70 ஆண்டுகால வரலாற்றில் மாற்றம்: குஜராத்திற்கு மாறும் தேசிய விருது விழா!

வரலாற்றில் முதல்முறையாக டெல்லிக்கு வெளியே குஜராத் ஏக்தா நகரில் தேசியத் திரைப்பட விருதுகள் வழங்கும் விழா.
திரைப்பட விருதுகள் - National Film Awards
திரைப்பட விருதுகள் - National Film Awards
ம.வசந்தி

மங்கையர் மலரின் நீண்டகால வாசககயான எனக்கு, புதிய புதிய விஷயங்களை தெரிந்து கொள்வதில் ஆர்வம் அதிகம். ஊக்கப்படுத்துவதும் உற்சாகப்படுத்துவதும் செயலற்றவர்களையும் ,செயல்பட வைக்கும் என்பதால், மோட்டிவேஷன் கட்டுரைகள் எழுவது மிகவும் பிடித்தமான ஒன்று .எனது எண்ணங்கள் நேர்மறையான சிந்தனை கொண்ட   கல்கி குழுமத்தோடு ஒன்றிப் போவதால் அவர்களுடன் கைகோர்த்து வீறு நடை போட்டுக் கொண்டிருக்கிறேன்.

Updated on

திரைப்படம் பார்ப்பது சாதாரண மக்களின் பொழுது போக்குகளில் முக்கியமானதாக இருக்கிறது. ஆனால் சினிமாத்துறையில் சிறந்து விளங்குபவர்களுக்கு நாட்டின் மிகவும் மதிப்பு மிக்க கௌரவமாக தேசிய திரைப்பட விருதுகள் இருக்கின்றன. இந்தியாவில் 1954 ஆம் ஆண்டு முதல் 70 ஆண்டுகளுக்கும் மேலாக ஒவ்வொரு ஆண்டும் திரைப்பட விருதுகள் வழங்கப்படுகின்றன. தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகத்தின் கீழ் உள்ள தேசிய திரைப்பட வளர்ச்சிக் கழகத்தால் (NFDC) தேசியத் திரைப்பட விருதுகள் வழங்கப்படுகின்றன

முழு நீள திரைப்படங்கள், பகுதி முழு நீளத் திரைப்படங்கள், சினிமா குறித்த எழுத்து என மூன்று பிரிவுகளை உள்ளடக்கி திரைப்படத் துறையின் சாதனைகளை அங்கீகரித்து விருதுகள் வழங்கப் படுகின்றன. இதன்படி சிறந்த திரைப்படம், சிறந்த நடிகர், சிறந்த நடிகை, சிறந்த இயக்கம், சிறந்த மன மகிழ்ச்சி தரும் பிரபல படம், சிறந்த குழந்தைகள் படத்திற்கு தங்கத் தாமரை (ஸ்வர்ண கமல்) விருது வழங்கப்படுகின்றன.

அரசியலமைப்பின் எட்டாவது பட்டியலில் உள்ள ஒவ்வொரு மொழியிலிருந்து தயாரிக்கப்படும் சிறந்த திரைப்படத்திற்கு வெள்ளித் தாமரை (ரஜத் கமல்) விருது வழங்கப்படுகின்றன.

1954 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட இவ்விருதுகள் இந்திய தலைநகர் டெல்லியில் குடியரசு தலைவரால் வழங்கப்பட்டு வந்தன.

பெரிய வணிக தயாரிப்பு, சிறிய வணிக தயாரிப்பு என வேறுபாடு இல்லாமல் நாடு முழுவதும் செழுமையான மொழி,கலாச்சாரம், பிராந்திய பன்முகத்தன்மையை பிரதிபலிக்கும் விதமாக தயாரிக்கப்படும் திரைப் படங்களுக்கு விருதுகள் அறிவிக்கப்படுகின்றன.

தேசிய திரைப்பட விருதுகளுக்கு பார்வையாளர்கள், தயாரிப்பாளர்கள் மத்தியில் மிகப்பெரிய மதிப்பு இருக்கிறது.இத்துறையில் பணியாற்றும் கலைஞர்கள் விருது பெரும் அர்ப்பணிப்போடுதான் ஒவ்வொரு திரைப்படத்திலும் பணியாற்றுகிறார்.

டெல்லியில் மட்டும் திரைப்பட விருதுகள் வழங்கும் விழா நடைபெற்று வந்த நிலையில் நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் விருது வழங்கும் விழாவை நடத்த கொள்கை முடிவாக தகவல் ஒளிபரப்பு அமைச்சகம் முடிவு செய்துள்ளது. அதன்படி 2024 ஆம் ஆண்டிற்கான படைப்புகளுக்கு திரைப்பட விருதுகள் வழங்கும் விழா டெல்லியில் நடைபெறுவதற்கு பதிலாக குஜராத் மாநிலம் ஏக்தா நகரில் ஒற்றுமை சிலை வளாகத்தில் செப்டம்பர் 22, 2026 இன்று குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு வழங்குகிறார்.

திரைப்பட விருதுகள் - National Film Awards
திரைப்பட விருதுகள் - National Film Awards

இந்தியா முழுவதிலும் இருக்கும் திரையுலக கலைஞர்கள் பங்கேற்கும் தேசியத் திரைப்பட விழா `ஒரே பாரதம்! உன்னத பாரதம்` என்ற உணர்வை பிரதிபலிக்கும் விதமாக இருக்கும்.

தாதாசாகேப் பால்கேவின் `ராஜா ஹரிச்சந்திரா திரைப்படம் வெளிவந்த 1913 ஆம் ஆண்டில் இருந்து இந்திய சினிமா பயணம் தொடங்கியது. திரைப் படங்களுக்கான மாநில விருதுகளை நிறுவுமாறு 1949 ஆம் ஆண்டு அமைக்கப்பட்ட திரைப்பட ஆய்வு குழு பரிந்துரைத்தது. தேசிய திரைப்பட விருதுகள் இந்திய சினிமாவில் உள்ள கலை, தொழில்நுட்ப சிறப்புகளை கௌரவிக்கும் விதமாகவும், ஊக்குவிக்கும் விதமாகவும் உருவாக்கப்பட்டது. 1954-ஆம் ஆண்டு நிறுவப்பட்ட இந்த விருதுகள் 1953 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படங்களை கௌரவித்து வழங்கப்பட்டது.

இதையும் படியுங்கள்:
பிரபல கர்நாடக இசைக்குயில் எம் எஸ் சுப்புலட்சுமியின் வரலாற்று படத்தில் நடிகை ராஷ்மிகா!
திரைப்பட விருதுகள் - National Film Awards

திரைப்படங்களுக்காக, கலைஞர்கள் தொழில்நுட்ப வல்லுநர்களுக்கான விருதுகள் 1967ஆம் ஆண்டு தனித்தனியாக நிறுவி வழங்கப்படுகின்றன. 1969 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட தாதா சாஹேப் பால்கே விருது முதல் முதலாக தேவிகா ராணிக்கு வழங்கி கௌரவிக்கப்பட்டது.

அதிகாரப்பூர்வ விதிமுறைகளின்படி தேசிய திரைப்பட விருதுகளின் நோக்கங்கள் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளன. தொழில்நுட்ப சிறப்பு, சமூக முக்கியத்துவம் அழகியல் சார்ந்து எடுக்கப்பட்ட திரைப்படங்களுக்கு விருது வழங்கி கௌரவித்து ஊக்கப்படுத்துகின்றன.

வேற்றுமையில் ஒற்றுமை கொண்ட இந்தியாவில் உள்ள வெவ்வேறு மாநிலங்களின் கலாச்சாரங்களை பார்வையாளர்கள் புரிந்து கொண்டு பாராட்டுவதற்கு தேசிய விருதுகள் முக்கிய காரணமாக உள்ளன. அந்த வகையில் தேசிய திரைப்பட விருதுகள் நாட்டின் ஒற்றுமையையும் ஒருமைப்பாட்டையும் மேம்படுத்துவதில் முக்கிய பங்காற்றுகின்றன. சினிமாவை பொழுதுபோக்காக மட்டுமல்லாமல் கலை வடிவமாக கற்றுக்கொள்வதையும் பாராட்டுவதையும் ஊக்குவிப்பதில் தேசிய திரைப்பட விருதுகளுக்கு தனிப்பங்கு உண்டு.

இந்திய தேசிய திரைப்பட விருதுகளின் வரலாற்று முக்கியத்துவம், அதன் மாற்றங்கள் மற்றும் 2024-ஆம் ஆண்டிற்கான விருது விழா குறித்த அனைத்து அதிகாரப்பூர்வ விவரங்களையும் தெளிவாகப் புரிந்து கொண்டு, இந்திய சினிமாவின் மைல்கற்களைப் பற்றிய விழிப்புணர்வைப் பெறலாம்.

இதையும் படியுங்கள்:
தனியொரு ஆளாக படம் எடுப்பது சாத்தியமா? சங்ககிரி ராஜ்குமாரின் 'ஒன்' படம் தரும் சினிமா பாடம்!
திரைப்பட விருதுகள் - National Film Awards
logo
Kalki Online
kalkionline.com