மன அழுத்தமா? இரண்டு ஊசிகள் போதும்... உங்கள் மனதை மாற்றும் கைவினைப் பின்னல் கலையின் சக்தி!

குரோஷே மற்றும் நிட்டிங் செய்வதால் மூளைக்குக் கிடைக்கும் வியக்கத்தக்க நன்மைகள் மற்றும் அழகுப் பொருட்கள்!
பின்னல் கலை - Crochet Art Benefits
பின்னல் கலை - Crochet Art Benefits
கே.எஸ்.கிருஷ்ணவேனி

Iam a graduate from Vaishnav College in the year 1984. My writings were published in Mangayar Malar,Aval Vikadan,Kumudham Sneghethi since 1992 and received many prizes. Now I am writing in Kalki Publications. Cooking, writing, playing Shuttle cock & making fur dolls are my passions.

Updated on: 

கைவினைப் பின்னல் கலை (Knitting / Crochet) என்பது பருத்தி நூல், கம்பளி நூல் அல்லது பனை ஓலை போன்ற இயற்கை நார்களைக் கொண்டு ஊசிகள் அல்லது கொக்கிகள் வைத்து பிணைத்து உடைகள், பைகள் மற்றும் அலங்காரப் பொருட்களை உருவாக்கும் உலகளாவிய கலை வடிவம் இதுவாகும்.

இவை கைகளாலேயே விதவிதமான வடிவங்களை அழகுற உருவாக்கும் ஒரு நுணுக்கமான கலை வடிவம் ஆகும். இந்த உன்னதமான பாரம்பரியக்கலை வெறும் பொழுதுபோக்குக்காக மட்டுமின்றி நவீன உடைகள், பொம்மைகள் மற்றும் பாரம்பரிய வீட்டு உபயோகப் பொருட்களை தயாரிக்கும் சிறந்த

சுயதொழில் வாய்ப்பாகவும் உலக அளவில் பிரசித்தி பெற்று விளங்குகிறது.

நிட்டிங் (Knitting):

இதில் இரண்டு நேரான நீண்ட ஊசிகள் பயன் படுத்தப்படும். ஊசிகளின் மேல் நூல்களை வரிசையாக சுருக்கிட்டு (Loops) மாற்றி மாற்றி ஒன்றோடொன்று பிணைக்கும் முறை. இப்படி பின்னுவதன் மூலம் துணி உருவாக்கப்படும். இதன்மூலம் ஆடைகள், குளிர்கால ஸ்வெட்டர்கள், மப்ளர்கள், சாக்ஸ்கள் மற்றும் கை குழந்தை களுக்கான தொப்பிகள் கைமுறையாக பின்னப்படுகின்றன.

குரோஷே (Crochet):

இதில் நுனியில் வளைந்த ஒற்றைக் கொக்கி ஊசி (Crochet Hook)

பயன்படுத்தப்படும். ஒரு நேரத்தில் ஒரு சுருக்கை (Loop) மட்டும் கொண்டு சங்கிலித் தொடர்போல பின்னப்படும். இதன் மூலம் மிக நுணுக்கமான பூக்கள், மேஜை விரிப்புகள், பொம்மைகள், தொப்பிகள் மற்றும் கைப்பை போன்ற அலங்கார பொருட்கள் செய்யப்படுகின்றன.

பாரம்பரிய பாய் மற்றும் கூடைகள் (கோரைப்புல் பின்னல்):

நூல்களைத் தவிர பனை ஓலைப் பிரம்பு, கோரைப்புல் மற்றும் மூங்கில் ஆகியவற்றைப் பின்னி பாரம்பரிய பொருட்கள் தயாரிப்பதும் இக்கலையின் முக்கிய பிரிவாகும்.

திருநெல்வேலி மாவட்டம் பத்தமடை பாய் உலகப் புகழ்பெற்றது. கோரைப் புற்களைப் பக்குவப்படுத்தி, மென்மையாகப் பின்னி எடுக்கப்படும் இந்தப் பாய்கள் உடலுக்கு குளிர்ச்சியைத் தரக்கூடியவை. கிராமப் புறங்களில் கோரைப் புற்களைக் கொண்டு பாய் முடைதல் செய்யப்படுகிறது.

பின்னல் கலை - Crochet Art Benefits
பின்னல் கலை - Crochet Art Benefits

பிரம்பு மற்றும் மூங்கில் பின்னல்:

கொள்ளிடம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பிரம்புக் கொடிகளைக் கொண்டு நாற்காலிகள், ஊஞ்சல்கள், கூடைகள் போன்றவை அழகாக பின்னப்படுகின்றன.

கிராமப்புறங்களில் மூங்கில் கழிகளை மெல்லிய வாராகக் கீறி கூடைகள், முறங்கள் மற்றும் தட்டுகளைப் பின்னுவது ஒரு முக்கியமான தொழிலாக உள்ளது.

பனை ஓலை பின்னல்:

பனை ஓலைகளைக் கொண்டு கூடைகள், பெட்டிகள், விசிறிகள் மற்றும் குழந்தைகளுக்கு விளையாட உதவும் கிளுகிளுப்பை போன்ற பொம்மைகள் பின்னப் படுகின்றன. மதுரை, ராமநாதபுரம், தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில் இக்கலை பரவலாக காணப்படுகிறது.

இவை அனைத்தும் பின்னுதல் கலையின் உன்னதமான வடிவங்களாகும். சுற்றுச்சூழல் நட்பு கொண்ட இதனை உலக அளவில் நிலையான மற்றும் சூழலுக்கு உகந்த கலை வடிவமாக இன்றும் போற்றப்பட்டு மதிக்கப்படுகிறது.

இதையும் படியுங்கள்:
நகம் உடைந்து மஞ்சள் நிறமாகிறதா? உள் உடலில் இருக்கும் ஆபத்தான அறிகுறி இதுதான்!
பின்னல் கலை - Crochet Art Benefits

பின்னல் கலையின் நன்மைகள்:

தொடர்ந்து ஒரே சீராகப் பின்னுவது ஒரு சிறந்த தியானம் செய்வதற்கு இணையானது. இது மனதைக் கட்டுப்படுத்தி பதற்றத்தைக் குறைக்க உதவுகிறது.

குரோஷே மூலம் செய்யப்படும் கைக்குழந்தைகளுக்கான உடைகள், சாவிக் கொத்துகள், மெத்தென்ற பொம்மைகள் போன்ற கைவினைப் பொருட்களுக்கு சந்தையில் நல்ல வரவேற்பும் கூடுதல் வருமானத்தையும் தரும்.

கைவினை பொருட்களுக்கு சந்தையில் நல்ல வரவேற்பு உள்ளதால் வீட்டில் இருந்தபடியே இந்தத் தொழிலை செய்து நல்ல வருமானம் ஈட்டலாம். விதவிதமான வண்ணங்கள் மற்றும் வடிவங்களில் பொருட்களை நம் கற்பனைக்கேற்ப உருவாக்க முடியும்.

பிளாஸ்டிக் பொருட்களுக்கு மாற்றாக இயற்கை நார்கள் மற்றும் நூல்களைக் கொண்டு பைகள் மற்றும் வீட்டு அலங்காரப் பொருட்களை நாம் உருவாக்க முடியும். இன்றைய சுதந்திர மயமாக்கல் மற்றும் நெகிழிப் பொருட்களின் ஆதிக்கத்தால் இத்தகைய பாரம்பரிய கைவினைப் பின்னல் கலைகள் சற்றே நலிவடைந்து வந்தாலும் இவற்றின் சுற்றுச்சூழல் நலம் மற்றும் கலைத்தன்மை காரணமாக இப்பொழுதும் இவற்றுக்கு தனி மதிப்பு இருக்கத்தான் செய்கிறது.

இதையும் படியுங்கள்:
உலகின் மிகச் சிறந்த நடனங்கள்: Philippines Pandanggo sa Ilaw மற்றும் Russian Ballet
பின்னல் கலை - Crochet Art Benefits
logo
Kalki Online
kalkionline.com