கிரேயான் எனும் வண்ணத்தீட்டுக்கோல் உருவான கதை!

Crayons
Crayons
Published on

அமெரிக்காவைச் சேர்ந்த எட்வின் பின்னி மற்றும் ஹெரால்டு ஸ்மித் எனும் சகோதரர்கள் சாயப்பொருள் தயாரிக்கும் நிறுவனத்தை நடத்தி வந்தனர். இவர்கள் நிறுவனத்தில் சிவப்பு கிரேயான்கள் வண்ணம் பூசவும், கறுப்பு கிரேயான்கள் டயர் என்னும் வட்டகைகளுக்கு வண்ணம் சேர்ப்பதற்கும் என்று இரண்டு நிறங்களில் கிரேயான்கள் தயாரிக்கப்பட்டு வந்தன. 1900 ஆம் ஆண்டில் இவர்கள் பென்சில்கள் தயாரித்து விற்கத் தொடங்கினர். ஒரு நாள் அவர்கள் பென்சில் விற்பனை செய்வதற்காக, ஒரு பள்ளிக்குச் சென்றனர். அங்கு கிரேயான்களைக் கொண்டு சிறுவர்கள் படம் வரைந்து வண்ணம் பூசிக் கொண்டிருந்தார்கள். அது சிறுவர்களுக்கு கடினமாக இருப்பதையும், அந்த வண்ணக் கிரேயான்கள் நச்சுத்தன்மை கொண்டுள்ளதையும் கண்டு குழந்தைகளுக்கு எளிதாகவும், நச்சுத்தன்மை அற்றதாகவும் இருக்கும் வகையில் கிரேயான்களை தயாரிக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

அதன் பிறகு, 1903 ஆம் ஆண்டில் தற்போதுள்ள கிரேயான்களை உருவாக்கி, அவற்றை விற்பனைக்குக் கொண்டு வந்தனர். எட்வின் பின்னியின் மனைவி ஆலிஸ்தான் இந்த வித்தியாசமான கலர் பென்சிலுக்குக் கிரேயான் என்று பெயர் சூட்டினார். உருவாக்கினார்.

சாக்பீஸ் போன்று இதன் வடிவம் இருப்பதால் அதற்கு அந்தப் பெயர் சூட்டப்பட்டது. கிரேயான் என்பது பிரெஞ்சு சொல். சாக்பீஸுக்கு பிரெஞ்சு மொழியில் கிரை என்று பெயர். ஓலா என்றால் எண்ணெய்.

இந்த இரண்டு வார்த்தைகளையும் சேர்த்துதான் கிரேயானோ அல்லது கிரேயான் என்ற பெயரை ஆலிஸ் மெழுகு, கரி, சுண்ணாம்பு ஆகியவற்றைச் சேர்த்துச் செய்யப்படும் வண்ணத்தீட்டுக்கோல் (crayons) தற்போது விலை மலிவாகவும், நச்சுத்தன்மை அற்றதாகவும், பென்சில் அல்லது பேனா பயன்படுத்தும் போது அதன் கூர்மை போன்ற ஆபத்து இல்லாததாகவும் இவை இருக்கின்றன.

வண்ணப்பூச்சுகள் செய்ய, பென்சில் எனும் குறிப்பான் எழுதுகோல்களை விட எளிதானதாக இருக்கின்றன. மேலும், இவை பல்வேறு நிறங்களில் கிடைக்கக்கூடியது. இந்தப் பண்புகளால் மாணவர் மற்றும் தொழில்முறை கலைஞர்களால் பரவலாகப் பயன்படுத்தப்பட்டு வருகின்றது. சிறிய குழந்தைகள் வரைந்து பழக, எளிதான பொருளாக இந்த வண்ணத்தீட்டுக்கோல் (crayon) உள்ளது.

பிரான்சுவா க்ளோட் (1510–1572) மற்றும் நிக்கோலஸ் எல்'ஆக்னேயு (1590–1666) உள்ளிட்ட ஆரம்பகால பிரெஞ்சுக் கலைஞர்கள் தங்கள் ஆரம்பகாலக் கலைத் திட்டங்களில் வண்ணத்தீட்டுக் கோல்களைப் பயன்படுத்தினர். க்ளோட் தனது மாதிரி ஓவியங்களுக்கு வண்ணத்தீட்டுக் கோல்களைப் பயன்படுத்தினார். அரச குடும்பத்திற்கான நீதிமன்ற ஓவியராக ஆனார், மேலும் அவரது முழு கலை வாழ்க்கையும் மெழுகு வண்ணத்தீட்டுக்கோல் கலையுடன் தொடங்கியது மற்றும் அதை உள்ளடக்கியது.

இதையும் படியுங்கள்:
ஸ்கெச் பென் மற்றும் கலர் பென்சில் உருவான வரலாறு
Crayons

எல்'ஆக்னேயு தனது உருவப்படங்களை மெழுகு கிரேயன்களில் வெளிப்புறங்களுடனும், நீர் வண்ணங்களின் சாயல்களுடனும் வரைந்தார். அவரது உருவப்படங்கள் பெரும்பாலும் ஆச்சரியமாகவோ அல்லது தங்கள் சுற்றுப்புறங்களைப் பற்றி அறியாமலோ இருந்த மக்களின் உருவப்படங்களாக இருந்தன.

சகோதரி கெர்ட்ரூட் மோர்கன், நியூ ஆர்லியன்ஸில் எளிமையாகவும், எளிதில் புரிந்து கொள்ளக்கூடிய வண்ணக் கோடுகள் வரைந்த ஓவியங்களுடனும் நற்செய்தியைப் பிரசங்கிப்பதில் மிகவும் பிரபலமானவர்.

இதையும் படியுங்கள்:
ஹோப் வைரம்: 250 மில்லியன் அமெரிக்க டாலருக்குக் காப்பீடு! அப்படி இதில் என்னதான் இருக்கு?
Crayons

மோர்கன் ஒரு கேலரி உரிமையாளர் ஈ. லோரென்ஸ் போரென்ஸ்டீனின் கவனத்தை ஈர்த்தார், மேலும் அவரது படைப்புகளைக் காட்டவும், தனது இசையை வாசிக்கவும், கேலரியில் கடவுளின் வார்த்தையைப் பரப்பவும் அனுமதிக்கப்பட்டார். அவரது ஆரம்பகால வரைபடங்கள் மிகவும் எளிமையான மற்றும் வண்ணக் கோடு வரைபடங்களாக இருந்தன. அவை பைபிளைப் பற்றி அறிமுகமில்லாதவர்களுக்குத் தெளிவான படத்தை வழங்க பைபிள் உரையை சித்தரித்தன.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com