ஊசியே தேவையில்ல... வெறும் கையாலயே இப்படி ஒரு அழகா? கண்டிப்பா ஆச்சரியப்படுவீங்க!

மேக்ரேம் கலை மூலம் வீட்டிலேயே அழகிய சுவரலங்காரம் மற்றும் செடி கூடைகள் செய்வது எப்படி? பயனுள்ள கையேடு இதோ.
மேக்ரேம் கலை - Macrame Art
மேக்ரேம் கலை - Macrame Art
கே.எஸ்.கிருஷ்ணவேனி

Iam a graduate from Vaishnav College in the year 1984. My writings were published in Mangayar Malar,Aval Vikadan,Kumudham Sneghethi since 1992 and received many prizes. Now I am writing in Kalki Publications. Cooking, writing, playing Shuttle cock & making fur dolls are my passions.

Updated on: 

மேக்ரேம் கலை (Macrame) என்பது கயிறுகள் மற்றும் நூல்களைக் கொண்டு அலங்கார முடிச்சுகள் போடுவதன் மூலம் அழகிய கலைப் பொருட்களை உருவாக்கும் ஒரு தனித்துவமான பாரம்பரிய கைவினைக் கலையாகும்.

இதில் ஊசிகள் அல்லது தறிகளைப் பயன் படுத்துவதில்லை. அரபு மொழியின் "மக்ராமா" என்ற சொல்லிலிருந்து இந்தப் பெயர் உருவானது. இதற்கு "அலங்கார விளிம்பு" அல்லது "அலங்காரத் துணி" என்று பொருள்.

இந்தக் கலை 13ஆம் நூற்றாண்டில் அரபு நெசவாளர் களிடையே தோன்றியதாகக் கருதப்படுகிறது. பின்னர் கடல் பயணங்களின் போது மாலுமிகள் தங்களுக்குக் கிடைத்த ஓய்வு நேரத்தில் கயிறுகளில் முடிச்சுப் போட்டு பல்வேறு பொருட்களை உருவாக்கி, அவற்றை விற்று இக் கலையைப் பரப்பினர். அரபு நெசவாளர் களாலும் பின்னர் கடற்படை மாலுமிகளாலும் உலகெங்கிலும் இக்கலை பிரபலம் அடைந்தது. தற்போது நவீன வீட்டு அலங்காரத்திலும், சுயதொழிலிலும் இந்த போஹோ(Boho) பாணி கலை வடிவம் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

1) மேக்ரேம் கலைப் பொருட்களின் வகைகள்:

வீட்டு அலங்காரப் பொருட்கள் (Home Decor):

வீட்டின் சுவர்களை அழகாக்குவதற்கு மரக் குச்சிகளில் வண்ணமயமான நூல்களைக்கொண்டு பின்னப்படும் கலைப் பொருட்கள் இவை. சுவர்களில் தொங்கவிடப்படும் மேக்ரேம் கலைப் படைப்புகள், கண்ணாடிகளைச் சுற்றியுள்ள போஹோ வடிவமைப்பு வடிவங்கள் மற்றும் ஜன்னல் திரைகள், சோபாவிற்கு மேல் உள்ள பகுதிகளை பிரத்யேக அழகியல் (aesthetics) கொண்டதாக மாற்ற இவை பயன்படுகின்றன.

செடி வளர்ப்புக் கூடைகள் (Plant Hangers):

வீட்டுத் தாவரங்களை குறைவான இடவசதியிலும் வீட்டின் உள்ளேயும் பால்கனியிலும் செடித் தொட்டிகளை அழகாகத் தொங்கவிட மேக்ரேம் கயிறுகள் அதிகம் பயன்படுகின்றன.

மேக்ரேம் கலை - Macrame Art
மேக்ரேம் கலை - Macrame Art

ஆன்மீக மற்றும் பாரம்பரிய கலைகள்:

தற்போது தமிழகத்தில் மேக்ரேம் நூல்களைப் பயன் படுத்தி விநாயகர் சிலைகள், தோரணங்கள் மற்றும் சுவர்களில் தொங்கவிடும் ஆன்மீக கலைப்பொருட்கள் கைவினைஞர்களால் பிரசித்தி பெற்ற வடிவங்களாகச் செய்யப்படுகின்றன.

லைட்டிங் சாம்பிலியர்ஸ்:

விளக்குகளைச் சுற்றி மேக்ரேம் நூலால் பின்னி ஒரு விண்டேஜ் அழகைக் கொடுப்பது.

பயன்பாட்டுப் பொருட்கள்:

நூல் மட்டும் மெழுகு கயிறுகளைப் பயன்படுத்தி மேக்ரேம் முறையில் செய்யப்படும் பெண்கள் பயன்படுத்தும் கைப்பைகள்(Bags), மேஜை விரிப்புகள், சாவிக்கொத்துகள் (keychains), பெல்ட்டுகள் மற்றும் கனமான ஊஞ்சல்கள்.

மேக்ரேம் நகைகள்:

சிறிய ரக மெழுகு நூல்களைக் கொண்டு மணிகள், பாசிகள் இணைத்து உருவாக்கப்படும் வளையல்கள், காதணிகள், கழுத்தணிகள், பிரேஸ்லெட்டுகள் போன்ற பொருட்கள் தயாரிக்கப்படுகின்றன.

இதையும் படியுங்கள்:
டிஜிட்டல் யுகத்தில் பாரம்பரிய கலை: புதிய தொழில்நுட்பத்தின் பிரம்மாண்ட மாற்றம்!
மேக்ரேம் கலை - Macrame Art

2) மேக்ரேம் கலைக்கு பயன்படுத்தப்படும் கயிறு வகைகள் மற்றும் பொருட்கள்:

இக்கலைக்கு பருத்தி கயிறுகள் (Cotton Cords), சணல் கயிறுகள் (Jute/Hemp), நைலான் மற்றும் மெழுகு நூல்கள் (Waxed Cord) பயன்படுத்தப்படுகின்றன. பின்னலைத் தொடங்குவதற்கு மரக்குச்சிகள் அல்லது உலோக வளையங்கள், மரப்பாசிகள் (Wooden beads) மற்றும் வண்ண முத்துக்கள் பயன்படுத்தப்படுகின்றன.

மூன்று அல்லது அதற்கு மேற்பட்ட இழைகள் ஒன்றாகத் திரிக்கப்பட்ட தடிமனான கயிறுகள் வலுவான முடிச்சுகளைத் தருவதால் தாவரங்களை மாட்டும் அமைப்புகளுக்கு பயன்படுத்தப்படுகின்றன. மிகவும் மென்மையான ஒற்றை இழை நூல் சுவரில் மாட்டும் இலைகள், குஞ்சங்கள் போன்ற நுணுக்கமான வடிவங்களைச் செய்ய பயன்படுகிறது. மெழுகு பூசப்பட்ட மெல்லிய கயிறுகள் கைகடிகார பட்டைகள், கழுத்து மாலைகள் மற்றும் வளையல்கள் போன்ற சிறிய நகைகள் செய்யப் பயன்படுகின்றன.

மேக்ரேம் கலையின் அழகே அதன் விதவிதமான முடிச்சுகளில் தான் உள்ளது. அடிப்படை முடிச்சுகளான ஸ்கொயர் நாட் (Square Knot), சுருள் முடிச்சு (Spiral Knot) மற்றும் லார்க்ஸ் ஹெட் நாட் (Larks head knot) போன்றவற்றை எளிதாகக் கற்றுக்கொண்டு, பல்வேறு வண்ண நூல்களில் தங்களின் கற்பனைக்கு ஏற்ப மேக்ரேம் பொருட்களை வீட்டிலேயே தயாரிக்கலாம். இவை நவீன வீடுகளின் வரவேற்பறை, பால்கனி போன்ற இடங்களுக்கு ஒரு தனித்துவமான தோற்றத்தைத் தருகிறது.

இதையும் படியுங்கள்:
நவராத்திரி கொலு ஷாப்பிங் ஸ்பாட்டாக மாறிப்போன மயிலாப்பூர் மாட வீதிகள்!
மேக்ரேம் கலை - Macrame Art
logo
Kalki Online
kalkionline.com