பழைய துணிகளை தூக்கி எறியாதீங்க! 5 நிமிடத்தில் அசத்தல் கைவினைப் பொருட்கள் செய்யலாம் வாங்க!

Leftover fabrics and Handicrafts
Leftover fabrics and Handicrafts
Published on

துணி தைக்கும் போது மீதியாக வரும் துண்டுத் துணிகளை வீணாக்காமல், பல பயனுள்ள மற்றும் சுவாரஸ்யமான பொருட்களை உருவாக்கலாம். இதனால் சூழலுக்குப் பாதுகாப்பும், செலவுக் குறைப்பும், புதிய படைப்பாற்றலான பொருட்களும் கிடைக்கும்.

அவற்றின் வகைகள் மற்றும் பயன்பாடுகளை பற்றி பார்க்கலாம்.

1. சிறிய வீட்டுப் பொருட்கள் தயாரிப்பு:

தலையணை / குஷன் கவர் – சிறிய துணிகளை சேர்த்து பாட்டர்ன் வடிவில் தைத்து அழகான கவர்கள் செய்யலாம். மேசைத்துணி / டேபிள் ரன்னர் – வண்ணமயமான துணிகளை ஒன்றோடு ஒன்று இணைத்து அழகான அலங்கார மேசைத் துணி செய்யலாம்.

மூடி (Coasters) & பிளேஸ்மாட் – உணவுப் பொட்டலத்தின் கீழ் வைக்க பயன்படும் சிறிய துணிகள். அழகிய பல வகையான hand kerchief ஆடைக்கு மேச்சாக தைத்துக் கொள்ளலாம். Mobile phone கவர் செய்யலாம்.

2. ஆடை மற்றும் அலங்காரப் பொருட்கள்:

குழந்தைகளுக்கான ஆடைகள் – சிறிய அளவுக்கு தேவையான குழந்தை ஆடைகள் (Frock, Shirt, Shorts) தைக்கலாம். தொப்பிகள் தைக்கலாம். முடி பந்தல் / ஹேர் பேண்ட் – வண்ண மயமான துணி பந்தல்கள், ரிப்பன், ஸ்க்ரஞ்சிகள் உருவாக்கலாம். பைகளுக்கான அலங்காரம் – ஹேண்ட் பேக், ஷாப்பிங் பேக் மீது Patchwork வடிவில் அலங்காரம் செய்யலாம்.

3. கைவினைப் பொருட்கள்:

வித்தியாசமான நிறங்கள், வடிவங்கள் கொண்ட துணிகளை சேர்த்து போர்வை உருவாக்கலாம்.

பொம்மைகள் (Soft Toys) – துண்டுத் துணிகளைப் பயன்படுத்தி சிறிய பொம்மைகள் தைக்கலாம்.

பூக்கள் / வடிவங்கள் – அலங்காரத்திற்கான துணி மலர்கள், இலைகள் வடிவமைத்தல்.

பூ அலங்காரம் (Fabric Flowers) – துணி மலர்கள் செய்து ஹேர் கிளிப், ப்ரோச், பைகள் அலங்கரிக்கலாம்.

Wall Hanging / Fabric Collage – கலை வடிவில் துணிகளை சேர்த்து சுவருக்கு அலங்காரம் செய்யலாம்.

Fabric Keychains – சிறிய துணி வடிவங்களில் அழகான சாவி சங்கிலிகள் செய்யலாம்.

4. சேமிப்பு பைகள்:

நாணயப்பைகள் (Coin Purse) , சிறிய சிப்புப் பைகள், பென்சில் பவுச்கள் போன்றவை செய்யலாம். சேமிப்பு பைகள் காய்கறி, பருப்பு போன்றவற்றை வைத்துக்கொள்ள Fabric Bags உதவும்.

Gift Wrap Bags – பரிசுகளை சுற்றி வைக்கும் துணிப் பைகள் (Eco-friendly Gift Wrap).

Fabric Bookmark – புத்தகப் பக்கங்களில் வைக்கக் கூடிய துணிப் புக் மார்க்.

5. பராமரிப்பு:

உதவி பொருட்கள்: தூசி துடைக்கும் துணி – பருத்தி, லினன் போன்ற துணிகள் வீட்டுத் தூசி துடைக்க உகந்தவை.

சமையலறை துணி – சிறிய துடைப்புகள், பாத்திரம் துடைக்கப் பயன்படும் துணிகள்.

Patchwork Apron – சமையலுக்கான முன் துணி (Apron).

பயிற்சி தையல் – தையல் கற்றுக்கொள்பவர்களுக்கு பயிற்சி துண்டுகளாக உபயோகிக்கலாம்.

இதையும் படியுங்கள்:
உறவுல இதெல்லாம் நடந்தா ஓடிப் போயிடுங்க! உணர்வுபூர்வ சுரண்டலின் 6 ரகசியங்கள்!
Leftover fabrics and Handicrafts

6. மறுசுழற்சி (Upcycling);

விற்பனை: துணிகளை சேர்த்து Patchwork Products உருவாக்கி சந்தையில் விற்கலாம்.

DIY Kits – கைவினைப் பொருட்கள் செய்ய விரும்புவோருக்கு துணி பாக்கெட்டுகள் உருவாக்கி விற்பனை செய்யலாம்.

சிறந்த யோசனை– துணிகளை அப்படியே எரிப்பது அல்லது குப்பையில் போடுவதை தவிர்க்க வேண்டும். இயன்றவரை மீள்பயன்பாடு (Reuse) மற்றும் மறுசுழற்சி (Recycle) வழியில் பயன்படுத்தினால், பணமும் சேமிக்கப்படும், சுற்றுச் சூழலுக்கும் நன்மை தரும்.

இதையும் படியுங்கள்:
வெற்றிக்கான அடித்தளம்: சிறிய விஷயங்களே பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும்!
Leftover fabrics and Handicrafts

மீதித் துணிகள் சிறியது என்றாலும், அவற்றைச் சரியாக பயன்படுத்தினால் பெரும் பயன்களை அளிக்கலாம். படைப்பாற்றலுடன் அணுகினால், வீணாகும் துணிகளை அழகான மற்றும் பயனுள்ள பொருட்களாக மாற்ற முடியும். இது சுற்றுச்சூழலை பாதுகாப்பதோடு, நமக்குள் இருக்கும் கைவினைப் புத்திசாலித்தனத்தையும் வெளிப்படுத்தும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com