'ஜௌஹர் விழா' - பெண்கள் கூட்டாகத் தீக்குளித்து உயிர் துறந்த கொடுமை..!

Jauhar festival
Jauhar festival
தேனி மு.சுப்பிரமணி

தேனி மு. சுப்பிரமணி தேனியில் சுயநிதிப் பொறியியல் கல்லூரி ஒன்றில் நிருவாக மேலாளர் மற்றும் செயலாளர் (கூடுதல் பொறுப்பு) நிலையில் பணியாற்றிய தேனி மு. சுப்பிரமணி, கல்லூரி நிருவாகத்துடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் அங்கிருந்து வெளியேறிய பின்பு, தமிழில் வெளியாகும் பல்வேறு இதழ்களில் எழுதி வருகிறார். ஆன்மிகம், கணினி, இணையம், கல்வி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இரண்டாயிரத்துக்கும் அதிகமான கட்டுரைகளை எழுதியிருக்கிறார். இதுவரை இவர் எழுதிய பத்தொன்பது நூல்கள் வெளியாகியிருக்கின்றன. இவர் எழுதிய ‘தமிழ் விக்கிப்பீடியா’ எனும் நூலுக்குத் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் சிறந்த நூலுக்கான பரிசு கிடைத்திருக்கிறது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. நடைமுறை வாழ்க்கையில் தூயதமிழைப் பயன்படுத்தி, தமிழ் மொழியின் வளர்ச்சிக்கும், பாதுகாப்பிற்கும் உறுதுணையாக இருக்கும் இவரைப் பாராட்டித் தமிழ்நாடு அரசின் செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்ட இயக்ககம் 2022 ஆம் ஆண்டுக்கான ‘தூயதமிழ்ப் பற்றாளர் விருது’ வழங்கிச் சிறப்பித்திருக்கிறது. தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையினால் நடத்தப்பெற்று வரும் இளந்தமிழர் இலக்கியப் பட்டறை, ஆட்சி மொழிப் பயிலரங்கம், கருத்தரங்கம் உள்ளிட்ட நிகழ்வுகளிலும், தமிழ்நாட்டிலுள்ள பல்வேறு கல்லூரிகளில் நடத்தப்பெறும் பயிலரங்கம் மற்றும் கருத்தரங்கம் உள்ளிட்ட நிகழ்வுகளிலும் கலந்து கொண்டு ‘இணையத்தமிழ்’ தொடர்பாகப் பல்வேறு பயிற்சி வகுப்புகளை நடத்தி வருகிறார். தேனித் தமிழ்ச் சங்கத்தின் தலைவராக ஆறு ஆண்டுகளாகச் செயல்பட்டு வந்த இவர், தற்போது தேனித் தமிழ்ச் சங்கத்தின் செயலாளராகவும், சென்னை, சங்கம் தமிழ் அறக்கட்டளையின் செயலாளராகவும் செயல்பட்டு வருகிறார். முத்துக்கமலம் (www.muthukamalam.com) எனும் பெயரில் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழ் (ISSN: 2454 - 1990) ஒன்றினை 2006 ஆம் ஆண்டில் தொடங்கி, அதன் ஆசிரியராகத் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார். மாதமிருமுறை புதுப்பிக்கப்பட்டு வரும் முத்துக்கமலம் இணைய இதழ் குறித்து ஆய்வு செய்து இருவர் எம்.பில் பட்டங்களைப் பெற்றிருக்கின்றனர். ‘முத்துக்கமலம் இணைய இதழின் இலக்கியப் பணிகள்’ எனும் தலைப்பில் ஒருவர் மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டத்திற்கான (Ph.D) ஆய்வு மேற்கொண்டு வருகிறார் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது. பல்கலைக்கழக மானியக் குழுவின் தமிழ் மொழிக்கான ஆய்விதழ்களின் பட்டியலில் முத்துக்கமலம் இதழ் ஒரு ஆண்டு காலம் இடம் பெற்றிருந்தது என்பதும் இங்கு கவனிக்கத்தக்கது.

Updated on

பெண்கள் கூட்டாகத் தீக்குளித்து உயிர் துறந்த ஜௌஹர் விழாவைப் பற்றித் தெரியுமா?

தில்லி சுல்தான் போன்றவர்கள் அதிக அளவிலான படைவீரர்களுடன், இராசபுத்திர மன்னர்களின் கோட்டைகளை முற்றுகையிட்டு மிகக் கடுமையாகத் தாக்கும் போது, போரில் தோற்கும் நிலை ஏற்படும் என்று தெரிய வரும் நிலையில், இராசபுத்திர மன்னர்களின் மனைவிகள் மற்றும் இராசபுத்திர குலப் பெண்கள், தில்லி சுல்தான் படைவீரர்களின் கையில் சிக்கிச் சீரழிவதைத் தடுக்கும் நோக்கில், பெரும் தீ வளர்த்து, அதில் கூட்டாகத் தீக்குளித்து உயிர் துறந்தனர். இந்தக் கூட்டுத் தீக்குளிப்பு நிகழ்வே ஜௌஹர் (Jauhar) விழா எனப்படுகிறது. இந்தக் கூட்டுத் தீக்குளிப்பு நிகழ்வை இராசபுத்திரப் பெண்கள் அன்று பெருமைக்குரியதாகக் கருதினார்கள்.

ஜௌ எனும் சமசுகிருதச் சொல்லிற்கு, ‘ஜீவன் அல்லது வாழ்க்கை’ என்றும், ஹர் எனும் சொல்லிற்கு, ‘தன்னைத்தானே மாய்த்துக் கொள்ளல்’ என்றும் பொருளாகும். இரவு வேளையில் கோட்டையினுள் நடக்கும் ஜௌஹர் விழாவின் போது, திருமணமான இராசபுத்திர குலப் பெண்கள், திருமண உடைகள் அணிந்து கொண்டு, தங்கள் குழந்தைகளுடன் கூட்டாகத் தீக்குளிப்பர்.

ஜௌஹர் விழா நடந்த அடுத்த நாள் காலையில், கோட்டையில் இருக்கும் இராசபுத்திரப் படைவீரர்கள் குளித்து விட்டு, குங்குமப்பூ நிறத்திலான செவ்வாடைகள் உடுத்திக் கொண்டு, கூட்டாகத் தீக்குளித்து இறந்த தங்கள் குல பெண்டிர் மற்றும் குழந்தைகளின் சாம்பலை நெற்றியில் இட்டு, துளசி இலைகளை மென்று கொண்டு, கைகளில் போர்க்கருவிகளை ஏந்தி, கோட்டைக் கதவைத் திறந்து கொண்டு வெளியேறி, ‘ஜெய் பவானி’ என வீர முழக்கம் எழுப்பியபடி, எதிரிகளை வெற்றி கொள்ளும் வரை வீரமாகப் போரிடுவர்; அல்லது தங்கள் உயிர் போகும் வரை போரிடுவர்.

இதையும் படியுங்கள்:
காலம் மாறிவிட்டது என்றாலும், கருத்துள்ள சிலவற்றை மறக்க வேண்டாமே!
Jauhar festival

இந்த ஜௌஹர் விழா எனும் கூட்டுத் தீக்குளிப்பு தொடர்பான ஆவணங்கள் வரலாற்று ஆசிரியர்களால் முழுமையாக ஆவணப்படுத்தப்படவில்லை. தில்லி சுல்தான்களின் ஆட்சிக் காலங்களில், குறிப்பாக அலாவுதீன் கில்ஜி மற்றும் துக்ளக் ஆட்சிக் காலங்களில், தற்கால இராஜஸ்தான் மற்றும் குஜராத்து பகுதிகளை ஆண்டு கொண்டிருந்த இராசபுத்திர குலப் பெண்களின் கூட்டுத் தீக்குளிப்புகள் நிகழ்வுகள் பல நடைபெற்றிருக்கின்றன.

கோரி முகமது போரில் தில்லியின் கடைசி இந்து மன்னரான பிரித்திவிராஜ சௌகானைக் கொன்ற செய்தி அறிந்த பட்டத்து ராணி சம்யுக்தா, இராச புத்திரப் பெண்களுடன் கூட்டாகத் தீக்குளித்து இறந்தார். 

மேவார் நாட்டின் சித்தோர்கார் கோட்டையில் 1303, 1528, 1568 ஆம் ஆண்டுகளில் மூன்று முறை கூட்டுத் தீக்குளிப்பு நிகழ்வுகள் நடந்திருக்கின்றன.

அலாவுதீன் கில்ஜி ஆட்சிக் காலத்திலும், துக்ளக் ஆட்சிக் காலத்திலும், ஜெய்சல்மேர் கோட்டையில் இரு கூட்டுத் தீக்குளிப்புகள் நடந்திருக்கின்றன. மற்றொரு கூட்டுத் தீக்குளிப்பு நிகழ்வு சந்தேரிக் கோட்டையில் நடந்திருக்கிறது.

1. தில்லி சுல்தான் அலாவுதீன் கில்ஜி, ஜெய்சல்மேர் கோட்டையை ஏழு மாத முற்றுகைக்குப் பின்னர் கைப்பற்றும் நிலையில், கோட்டைக்குள் இருந்த 24,000 இராசபுத்திர குலப் பெண்கள் பெரும் தீ வளர்த்து கூட்டாகத் தீக்குளித்து உயிர் துறந்திருக்கின்றனர். 

2. இராண சங்கா கண்வா போரில் மாண்ட பின்னர், மேவார் மற்றும் சித்தோர்கார் நாட்டுப் படைவீரர்கள், விதவையான இராணி கர்ணாவதியின் தலைமையில் ஒன்று திரண்டனர். குஜராத் சுல்தான் பகதூர் ஷா, சித்தூர் கோட்டையை கைப்பற்றியதால், இராணி கர்ணாவதியும், இராசபுத்திரப் பெண்களும் 1528 ஆம் ஆண்டு, மார்ச் 8 ஆம் நாளில் கூட்டாகத் தீக்குளித்து இறந்தனர். இராசபுத்திர ஆண்கள், பகதூர் ஷா படைகளுடன் உயிர் துறக்கும் வரை கொடூரமாகப் போரிட்டு மாண்டனர்.

இதையும் படியுங்கள்:
நியூசிலாந்து கடற்கன்னி 'பனியா'வைப் பற்றித் தெரியுமா?
Jauhar festival

3. அக்பர் 1567 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் சித்தூர் கோட்டையை முற்றுகையிட்டுப் பல மாதங்கள் போர் செய்தார். கடைசியாக, கோட்டையைப் பீரங்கிகளால் தாக்கி, 1568 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 22 ஆம் நாளன்று கோட்டையைத் திறந்து உள்ளே நுழைந்தனர். அங்கு இராசபுத்திரப் பெண்கள் அனைவரும் கூட்டாகத் தீக்குளித்து இறந்து போனதை கண்டார். அப்போரில் இராசபுத்திர ஆண்கள், நெற்றியில் சாம்பலைப் பூசிக் கொண்டு, ஜெய் பவானி என வீர முழக்கம் இட்டவாறு, அக்பரின் படைகளுடன் இறக்கும் வரை போரிட்டதும் தெரிந்தது.  

இக்கூட்டுத் தீக்குளிப்பு நிகழ்வுகள் அபுல் பசல் எழுதிய அக்பர் நாமா எனும் நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

logo
Kalki Online
kalkionline.com