
ஆசியாவிலேயே மிகப்பெரிய இந்து கோவில் எங்கு உள்ளது என்றால் அனைவரும் ஆச்சரியப்படுவீர்கள். ஆம் ஒரு இஸ்லாமிய நாட்டில் அபுதாபியில் இந்த கோவில் பிரம்மாண்டமாக கட்டப்பட்டுள்ளது.
சுமார் 700 கோடி செலவில் ராஜஸ்தானை சேர்ந்த 2000 சிற்பிகள் இரவு பகலாக வேலை பார்த்து கலை நயத்துடன் இந்த கோவிலை உருவாக்கி இருக்கிறார்கள்.
அபுதாபி அரசு அரபு நாட்டில் வேலை பார்க்கும் ஏராளமான இந்துக்கள் சார்பாகவும் மோடி அவர்கள் வேண்டுகோளுக்கு இணங்க அபுதாபி இளவரசர் 27 ஏக்க நிலத்தை தானமாக வழங்கிய இடத்தில் இந்த கோவில் பிரம்மாண்டமாக கட்டப்பட்டுள்ளது.
2018 இல் அனுமதி வழங்கப்பட்டு 2019-ல் கட்டுமான பணிகள் தொடங்கப்பட்டது. இந்தக் கோவிலை பாப்ஸ் அமைப்பு சார்ந்த சுவாமி நாராயணசன்ஸ்தா என்பவரால் கடும் முயற்சியின் பலனாக இந்த கோவில் கட்டப்பட்டுள்ளது.
உலகம் முழுவதும் உள்ள தன்னார்வலர்கள் நன்கொடையாளர்கள் என பலராலும் நிதி திரட்டப்பட்டு 700 கோடி செலவில் இந்த கோவில் பிரம்மாண்டமாக கட்டப்பட்டுள்ளது. அபுதாபியில் அபு முறைக்கா என்ற இடத்தில் 262 அடி நீளம் 180 அடி அகலம் 108 அடி உயரம் இந்த அமைப்பில் 27 ஏக்கர் இடத்தில் கட்டப்பட்டுள்ளது. ராஜஸ்தான் மார்பிள் இத்தாலி மார்பிள் மற்றும் கருப்பு வெள்ளை மற்றும் பிங்க் நிற கற்களால் கொண்டு கட்டப்பட்டுள்ளது.
கட்டிடக்கலைக்கு சிறந்த எடுத்துக்காட்டாக விளங்குகிறது ஒவ்வொரு தூணிலும் சுவர்களிலும் எண்ணற்ற சிற்பங்கள் கலைநயம் மிக்க வண்ண ஓவியங்கள் என எங்கு பார்த்தாலும் கண்ணை பறிக்கிறது. அரபு அமீரகத்தில் ஏழு நாடுகள் உள்ளதால் ஏழு கோபுரங்கள் கலைநயத்துடன் அமைக்கப் பட்டுள்ளது. இந்தக்கோவில் அரங்கத்தில் ஒரே நேரத்தில் பத்தாயிரம் நபர்கள் தங்க முடியும்.
ஒரே நேரத்தில் 3000 பக்தர்கள் தரிசனம் செய்யக்கூடிய அளவில் மிகப் பிரம்மாண்டமாக அமைந்துள்ளது . இதன் விசேஷம் என்னவென்றால் கட்டடத்தின் தலைமை பொறியாளர் ஒரு கத்தோலிக்க கிறிஸ்தவர். திட்ட மேலாளர் ஒரு சீக்கியர்.
கோவிலை வடிவமைத்தவர் புத்த மதத்தைச் சார்ந்தவர்.
கட்டுமான இயக்குனர் ஜைன மதத்தை சார்ந்தவர். என அனைவரும் கூட்டாக சேர்ந்து எந்த பாகுபாடும் இல்லாமல் இந்தக் கோவிலை உருவாக்கி இருக்கிறார்கள். இல்லை செதுக்கி இருக்கிறார்கள். எந்த இடத்திலும் இரும்புகள் கம்பிகள் பயன்படுத்தபடவில்லை. கோவில் பாதிக்கப்படாமல் இருப்பதற்காக சுமார் 300 சென்சார் கருவிகள் பூமிக்கு அடியில் புதைக்கப் பட்டு உள்ளது. இதனால் கோவில் எந்த வகையிலும் பாதிப்படைய வாய்ப்பு இல்லை. சுவாமி மகாராஜ் தலைமையில் கட்டுமான பணிகள் நடைபெற்றன. கோவிலில் உள்ள மிகப்பெரிய பார்வையாளர் அரங்கம் தியான மையம் கண்காட்சி மையம் குழந்தைகள் விளையாட்டு பகுதி அழகிய தோட்டங்கள் நீர்நிலைப் பகுதி உணவு அரங்கம் கடைகள் என எந்த குறைவும் இல்லாமல் அமைந்துள்ளது. சிலைகள் தூண்கள் சிற்பங்கள் யாவும் இங்கு பாரம்பரிய முறையில் அமைந்துள்ளது சிறப்பானதாகும். அபுதாபியில் இருந்து 40 நிமிடம் துபாயில் இருந்து 1:30 மணி நேரம் மற்றும் அபுதாபி விமான நிலையத்தில் இருந்து 25 நிமிடத்தில் இந்த கோவிலுக்கு செல்லலாம்.
இங்குள்ள சிவன் பிரம்மாண்டமாக அமைக்கப்பட்டுள்ளது. முதல் சன்னதியில் நாராயணர் கோவில் இரண்டாவது சன்னதியில் விஷ்ணு கோவில் மூன்றாவது சன்னதியில் ராமர் சீதை லட்சுமணன் அனுமான் போன்ற சிற்பங்கள் நான்காவது சன்னதியில் சிவன் பார்வதி விநாயகர் முருகன் சிலைகள் ஐந்தாவது சன்னதியில் வெங்கடேஸ்வரர் ஆறாவது சன்னதியில் ஜெகநாதன் பலராமன் ஏழாவது சன்னதியில் சுவாமி ஐயப்பன் 18 படிகளுடன் அழகுற அமைக்கப்பட்டுள்ளது.
இந்த கோவிலில் பிரதமர் மோடி அவர்கள் திறந்து வைத்தார்கள்.
எங்கு பார்த்தாலும் கண்ணை கவரும் நிறத்தில் கோவில்கள் அழகுற அமைந்துள்ளது. ஆசியாவிலேயே மிகப்பெரிய இந்து கோவில் என்று சொன்னால் மிகையாகாது அரபு நாட்டுக்கு செல்பவர்கள் கண்டிப்பாக இந்த கோவிலை பார்வையிட்டு வரவேண்டும்.