மே தினம் பிறந்த கதை: அமெரிக்கப் போராட்டக்களம் முதல் சென்னையின் முதல் முழக்கம் வரை!

may-day-history
may-day-history
Updated on

லகம் எங்கும் மே மாதம் முதல் நாளை தொழிலாளர் தினமாக கொண்டாடி வருகிறார்கள். இந்த மே தினம் பிறந்த இடம் சோவியத் நாடு என்று பலர் எண்ணிக் கொண்டிருக்கிறார்கள். அது தவறு. மே நாள் பிறந்த இடம் அமெரிக்காதான்.

1884 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் ஏழாம் தேதி அமெரிக்கா கனடா நாட்டில் உள்ள தொழிற்சங்கங்களின் பேரவை எட்டு மணி நேர வேலையை சட்டபூர்வமாக ஆக்கிட வலியுறுத்தி வேலை நிறுத்த போராட்டம் தொடங்க தீர்மானித்தது. அதன்படி 1886 ஆம் ஆண்டு மே முதல் நாள் வேலை நிறுத்தம் போராட்டம் தொடங்கியது. அமெரிக்காவின் பல மாகாணங்களில் உள்ள தொழில் நகரங்களில் இந்த வேலை நிறுத்த போராட்டம் நடைபெற்றாலும், சிகாகோ நகரம்தான் தீவிர உணர்ச்சி மிக்க தொழிலாளர்களின் போராட்ட களமாக திகழ்ந்தது.

அதுவரை தொழிலாளர்கள் அப்படி போராடியதே கிடையாது. அதை கண்டு அரசாங்கம் சினந்தது. அவ்வண்ணம் போராடிய தொழிலாளர்கள் மீது அடக்குமுறையை கண் மூடித்தனமாக ஏவி விட்டது. மே மூன்றில் நடைபெற்ற மெக்கார்மிக் ரீப்பர் தொழிற்சாலை வேலை நிறுத்தமும் மறுநாள் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டமும் பெரும் அடக்குமுறைக்கு ஆளாகியது உயிர் பலிகள் ஏராளம்.

இதையும் படியுங்கள்:
ஒடிசாவின் கலைப் பொக்கிஷம்: பிப்லி கிராமத்தின் வண்ணமயமான கைவேலைப்பாடுகள்!
may-day-history

1888 ஆம் ஆண்டில் செயின்ட் லூயி நகரில் நடைபெற்ற தொழிலாளர் பேரவையில் தொழிலாளர் இயக்கத்தினை அரசியல் முறையில் மே முதல் நாள் நடத்த திட்டமிட்டது. 1889 மே முதல் நாளே அமெரிக்க தொழிலாளர் பேரவை விரிவாக நடத்த திட்டமிருந்ததால் அனைத்து நாடுகளில் உள்ள தொழிலாளர்கள் அமைப்புகள் இதையே தொழிலாளர் நாடாக கொண்டாட முடிவு செய்தனர்.

எட்டு மணி நேரம் வேலை உரிமைக்காக தோன்றிய போராட்ட நாளில் பிறந்ததுதான் மே தினம் என்ற தொழிலாளர் நாள். ஆண்டுதோறும் மே தின விழாவில் ரஷ்யாவின் தலைவர் கலந்துகொண்டு மாஸ்கோவின் செஞ்சதுக்கத்தில் முதலாளித்துவ சுரண்டலின் கேடு, உலக அமைதியின் அவசியம்.

முதலானவற்றை விளக்கி உரை நிகழ்த்துவது வழக்கமாக இருந்தது. இப்படி தான் மே தினம் உருவானது.

தொழிலாளர் உரிமை முழக்க நாளான மே தினம் இந்தியாவிலேயே முதன் முதலாக சென்னை மாநகரில்தான் கொண்ட கொண்டாடப்பட்டது. அப்படி கொண்டாட வழி செய்து கலந்து கொண்டு பேசியவர் ம. சிங்காரவேலர். சென்னையில் தோன்றிய முதல் தொழிற்சங்கத்தின் பெயர் மதராஸ் லேபர் யூனியன் என்பதாகும்.

இதையும் படியுங்கள்:
மறுபிறவி நம்பிக்கை: எகிப்தியர்கள் உடலைப் பாதுகாத்தது ஏன்?
may-day-history

ரோமானியர்கள் மே தினத்தை எப்படி கொண்டாடினார்கள் தெரியுமா ?

மே தினம் தொழிலாளர் தினமாக கொண்டாடப் படுவதெல்லாம் இருபதாம் நூற்றாண்டின் அரசியல் மாறுபாட்டினால்தான்.

புராதன ரோமானியர்கள் மே தினத்தை மகிழ்ச்சி அளிக்கும் நாள் கேளிக்கை தினம் என்பதாகவே கொண்டாடினர்.

மே தினத்தன்று கனிகளுக்கும் மலர்களுக்கும் வண்ணங்களை கொடுக்கும் ப்ளோரா என்ற தேவதையை மகிழ்விப்பதற்காக இளைஞர்களும் யுவதிகளும் வயல்வெளிகளை நோக்கி ஆடிக்கொண்டும் பாடிக்கொண்டும் போவார்கள். மக்கள் முதல் நாள் மாலையே காட்டிற்கு சென்று இரவை இன்பமாக கழிப்பார்கள். அதிகாலையில் பசுமையான இலைகளோடு கொண்டு வந்த இலைகள் மற்றும் மலர்களால் வீட்டை அழகு படுத்துவார்கள்.

logo
Kalki Online
kalkionline.com