காஞ்சிப் பட்டா? சிறுமுகைப் பட்டா? பட்டுக்கடையில் ஏமாறாமல் சரியான சேலையைத் தேர்ந்தெடுப்பது எப்படி?

பாரம்பரிய கம்பீரத்திற்கும், நாள் முழுவதும் அணியும் இலகுவான வசதிக்கும் இடையிலான சரியான ஒப்பீடு.
பட்டு நெசவு - Handloom Silk Tamil Nadu
பட்டு நெசவு - Handloom Silk Tamil Nadu
இந்திராணி தங்கவேல்

தஞ்சாவூரைச் சேர்ந்த இந்திராணி தங்கவேல், மங்கையர் மலரில் வெளியான முதல் கட்டுரை மூலம் எழுத்துப் பயணத்தைத் தொடங்கியவர், இன்று கல்கி ஆன்லைனில் தொடர்ந்து எழுதி வருகிறார். அருமையான சிறுகதைகளும் பயனுள்ள பல கட்டுரைகளும் எழுத வல்லவர்.

Updated on: 

சிறுமுகை  மற்றும் காஞ்சிபுரம் பட்டுச் சேலைகளுக்கு இடையே தயாரிப்பு முறையிலும், தோற்றத்திலும், கலாச்சார மதிப்புகளிலும் பல முக்கிய ஒற்றுமைகள் இருப்பதை நாம் அறிவோம் . அதுபோல் சிறுமுகை மற்றும் காஞ்சிபுரம் ஆகிய இரண்டுமே தமிழகத்தின் உயர்தரப் பட்டு நெசவுக்குப் புகழ்பெற்றவை என்றாலும், அவற்றின் தயாரிப்பு முறை, எடை, ஜரிகை பயன்பாடு மற்றும் நெசவுத் தொழில்நுட்பத்தில் சில முக்கிய ஒற்றுமைகள் இருப்பதுபோல் சில நுண்ணிய வேறுபாடுகளும் உள்ளன. அவற்றின் ஒற்றுமை வேற்றுமைகளைப் பற்றி இப்பதிவில் காண்போம்!

​அசல் மல்பெரி பட்டு நூல்கள்:

​இரண்டு வகைச் சேலைகளிலுமே இயற்கை முறையில் உற்பத்தி செய்யப்படும் உயர்தர அசல் மல்பரி பட்டு (Mulberry Silk) நூல்களே பயன்படுத்தப்படுகின்றன. இதனால் இரண்டு சேலைகளுமே அசல் பட்டுக்கே உரிய மென்மையையும், இயற்கை பளபளப்பையும் கொண்டிருக்கின்றன.

​ கைத்தறி நெசவு மரபு:

​இரண்டுமே தலைமுறை தலைமுறையாகக் கைத்தறி நெசவாளர்களின் கைகளால் நெய்யப்படும் பாரம்பரியக் கைவினைப் பொருட்கள் (Handlooms) ஆகும். இயந்திரங்களின் உதவியின்றி, நெசவாளர்களின் நுணுக்கமான உழைப்பில் இவை உருவாக்கப் படுகின்றன.

இதையும் படியுங்கள்:
400 ஆண்டு கால பாரம்பரியம்: காஞ்சிபுரம் பட்டு சேலையின் உண்மையான ரகசியம் என்ன?
பட்டு நெசவு - Handloom Silk Tamil Nadu

சுத்தமான தங்கம் மற்றும் வெள்ளி ஜரிகை:

​இரண்டு வகைப் பட்டுச் சேலைகளின் முந்தி (Pallu) மற்றும் பார்டர்களிலும் உயர்தரத் தங்கம் மற்றும் வெள்ளி தோய்க்கப்பட்ட ஜரிகை நூல்கள் (Pure Silk Zari) பயன்படுத்தப்படுகின்றன. இது சேலைகளுக்கு கம்பீரமான தோற்றத்தைத் தருகிறது.

​பட்டு வாரியத்தின் Silk Mark அங்கீகாரம்:

​இரண்டுமே இந்திய மத்திய பட்டு வாரியத்தின் (Central Silk Board of India) "Silk Mark" சான்றிதழ் பெறத் தகுதி வாய்ந்த அசல் பட்டு நெசவுகளாகும்.

​ பாரம்பரிய மோட்டிஃப்கள் & வடிவங்கள்:

​இரண்டு சேலைகளிலுமே தமிழகக் கலாச்சாரத்தைப் பிரதிபலிக்கும் மயில், கிளி, அன்னப்பறவை, மாங்காய், தாமரை மற்றும் கோயில் கோபுர வடிவங்கள் (Temple Borders) போன்ற பாரம்பரிய டிசைன்கள் முதன்மையாக நெய்யப்படுகின்றன.

​சுபகாரியங்களுக்கான முதன்மைத் தேர்வு:

​திருமணங்கள், கோயில்கள், பண்டிகைகள் மற்றும் சிறப்பு விசேஷங்களின் போது பெண்களால் அணியப்படும் மிக உயரிய பாரம்பரிய ஆடைகளாக இவை இரண்டுமே கருதப்படுகின்றன.

​சுருக்கமாகக் கூறின், எடையில் சிறுமுகை லேசாகவும், காஞ்சிபுரம் கனமாகவும் இருந்தாலும், அசல் பட்டின் தரம், ஜரிகை பயன்பாடு மற்றும் கைத்தறி வேலைப்பாடுகளில் இவை இரண்டுமே இணையற்ற ஒற்றுமையைக் கொண்டுள்ளன.

வேறுபாடுகள்: 

எவ்வளவு ஒற்றுமை இருந்தாலும் எல்லாவற்றிலும் சிற்சில வேறுபாடுகள் இருக்கவே செய்யும். அந்த நுண்ணிய வேறுபாடுகள் பற்றி..

நீண்ட நாட்கள் காஞ்சி பட்டையே உடுத்திவிட்டு திடீரென்று சிறுமுகை பட்டை பார்த்து வாங்கும் பொழுது இரண்டிற்கும் உள்ள வித்தியாசங்களை எளிதில் அடையாளம் காண முடியும். அதில் உள்ளது இதில் என்ன இல்லை என்பதைத் தான் கண்கள் தேடும்.  அப்படி தேடிய பொழுது கண்டுபிடிக்கப்பட்ட அனுபவக் குறிப்புகள்தான் இது.

பட்டு நெசவு - Handloom Silk Tamil Nadu
பட்டு நெசவு - Handloom Silk Tamil Nadu

நெசவு முறை: 

சிறுமுகைப்பட்டு சேவையின் நெசவு முறையில் பெரும்பாலும் ஒற்றை நூல் அல்லது இரட்டை நூல் நெசவு முறை பயன்படுத்தப்படுகிறது.

காஞ்சிபுரம் பட்டு சேலையில் கோர்வை மற்றும் முந்தி இன்டர் லாக்கிங் என்ற பாரம்பரிய முப்பரிமாண நெசவு முறைகள் உடல் பார்டர் மற்றும் முந்தி தனித்தனியாக நெய்யப்பட்டு இணைக்கப்படுகின்றது. 

எடை:

சிறுமுகை பட்டு ஒப்பீட்டு அளவில் லேசான எடை கொண்டது. அணிவதற்கும் பராமரிப்பதற்கும் மிகவும் சுலபமாக இருக்கும். 

காஞ்சி பட்டு அதிக எடை கொண்டது முறுக்கேற்றப்பட்ட தடிமனான பட்டு நூல்கள் பயன்படுத்தப்படுவதால் சேலை கனமாக இருக்கும்.

இதையும் படியுங்கள்:
400 ஆண்டு கால பாரம்பரியம்: காஞ்சிபுரம் பட்டு சேலையின் உண்மையான ரகசியம் என்ன?
பட்டு நெசவு - Handloom Silk Tamil Nadu

பார்டர் இணைப்பு: 

சிறுமுகை பட்டில் உடலும் பார்டரும் சீராக ஒரே கோர்வையாக நெய்யப்படுவதால் பார்டர் பிரியும் வாய்ப்பு குறைவு.

காஞ்சி பட்டு கோர்வை முறையில் இணைக்கப்படுவதால் உடல் பகுதிக்கும் பார்டருக்கும் இடையே நுணுக்கமான இணைப்புக் கோடு இருப்பது பளிச்சென்று தெளிவாகத் தெரியும்.

ஜரிகை மற்றும் வேலைப்பாடு:

சிறுமுகைப்பட்டில் மலிவான ஜரிகை மற்றும் நவீன ஜாக்கார்ட் டிசைன்கள் மென்மையான மோட்டிஃப்கள் அதிகம் இருக்கும்.

காஞ்சிப்பட்டில் விலை ஏற ஏற தூய தங்கம் மற்றும் வெள்ளி தோய்க்கப்பட்ட தடிமனான ஜரிகைப் பட்டைகள் ,கம்பீரமான கோயில் கோபுரங்கள் மற்றும் புராண வடிவங்கள் பிரதானமாக இருக்கும்.

விலை வரம்பு: 

சிறுமுகை பட்டில் பட்ஜெட்டுக்கு ஏற்ற விலை முதல் உயர் ரகம் வரை கிடைக்கும். தினசரி விசேஷங்களுக்கும் ஏற்றது. 

காஞ்சி பட்டு பிரீமியம் மற்றும் அதிக விலை கொண்டது .பெரும்பாலும் திருமணங்கள் மற்றும் பாரம்பரிய பெரும் நிகழ்வுகளுக்காக வாங்கப்படுகிறது.

எந்தச் சேலையை எப்போது தேர்ந்தெடுக்கலாம் என்று யோசிக்கிறீர்களா?

சிறுமுகை பட்டு: நீண்ட நேரம் வசதியாக அணிந்திருக்க வேண்டும், எடை குறைவாகவும் அதேசமயம் கம்பீரமான பளபளப்போடும் இருக்க வேண்டும் என நினைப் பவர்களுக்குச் சிறுமுகை பட்டு சிறந்த தேர்வாகும்.

காஞ்சிபுரம் பட்டு: பாரம்பரிய கம்பீரம், அதிக ஆயுள் மற்றும் தலைமுறை கடந்து பாதுகாக்கும் சொத்தாக இருக்கவேண்டும் என விரும்பும் திருமண சுபகாரியங்களுக்குக் காஞ்சிபுரம் பட்டு முதன்மையான தேர்வாகும். அதற்கு தகுந்தாற் போல் புடவையை தேர்வு செய்து வாங்குவது நம் பொறுப்பு.

இதைப் படிப்பதால் இரண்டு வகை பட்டின் ஒற்றுமை வேற்றுமைகளை தெரிந்துகொண்டு குழப்பமில்லாமல் விலைக்கு ஏற்ப பட்டினை தேர்ந்தெடுக்கலாம்.

இதையும் படியுங்கள்:
நம்ப முடியாத தெய்யம் சடங்குகள்: முகமூடிக்கு பின்னால் நடக்கும் அந்த ஆன்மிக மாற்றம் என்ன?
பட்டு நெசவு - Handloom Silk Tamil Nadu