இத்தாலியின் பைசா கோபுரமும் உலகின் மிகப்பெரிய துறைமுகமும்!

World’s largest port and Leaning Tower
World’s largest port and Leaning Tower of Pisa
Published on

இத்தாலியின் பைசா கோபுரம்

இத்தாலியில் உள்ள பைசா நகரத்தில் உள்ள சாய்ந்த கோபுரம் ஒரு உலக அதிசயமாக பார்க்கப்படுகிறது. இது தேவாலயத்தின் மணிக் கோபுரமாக முதன்முதலில் கட்டப்பட்டது. Bell Tower என ஆரம்பத்தில் அழைக்கப்பட்டது. இதன் அடித்தளம் குறைந்த ஆழத்தில் அதாவது இதன் அடித்தளம் வெறும் மூன்று மீட்டர் ஆழமே உள்ளது; அதில் தான் இந்த சாய்ந்த கோபுரம் அமைந்துள்ளது என்றால் வியப்பாக உள்ளது. 

மூன்று மீட்டர் ஆழத்தில் வெறும் களிமண் படிமங்கள் உள்ளதால் இந்த கோபுரம் சாய்ந்த நிலையில் காணப்படுகிறது.

1173 இல் கட்டப்பட்ட போதே இது சாயத் தொடங்கியது. கோபுரத்தில் உயரம் 55 மீட்டர். இதன் எடை 16 ஆயிரம் டன் உள்ளது. 297 படிக்கட்டுகள் உள்ளன. அப்போதே இந்த கோபுரம் 10% சரியத் தொடங்கியது. 1964 இல் இத்தாலிய அரசு இதனை பாதுகாக்கும் படி உத்தரவிட்டது.

1990 இல் பாதுகாப்பு காரணமாக இது மூடப்பட்டது. 2001 இல் மீண்டும் பக்கவாட்டில் மண்ணை எடுத்து சரியாமல் இருக்குமாறு சரி செய்யப்பட்டு மீண்டும் திறக்கப்பட்டது. 1173 முதல் இரண்டு தளம் அமைக்கும் போது எந்த விபரீதமும் நடக்கவில்லை. 1178 ல் மூன்றாவது தளம் அமைக்கும் போது சரிய தொடங்கியது. இந்த பூமிக்கு அடியில் களிமண் அதிகமாக காணப்படுகிறது. அந்தக் களிமண் பதம் இறுகும் வரை காத்திருந்தார்கள்.

கிட்டத்தட்ட நூறு ஆண்டுகள் காத்திருந்தார்கள். அந்த களிமண் இருக்குவதற்காக 200 வருட போராட்டங்களுக்கு பின் இந்த டவர் மீண்டும் சரி செய்யப்பட்டு திறக்கப்பட்டது. 800 டன் சரியக்கூடிய நிலையில் இருந்ததை வல்லுநர்கள் எதிர்ப்புறம் சமன் செய்து இதை சரி செய்தார்கள். ஒரு வழியாக 1987 ஆம் ஆண்டு யுனெஸ்கோ இதனை பாரம்பரிய சின்னமாக அறிவித்தது.

இதையும் படியுங்கள்:
ஆசியாவின் மிகப்பெரிய இந்து கோவில்: அபுதாபியில் ஒரு கட்டிடக்கலை அற்புதம்!
World’s largest port and Leaning Tower

1990 இல் 5.5 டிகிரி சரிந்த நிலையில் மீண்டும் மூடப்பட்டது.1990 முதல் பத்து ஆண்டுகள் வரை பராமரிப்புக்காக இந்த டவர் மூடப்பட்டு இருந்தது. 

மீண்டும் 2001ஆம் ஆண்டில் இதன் சாய்வு தன்மையை 3.99 டிகிரியாக குறைத்தார்கள். 2001 ஆம் ஆண்டு முதல் இந்த சாய்ந்த கோபுரம் பொதுமக்கள் பார்வைக்காக நிரந்தரமாக திறந்து வைக்கப்பட்டது. 

இந்த உலக அதிசயம் பல சங்கடங்களை கடந்து இன்றும்  வரலாற்றில் இடம் பிடித்துள்ளது. வெறும் 3 மீட்டர் ஆழத்தில் சுமார் 55 மீட்டர் உயரமுள்ள கோபுரத்தை கட்டி இன்றைய தேதி வரையில் பாதுகாத்து வருவது பெருமைக்குரிய விஷயம் ஆகும்.

உலகிலேயே மிகப்பெரிய துறைமுகம்

இந்தியாவில் அதுவும் மகாராஷ்டிரா மாநிலத்தில் அமைய இருப்பது நாம் அனைவரும் பெருமைப்பட வேண்டிய விஷயமாகும். இது மகாராஷ்டிரா மாநிலத்தில் பால்கார் மாவட்டத்தில் அரபிக் கடலில் கட்டப்பட்டு வரும் உலகின் மிகப்பெரிய துறைமுகம் ஆகும். இந்திய கொள்கலன் வர்த்தகத்தை இரு மடங்காக உயர்த்தும்.

சுமார் 80 ஆயிரம் கோடி செலவில் ஜவஹர்லால் நேரு துறைமுக ஆணையம் மற்றும் கடல்சார் வாரியம் இணைந்து இந்தத் திட்டத்தை நிறைவேற்றி வருகிறது. 2024 ஆம் ஆண்டு மோடி இதனை துவக்கி வைத்தார். முதல் கட்டப் பணிகள் 2029 ஆம் ஆண்டும் இரண்டாம் கட்ட பணிகள் 2037 ஆம் ஆண்டும் செயல்பாட்டுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம் உலகத்தில் உள்ள அனைத்து பெரிய கப்பல்களும் இங்கு சரக்குகள் கையாளும் விதத்தில் அமைக்கப்பட்டு வருகிறது. மகாராஷ்டிரா பால்கர் மாவட்டத்தில் தகாணு என்ற இடத்தில் இதில் அமைந்துள்ளது.

இந்தத் துறைமுகம் 23 மில்லியன் சரக்குகளை கையாளும் விதத்தில் அமைய உள்ளது. இதன் இயற்கை வரம்புகளை உலகில் வேறு எங்கும் காண முடியாது. ஒவ்வொன்றும் சுமார் 1000 மீட்டர் நீளம் 24000 அலகுகளைக் கொண்டது. உலகின் மிகப்பெரிய கப்பல்களை நிறுத்தும் அளவுக்கு மிகப்பெரிய முனையமாக செயல்பட போகிறது.

இதையும் படியுங்கள்:
துபாய் நகரின் பெருமிதம் – புர்ஜ் கலீஃபா - அப்படி என்னதான் சுவாரசியங்கள் இருக்கிறது இங்கே?
World’s largest port and Leaning Tower

இவை தவிர 1560 கோடியில் 218 மீன் வளர்த்திட்டங்களும் 360 கோடியில் தேசிய கப்பல் தொடர்பு மையமும் அமைக்கப்பட்டு வருகிறது. உலகத்தரம் வாய்ந்த கடல் சார் நுழைவு வாயிலை கொண்டுள்ளது. அதிநவீன தொழில்நுட்பத்துடன் பெரிய கப்பல்களையும் அதில் உள்ள சரக்குகளையும் வர்த்தக நோக்கில் கையாளும் விதத்தில் அமைந்து வருவது பாராட்டத்தக்க செயலாகும். உலகளாவிய வர்த்தகத்தில் இந்தியா முக்கிய பங்கு ஆற்றும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com