

திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் தாலுகா காருக்குறிச்சி கிராமத்தில் பாரம்பரியமான தரமான மண்பானைகளுக்கு பெயர் பெற்ற ஊர் ஆகும். இங்கு தயாரிக்கப்படும் மண்பாண்டங்கள் இயற்கை முறையில் குளிரூட்டப்பட்ட நீரை வழங்குவதோடு உடல் ஆரோக்கியத்திற்கும் உகந்ததாக உள்ளது.
இதில் சேமிக்கப்படும் தண்ணீர் பிரிட்ஜ் தண்ணீருக்கு இணையாக தொண்டைக்கு பாதிப்பு ஏற்படாதவாறு இதமான குளிர்ச்சியை தருகிறது. ரசாயனம் எதுவும் இல்லை இயற்கையான களிமண்ணை கொண்டு கைவினை கலைஞர்கள் நேர்த்தியாக தயாரித்து வருகிறார்கள். தண்ணீர் குவளைகள் மண் குடங்கள் சமையலுக்கு பயன்படும் மண்பானைகள் மற்றும் பூந்தொட்டிகள் அலங்கார பொருட்கள கிடைக்கின்றன
இந்த கிராமத்தில் potters cooperative Society என்ற கூட்டுறவு சங்கம் செயல்பட்டு வருகிறது. இதன் மூலம் பல தலைமுறைகளாக மண்பாண்ட தொழில் இந்த கலையை சிறப்பாக செய்து வருகிறார்கள். இங்கு மொத்தமாகவும் சில்லறையாகவும் மண்பாண்டங்கள் கிடைக்கின்றன. இங்கு தயாரிக்கப்படும் மண் பாண்டங்கள் சர்வதேச சந்தைக்கு கொண்டு செல்லப்படுவதால் அமேசான் இ-காமர்ஸ் வலைத்தளம் மூலம் ஆர்டர் செய்து பெறமுடியும்.
தமிழகத்தில் வழக்கமாக மார்ச் முதல் மே மாதம் முடியும் கோடை காலமாக கருதப்படுகிறது இதிலிருந்து தப்பிக்க மக்கள் மண்பானைகளை விரும்பி வாங்கி செல்கிறார்கள்.
இங்கு தயாரிக்கப்படும் ஏழைகளின் குளிர்சாதன பெட்டிக்கு அதிக அளவில் மவுசு உள்ளது. 30 ஆண்டுகளுக்கு முன்பு வரை சமையலில் மண் பாத்திரங்களை பயன்படுத்தி வந்தனர்.
காலப்போக்கில் இவை அனைத்தும் மறைந்துவிட்டது. கோடை காலத்தில் மட்டும் மண்பானை விற்பனை அதிகரித்து வருகிறது. இங்கு தயாரிக்கப்படும் மண் பானைகள் தமிழகம் கேரளா ஆந்திரா கர்நாடகா உள்ளிட்ட வெளி மாநிலம் மற்றும்
மற்றும் வளைகுடா நாடுகள் மலேசியா சிங்கப்பூர் ஜெர்மனி அமெரிக்கா போன்றநாடுகளிலும் அதிகமாக விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
வெளிநாடுகளில் இருந்து அமேசான் மூலமும் மற்றும் இ-காமர்ஸ் மூலமும் ஆர்டர் பெறப்பட்டு வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. இங்கு தயாரிக்கப்படும் அகல் விளக்குகள் தேனீர் கோப்பைகள் தண்ணீர் பாட்டில்கள் அலங்கார பூந்தொட்டிகள் சாம்பிராணி கிண்ணம் பொங்கல் பானை சூப் கிண்ணங்கள் பிரியாணி பானைகள் என வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.
இங்கு சுமார் 150 ரூபாய் முதல் 600 ரூபாய் வரை மண்பானைகள் மண்குடங்கள் தயாரிக்கப்படுகிறது. மூடி வைக்கப்படும் குவளைகள் ஐந்து லிட்டர் 8 லிட்டர் 10 லிட்டர் 25 லிட்டர் என கொள்ளளவுகளில் கிடைக்கிறது. இவை உடலுக்கு நன்மை பயக்கிறது. மண்பாண்டங்கள் செய்வதற்கு தாமிரபரணி நதிக்கரையில் உள்ள கரம்பை மண்ணை பயன்படுத்திகிறார்கள்.
முதல் நாள் கரம்பை மண்ணை நன்றாக காயவைத்து தூசி தட்டி வைத்துக்கொள்வார்கள். பின்னர் அதனை ஊறவைத்து தூசி தட்டி கரம்பை மண்ணை தனியாக போட்டு அதன் மீது தண்ணீர் ஊற்றி ஈரப்பதமாக வைக்கவேண்டும். நான்கு மணிநேரம் ஈரப்பதம் இருக்க வேண்டும். இரண்டாம் நாள் கரம்பை மண்ணை எந்திரத்தில் போட்டு அரைத்து அதை தனியாக வைத்துக்கொள்ள வேண்டும்
பின்னர் பானைகளை வடிவமைத்து அதனை காயவைப்பார்கள். அதன் பின்னர் பானைகளை நெருப்பு மூலம் சுட்டு எடுத்து அடுக்கி வைப்பார்கள். வெளிநாடுகளுக்கு அனுப்பும்போது அட்டைப்பெட்டியில் வைக்கோலுடன் பாதுகாப்பாக பேக் செய்து அதனை லாரி மூலம் தூத்துக்குடி துறைமுகத்திற்கு அனுப்பி வைத்து அங்கிருந்து கப்பல்களில் வெளிநாடு செல்கிறது.
பொதுமக்கள் மண்பானைகளில் குழாய் வைத்து கேட்டால் அதனையும் செய்து கொடுக்கிறார்கள்.
தாமிரபரணி நதிக்கரையில் கிடைக்கும் கரம்பை மண்ணைத்தான் இந்த தொழிலுக்கு பயன்படுத்து கிறார்கள். இந்த தொழிலில் நூற்றுக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். திருக்கார்த்திகை சமயத்தில் அகல் விளக்குகள் சரவிளக்குகள் பெரிய விளக்குகள் என பலவகையில் செய்யப்பட்ட விளக்குகள் தரமாக கிடைக்கும்.
நவராத்திரி சமயத்தில் மண்ணால் செய்யப்பட்ட பொம்மைகள் விநாயகர் சிலைகள் சாமி சிலைகள் கொலு பொம்மைகள் என அனைத்தும் வண்ண கலரில் கிடைக்கும்.
பொங்கல் சமயத்தில் பொங்கல் பானைகள் விதவிதமாகவும் வண்ணக் கலரிலும் கிடைக்கும். பொங்கல் கார்த்திகை நவராத்திரி இந்த நாட்களில் அதிக அளவில் மண்பாண்டங்கள் கொலு பொம்மைகள் அகல் விளக்குகள் முதல் என அதிக அளவில் செய்யப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. என்னதான் 21 ஆம் நூற்றாண்டில் இருந்தாலும் பழைய தொழிலுக்கு மவுசு இருக்கத்தான் செய்கிறது.
இந்தத் தொகுப்பின் மூலம் கோடை வெப்பத்திலிருந்து உடலைக் காக்கும் இயற்கை குளிரூட்டியான மண்பானைகளைத் தேர்ந்தெடுக்கும் தெளிவையும், ரசாயனமில்லாத பாரம்பரிய சமையல் பாத்திரங்கள் தரும் ஆரோக்கிய வாழ்வியல் மாற்றத்தையும் நீங்கள் முழுமையாக அறிந்துகொள்ள முடியும்.