கள்:
பரதநாட்டியத்தில் ஒளிந்திருக்கும் கணிதம் - வெளிநாட்டினர் வியக்கும் ரகசியம்!
Wonder of the world

தாஜ்மஹாலை கட்டுவதற்கு அந்தக் காலத்திலேயே 4 கோடி வெள்ளி நாணயங்கள் செலவானது. ஒரு வெள்ளி நாணயத்தின் மூலம் 200 கிலோ அரிசி அல்லது 200 கிலோ கோதுமை வாங்கலாம். இந்த தாஜ்மஹால் உருவாகுவதற்கு எண்ணற்ற உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. இரண்டாம் உலகப் போரின்போது குண்டு தாக்குதலலிருந்து தப்பிக்க தாஜ்மஹால் மூங்கில் கம்புகள் பச்சை துணி கொண்டும் மூடி மறைக்கப்பட்டது.

எப்படி இருந்தாலும் தாஜ்மஹால் உலக அதிசயங்களில் ஒன்றாகவும் நாட்டிற்கு பெருமை சேர்க்கும் வகையில் அமைந்துள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com