நாக்கர்-அப்பர்ஸ் (Knocker-Uppers) எனப்படும் 'அலார மனிதர்கள்'!யார் இவர்கள்?

Knocker-Uppers
Knocker-Uppers
Published on

நம்மில் பலர் அதிகாலையில் எழுந்திருக்க ஸ்மார்ட் போனின் அலாரத்தை தான் நம்பியிருக்கிறோம். ஸ்மார்ட் போன் வருகைக்கு முன்பு கிராமங்களில், சேவல்களை தான் நம்பித் தூங்கினார்கள்.

ரம்ஜான் மாதங்களில் இஸ்லாமியர்கள் அதிகாலையில் எழுந்து நோன்புகளைத் தொடங்குவதற்கு, ரம்ஜான் டிரம்மர்களை, சேஹர் குவான்களை தான் நம்பியிருந்தார்கள்.

விக்டோரியா மகாராணி அவர்கள் தினமும் காலையில் தனது ஜன்னலுக்கு அடியில் பேக்பைப் இசை இசைக்கப்படுவதை தான் நம்பியிருந்தார்.

20 ஆம் நூற்றாண்டுகளுக்கு முன்பு அலாரம் கடிகாரங்கள் அரிதாகவே இருந்தன. அப்போது அதிகாலையில் மக்கள் எப்படி எழுந்தார்கள்?

மனித அலாரங்களை நம்பியிருந்தார்கள் என்றால், உங்களால் நம்ப முடிகிறதா? மழை, பனி, உறைபனி, வெப்பம் என எந்த வானிலையிலும் விழித்தெழ; அன்பின் அழைப்பிற்காக நம்பி இருந்த, மக்களின் நம்பிக்கை மனிதர்களாக, மனித அலாரங்களாக, அவர்களின் தனித்துவ சேவை மனதை கொஞ்சம் வருடிப் பார்ப்போமா?

நெதர்லாந்து, பிரிட்டன், அயர்லாந்து நாட்டில் நாக்கர்-அப் அல்லது நாக்கர்-அப்பர் (Knocker-Uppers) என்ற வேலை பிரபலமாக இருந்தது.1800-களின் நடுப்பகுதியில் தொழில் துறை புரட்சி முழு வீச்சில் நடந்தது. கப்பல் கட்டுதல், பொறியியல், ஆலைகள், மதுபான உற்பத்தி நிலையங்கள், அச்சுப்பொறிகள் என தொழிற்சாலைகள் பல்கிப்பெருகின.

இதில் பணிப்புரியும் தொழிலாளர்கள் ஒவ்வொரு நாளும் சரியான நேரத்தில் வேலைக்குச் செல்ல வேண்டியிருந்தது. புதிய வேலை என்பதால் தாமதமாக வேலைக்குச் செல்ல முடியாது. ஒவ்வொரு காலையிலும் சரியான நேரத்தில் தங்கள் வீட்டிற்கு வந்து, தங்களை எழுப்ப யாராவது முன் வந்தால், அவர்களுக்கு பணம் கொடுக்கத் தயாராக இருந்தனர். இந்தச் சூழ்நிலையில் தான் நாக்கர்-அப்பர்கள் தொழில் பிறந்தது!

நாக்கர்-அப்பர்கள் என்றால் என்ன?

நாக்கர்-அப்பர்கள் என்றால், அடிப்படையில் ஒரு மனித அலாரம் கடிகாரம். ஒரு நாக்கர்-அப்பர் ஜன்னலுக்கு வெளியே, கதவுகள் மற்றும் ஜன்னல்களில் தட்டுவதற்கு, தூங்குபவர்களை தட்டி எழுப்பி விடும் வேலையை திறம்படச் செய்பவர்கள்.

எழுச்சி கொள்ளும் சிலேடுகள் சுரங்கத் தொழிலாளர்கள், தொழிற்சாலை தொழிலாளர்கள் தங்கள் வேலை நேரத்தை, தங்கள் வீடுகளுக்கு வெளியே சுண்ணாம்புக் கற்களால் எழுதி வைத்திருப்பர். இதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பே நாக்கர்-அப்பர்கள் எழுப்பி விடுவார்கள். இதனை எழுச்சி சிலேடுகள் என்று அழைப்பர்.

திருமதி வாட்டர்ஸ்

திருமதி வாட்டர்ஸ் தனது கடையை நடத்துவதற்கு முன்பு ஒவ்வொரு காலையிலும் 95 வீடுகளை தட்டி எழுப்பினார்.

'நாக்கர்-அப்பர்களின் ராணி' மேரி ஸ்மித் லண்டனில், நாக்கர்-அப்பர்களின் ராணியாக இருந்தார். இவர் 1930-களில் லண்டனில் ஈஸ்ட் எண்ட்டில் பணிப்புரிந்தார்.

இதையும் படியுங்கள்:
Sleep - இந்த படத்தை பார்த்த பிறகு தூங்கவே பயப்படுவீங்க!
Knocker-Uppers

தினமும் காலை மற்றும் ஞாயிற்றுக் கிழமை காலை மூன்று மணிக்கு எழுந்து உள்ளுர் தொழிலாளர்களை தட்டிச் செல்வார். இவர் இந்த வேலையை ஒரு குடும்ப பாரம்பரியமாக மாற்றினார். இவரது மகள் மோலி மூரும் ஒரு சிறந்த மேல் நிலைப் பள்ளி மாணவியாக இருந்து கொண்டே இப்பணியைச் செய்தார்.

2003 ஆம் ஆண்டு ‘Mary Smith’ என்ற பெயரில் குழந்தைகள் புத்தகம் வெளியிட்டு, ஸ்மித்தின் தனித்துவமான வாழ்க்கையை கொண்டாடி மகிழ்ந்தனர்.

மலிவான அமெரிக்க கடிகாரம்!

நாக்கர்-அப்பர்கள் அனைவரும் தங்கள் வேலைகளில் தனித்துவமாகவும், திறமையானவர்களாகவும், அதிகம் வருவாய் ஈட்டுபவர்களாகவும் தட்டி எழுப்பி வந்தார்கள். அலாரம் கடிகாரங்கள் சந்தைக்கு வந்ததும், நாக்கர்-அப்பர்களின் வாழ்வை சூது கவ்வியது. தங்கள் வாழ்வாதாரத்தை இழந்தனர்.

அலாரம் கடிகாரங்கள் மலிவாகவும், நம்பகமானதாகவும் வலம் வரத் தொடங்கின. மனித அலாரம் தனது சத்தத்தை நிறுத்திக்கொண்டது.

இதையும் படியுங்கள்:
பசலைக்கீரை சாகுபடியில் உரங்களின் அவசியம்!
Knocker-Uppers

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com