வாளைவிடக் கூர்மையானது... அந்தஸ்தின் அடையாளமானது: பேனாவின் சுவாரசியமான வரலாறு!

journey-of-pens
journey-of-pens
எம். ஆர். ஆனந்த்

I am a retired Bank officer. I have written articles in English for News Papers. I have written poems in English and Tamil 

Updated on

பேனாக்களில் எழுதுவது மிகவும் குறைந்து போய்விட்டது. பேனாக்களும் ஒரு காலத்தில் ஸ்டேட்டஸ் சிம்பலாய் இருந்தது. எழுத படிக்க தெரியாத பணக்கார பண்ணையார்களும் பாக்கட்டில் தங்க பேனாவை சொருகி வைத்து சேவல் நடை போட்டதுண்டு . சிலர் தங்க நிப்புடன் கூடிய பேனா வைத்திருப்பார்கள்.

என்னுடைய வாட்டர் மேன் பேனா ஒன்றை அதன் புராதன மதிப்பை உணராமல் என் மகன் தூக்கி எறிந்துவிட்டான் . அதேபோல் என் தந்தையிடம் இருந்தது ராஜாஜி அவர்கள் கொடுத்த பேனா ஒன்று. அதுவும் வீடு காலி செய்யும்போது தொலைந்துவிட்டது. இப்போது அப்படிப்பட்ட பேனாவின் பரிமாண வளர்ச்சியை பற்றி பார்ப்போம்.

நாணல் மற்றும் தூரிகைகளில் ஆரம்பித்து, மை பேனாக்கள் வழியாக நவீன பால் பாயிண்ட் வரை நீண்ட வரலாற்றைக் கொண்டது பேனாக்கள் . கி மு 3000-ல் எகிப்தியர்கள் நாணல் பேனாக்களை பயன்படுத்தினர், பின்னர் 19-ஆம் நூற்றாண்டில் ஃபவுண்டன் பேனாக்கள் (Fountain pens) மற்றும் 20-ஆம் நூற்றாண்டில் பால்பாயிண்ட் பேனாக்கள் அறிமுகமாகி, எழுதுதலில் புரட்சியை ஏற்படுத்தின. பண்டைய எகிப்தியர்கள் நாணல் (Reed pens) மற்றும் மையை பயன்படுத்தினர்.

இதையும் படியுங்கள்:
புதிய பொலிவுடன் வரும் நாட்டின் முதல் காந்தி மியூசியம்!
journey-of-pens

*சீனர்கள் எழுதும் தூரிகைகளை (Brushes) பயன் படுத்தினர்.

*கி.பி. 600 - 1800: பறவைகளின் இறகுகள் (Quill pens) மூலம் எழுதும் முறை பழக்கத்துக்கு வந்தது.

*1809: ஆர்தர் ஃபோலர் மை பேனாவுக்கு காப்புரிமை (Patent) பெற்றார்.

*1884: லூயிஸ் எடிசன் வாட்டர்மேன் (Lewis Waterman) முதல் நடைமுறை பவுண்டன் பேனாவை உருவாக்கினார்.

*1910: இந்தியாவில் முதல் பவுண்டன் பேனா வடிவமைக்கப்பட்டது.

*1938: லாஸ்லோ பைரோ (László Bíró) பால்பாயிண்ட் பேனாவை (Ballpoint pen) கண்டுபிடித்தார்.

*1950கள்: ஜெல் பேனாக்கள் (Gel pens) மற்றும் நவீன பிளாஸ்டிக் பேனாக்கள் பயன்பாட்டுக்கு வந்தன.

*தற்போது (21-ஆம் நூற்றாண்டு): ஸ்டைலஸ் (Stylus) மற்றும் டிஜிட்டல் பேனாக்கள் பயன்பாட்டில் உள்ளன.

பண்டைய காலத்தில் எலும்புகள், மூங்கில் மற்றும் இறகுகள் மூலம் எழுதப்பட்ட நிலை மாறி, இன்று தொழில்நுட்பம் வளர்ந்து டிஜிட்டல் திரையில் எழுதும் வரை பேனாக்கள் பரிணாம வளர்ச்சி அடைந்துள்ளன.

என்னிடம் ஒரு மரத்திலான படு குண்டான பேனா ஒன்று உள்ளது. ஆனால் அதற்கு இங்க் லேசாக கிடைப்பதில்லை. ஒருமுறை அதை சட்டை பையில் வைத்து நடந்தேன். எதிர்பட்டவர்கள் எல்லோரும் என்னை ஒரு மாதிரி பார்த்துக்கொண்டு போனார்கள்.

இதையும் படியுங்கள்:
விஞ்ஞானிகளுக்கே சவால் விடும் 'டூரின் மறைச்சீலை': அந்த உருவம் எப்படி வந்தது?
journey-of-pens

அதில் ஒருவர் தன் நண்பனிடம் 'போறார் பார் பேனா பட்டேக்கர் என்று சொல்லி சிரித்தான். நான் இந்தி நடிகர் நானா பட்டேக்கர் ஜாடையில் இருந்தேனோ என்னவோ. எப்படியோ வாளை விட கூர்மையானது பேனாவாக்கும். இதற்கு ஆங்கிலத்தில் ஒரு பழமொழியே உண்டு. Pen is mightier than the sword. Or Pen is mightier than the gun.

அந்த காலத்தில் ஒருவரை ஒருவர் பார்க்காமலேயே நட்பு கொண்டிருப்பவர்களை பேனா நண்பர்கள் என்று கூறுமளவுக்கு பெருமை வாய்ந்ததாக இருந்தது பேனா.

logo
Kalki Online
kalkionline.com