
இந்தியாவில் எவராலும் வெல்ல முடியாத சாதனையை படைத்தவர் எம்.ஜி.ஆர்.
இந்தியாவில் முதல் தேசிய விருதை பெற்ற படம் எம்.ஜி.ஆர் அவர்களின் (ரிக்ஷாக்காரன்)படம்.
தென்னிந்தியாவிலே முதல் தேசியவிருதை பெற்றவர் எம்.ஜி.ஆர்.
இந்தியாவில் சீனா யுத்த நெருக்கடியில், அதிக நிதியும், முதலில் கொடுத்த இந்தியர் எம்.ஜி.ஆர்.
உலகிலே ஒரு திரை நடிகர் ஆட்சியை பிடித்தது எம்.ஜி.ஆர். இதற்கு பின் தான் அமெரிக்காவை நடிகர் ரீகன் ஆண்டது.
ஐ நா சபை பாராட்டிய ஒரே இந்திய மாநில முதல்வர் எம்.ஜி.ஆர்.
இந்தியாவிலே சாரணர் உயர்விருது வெள்ளி யானை பரிசு பெற்ற ஒரே தலைவர் முதல்வர் எம்.ஜி.ஆர்.
ஒருதுளி நீரை பங்கிட முடியாத இந்தியாவில் ஒரு நதியை கிருஷ்ணாவை தமிழகத்தில் பாயவைத்தவர் எம்.ஜி.ஆர்.
களம் காணாமல் தமிழகத்தில் ஆட்சியை பிடித்த ஒரே இந்திய தலைவர் எம்.ஜி.ஆர்.
எந்த முதல்வருக்கும் செய்யாத வகையில், ஒரு விமானத்தையே மருத்துவமனை ஆக்கி அமெரிக்க செல்ல எம்.ஜி.ஆருக்கு வழங்கியது இந்தியா.
அரசு தனக்கு செய்த வைத்திய செலவை அரசுக்கு திருப்பி செலுத்திய ஒரே இந்திய அரசியல் தலைவர் எம்.ஜி.ஆர் மட்டுமே.
இந்தியாவில் உள்ள பத்மஸ்ரீ, பாரத் ரத்னா உட்பட அனைத்து பட்டங்களும் பெற்ற ஒரே இந்தியர் எம்.ஜி.ஆர்.
எம்.ஜி.ஆருக்கு இறுதி மரியாதை செய்ய மரபுகள் மீறி ஜனாதிபதி, துணைஜனாதிபதி, பிரதமர், முப்படை தளபதி என அனைவரும் வந்து மரியாதை செய்தது ஒரு சரித்திர சாதனை.
இந்திய செங்கோட்டையில் தேசிய கொடி அரைகம்பத்தில் இறக்க பட்டு மரியாதை செய்தது, அனைத்து அலுவலமும், அனைத்து மாநிலங்களும் விடுமுறை விடப்பட்டது. இது எந்த மாநில முதல்வருக்கும் செய்யாதது எம்.ஜி.ஆருக்கு மட்டுமே சிறப்பு செய்தது.
பாரளுமன்றத்தில் எம்.ஜி.ஆர் சிலை, எம்.ஜி.ஆர் நாணயம், எம்.ஜி.ஆர் ஸ்டாம்பு, எம்.ஜி.ஆர் ரயில்நிலையம் என எம்.ஜி.ஆரை கௌரவித்தது இந்தியா.
அமெரிக்கா, பிரான்ஸ், மோரிஸ், மலேசியா, கனடா நாடுகள் எம்.ஜி.ஆருக்கு மரியாதை செய்தது. கனடா எம்.ஜி.ஆர் தபால் தலை வெளியிட்டது.
முன் ஒருமுறை மோரிஸ் நாடு தன் சுதந்திர நாள் விழாவில் கலந்து கொள்ள அழைத்தது எம்.ஜி.ஆரை. மொரீஸ் சென்ற எம்.ஜி.ஆருக்கு அந்நாட்டு பிரதமருக்கு அடுத்த இருக்கை கொடுத்து சிறப்பித்தது.
இந்தியாவிலே இத்தனை சிறப்புகள் பெற்ற ஒரு தலைவரும் இல்லை.
வாழ்க! பொன்மனச்செம்மல் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் அவர்கள் புகழ்.