இந்தியாவில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் மஹா கும்பமேளா உலகின் மிகப்பெரிய மதக் கூட்டங்களில் ஒன்றாகும். உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் மகா கும்பமேளா நிகழ்ச்சி 13-ம்தேதி தொடங்கியது. இந்த மகா கும்பமேளா நிகழ்ச்சி பிப்ரவரி 26-ந்தேதி வரை 45 நாட்கள் சிறப்பாக நடைபெற உள்ளது. இந்த நிகழ்வில் நடப்பாண்டு கங்கை, யமுனை, சரஸ்வதி ஆகிய புனித நதிகள் சங்கமிக்கும் இடத்தில் பக்தர்கள் புனித நீராடுவார்கள். இங்கு நீராடுவதால் ஆன்மா தூய்மைப்படுத்துவதாக மக்களிடையே நம்பிக்கை இருக்கிறது. 45 நாட்களுக்கு நடக்கும் இந்த நிகழ்வில் 50 கோடிக்கும் அதிகமானவர்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
மகா கும்பமேளாவிற்கு மத்தியில், உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜுக்கு, மத திருவிழாவில் பங்கேற்கவும், திரிவேணி சங்கமத்தின் புனித நீரில் நீராடவும் லட்சக்கணக்கான பக்தர்கள் பயணம் மேற்கொண்டு வருகின்றனர். பிரயாக்ராஜில் தற்போது வரை நம்பமுடியாத கூட்டம் இருந்தபோதிலும், பல்வேறு காரணங்களுக்காக பல பக்தர்கள் ஆன்மீக நிகழ்வான மகா கும்பமேளாவில் கலந்து கொள்ள முடியாத நிலை ஏற்படும். மகா கும்பமேளாவில் கலந்து கொள்ள முடியாதவர்கள் இப்போது பிரயாக்ராஜ், அயோத்தி மற்றும் வாரணாசி ஆகிய புனித நகரங்களிலிருந்து மஹா பிரசாதங்களை ஆர்டர் மூலம் பெறும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
உணவு டெலிவரி செயலியான Waayu, Open Network for Digital Commerce (ONDC) உடன் இணைந்து 1.5 கோடி மதிப்பீட்டில் மஹாகும்பமேளா 2025க்கான மஹாபிரசாதம் ஆர்டர்களை வழங்கியுள்ளது. பயன்பாட்டின் படி, பக்தர்கள் ஆர்டர் செய்த ஏழு நாட்களுக்குள் மகாபிரசாதத்தை பெற்று கொள்வார்கள்.
பிரயாக்ராஜ் ரயில் நிலையம் வழியாக செல்லும் பயணிகள், போக்குவரத்தின் போது நேரடியாக மஹாபிரசாதத்தைப் பெற்றுக்கொள்ளலாம். தற்போது Waayu மற்றும் ONDC மூலம் மஹா பிரசாதங்களை பிரயாக்ராஜ் மற்றும் அயோத்தியில் பெற முடியும் என்றும் விரைவில் வாரணாசியில் கிடைக்க ஏற்பாடு செய்யப்படும் என்றும் கூறப்படுகிறது.
தூய்மையான நெய் மூலம் பாரம்பரிய முறைகள் மற்றும் உயர் தரமான தூய்மைகளைப் பின்பற்றி, பெசன் லட்டு (Besan laddoos) மஹா பிரசாதம், பிரயாக்ராஜ், அயோத்தி மற்றும் வாரணாசியில் தினமும் புதிதாகத் தயாரிக்கப்படுகிறது. இந்த மஹா பிரசாதங்கள் சுற்றுச்சூழலை பாதிக்காத, பிளாஸ்டிக் இல்லாத பேக்கேஜிங் மூலம் பேக் செய்யப்பட்டு வினியோகம் செய்யப்படுகின்றன.
இந்தியா முழுவதும் சேவை செய்யும் வகையில் 19,000 பின் குறியீடுகளில் தடையின்றி டெலிவரி செய்வதை உறுதி செய்வதற்காக டெல்லிவரி (Delhivery), Bluedart, Amazon Shipping, Shiprocket, and India Post உள்ளிட்ட தளவாட வழங்குநர்களுடன் Waayu கூட்டு சேர்ந்துள்ளது.
மகா கும்பமேளா அவசர உதவி எண்
ஒரு சுற்றுலாப் பயணிக்கு ஏதேனும் உதவி தேவைப்பட்டால் அல்லது மஹாகும்பமேளா தொடர்பான ஏதேனும் தகவல் தேவைப்பட்டால், அவர் சுற்றுலா அமைச்சகத்தை பிரத்யேக கட்டணமில்லா டூரிஸ்ட் இன்ஃபோலைன் அதாவது 1800111363 அல்லது 1363 எண்ணுக்கு தொடர்பு கொள்ளலாம். கட்டணமில்லா சுற்றுலா இன்ஃபோலைன் இந்தி, ஆங்கிலம் மற்றும் பிற தேசிய மற்றும் சர்வதேச மொழிகளில் செயல்படும்.