

நெய்மர் ஜூனியர் மிகவும் பிரபலமான கால்பந்தாட்ட வீரர்களில் ஒருவர். அவர் பிரேசிலில் பிறந்தவர். 33 வயதான அவர் பிரேசிலிய தேசிய கால்பந்து அணிக்காக விளையாடுகிறார் மற்றும் அணியின் வரலாற்றில் அதிக கோல் அடித்தவர் ஆவார். அங்கு அவர் மொத்தம் 128 போட்டிகளில் 79 கோல்களைப் பதிவு செய்துள்ளார். சாம்பியன்ஸ் லீக் வரலாற்றில் அதிக கோல் அடித்த பிரேசிலிய வீரரும் ஆவார். மேலும் ஒரு மிட்ஃபீல்டராக தனது திறமையான தாக்குதல், கோல் அடித்தல் மற்றும் ஈர்க்கக்கூடிய பாஸ் திறன்களுக்காக புகழ் பெற்றவர்.
அதிரடி கால்பந்தாட்ட வீரரான அவர் ஓர் ஆடம்பர வாழ்க்கை பிரியர் மற்றும் வாகனங்கள் மீது அலாதி பிரியம் உள்ளவர். நெய்மர் ஜூனியர் பல மில்லியன் டாலர் மதிப்புள்ள ஆடம்பர மற்றும் சூப்பர் கார் கலெக்ஷனை (Neymar car collection) வைத்துள்ளார். முக்கியமாக, 11 மில்லியன் டாலர் மதிப்புள்ள லம்போர்கினி வெனெனோ (Lamborghini Veneno), லைகான் ஹைப்பர்ஸ்போர்ட் (Lykan Hyper sport), ஃபெராரி 458 இத்தாலியா (Ferrari 458 Italia), ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட் (Rolls-Royce Ghost), இத்தாலியின் மாசெராட்டி எம.சி.12 (Maserati MC12) மற்றும் பல ஆடி (Audi )மாடல்களை அவர் வைத்துள்ளார்.
பிரேசிலிய கால்பந்து நட்சத்திரம் நெய்மர் அன்மையில், கோதம் கேரேஜ் (Gotham Garage) ஸ்டைலில் வடிவமைக்கப்பட்ட, சுமார் $1,5 மில்லியன் (இந்திய மதிப்பில் 15 கோடி) மதிப்புள்ள பேட்மேன் டம்பளர் (Batmobile Tumbler) காரின் நகலை வாங்கியுள்ளார். இந்த கார், புகழ்பெற்ற பேட்மேன் திரைப்படங்களில் வரும் கார் போன்றே வடிவமைக்கப்பட்டு, அவரது பிரத்தியேக கேரேஜில் உள்ள அதிநவீன வாகன சேகரிப்பில் இணைக்கப்பட்டுள்ளது. நெய்மர் தன் சிறு வயதிலிருந்தே பேட் மேன் ரசிகர் என்பது குறிப்பிடத்தக்கது.
கோதம் கேரேஜ் கான்செப்ட் கார் என்பது கோதம் கேரேஜ் உரிமையாளர் கலிபோர்னியாவின் மார்க் டவ்லின் சிந்தனையில் உருவானது, அவர் 20 ஆண்டுகளாக முற்றிலும் தனித்துவமான சூப்பர் கார் பாணி கட்டுமானத்திற்கான தனது யோசனைகளைச் செயல்படுத்தி வருகிறார். பழைய கார்களை தனித்துவமான படைப்புகளாக மாற்றுவது அவர் பணி.
நெய்மர் பேட்மேன் ரசிகர் என்பதால், இந்த கோதம்-ஈர்க்கப்பட்ட கார் அவருக்கு மிகவும் ஸ்பெஷலானது. இந்த கோதம் கேரேஜ் கான்செப்ட் கார், நெய்மரின் சொகுசு கார் சேகரிப்பில் ஒரு முக்கிய அடையாளமாக விளங்குகிறது. $1,5 மில்லியன் மதிப்புள்ள பேட்மொபைலின் பிரத்யேக பிரதியை கார் வடிவமைப்பாளர் அதெமர் கப்ரால் மூன்று வருட காலத்தில் 50 கைவினை கலைஞர்கள் உழைப்பில் உருவாக்கப்பட்டது. இது பேட்மேன் படங்களில் வரும் டம்ளர் மாதிரியை அடிப்படையாகக் கொண்டது மற்றும் சக்திவாய்ந்த V8 எஞ்சினைக் கொண்டுள்ளது.
525 குதிரைத்திறன் மற்றும் 486 பவுண்டு-அடி முறுக்குவிசை உற்பத்தி செய்யும் 6.2L LS3 V8 ஐக் கொண்டுள்ளது, இது GM 4L85E டிரான்ஸ்மிஷனுடன் இணைக்கப்பட்டுள்ளது. கெவ்லர், கார்பன் ஃபைபர், கண்ணாடியிழை மற்றும் தாள் உலோகத்தால் ஆன இந்த வாகனம் தோராயமாக 5,500 பவுண்டுகள் எடை கொண்டது. சட்ட காரணங்களுக்காக, இது தனியார் அமைப்புகளில் மட்டுமே பயன்படுத்தப்படலாம் மற்றும் பொது சாலைகளில் பயன்படுத்தப்படக்கூடாது.
நெய்மர் ஜூனியரின் 50 மில்லியன் டாலர்கள் மதிப்புள்ள கோதம் மேரேஜ் கலெக்ஷன் பிரிவில் மேட் மொபைல் சேர்வதற்கு முன்னர் நெய்மரின் சொந்த உபயோகத்திற்கு என $50 மில்லியன் மதிப்புள்ள தனியார் ஜெட் விமானமான டசால்ட் ஃபால்கன் (Dassault Falcon 900LX கருப்பு நிறம்), இருக்கிறது. இதன் சிறப்பு வெளிப்புறத்தில் நெய்மர் பெயரை செதுக்கியுள்ளது. 14 பேர் பயணம் செல்லும் வகையில் வசதியான சொகுசு கேபின் மற்றும் பெட்ரூம், டைனிங் ஏரியா என அதிக வசதிகள் கொண்டது. அதிவேக நீண்ட தூர பயணங்களுக்கு ஏற்றது. எங்கும் நிற்காமல் 9000 கிமீ செல்லும். பாரிஸ் முதல் சாவோ பாலோ வரை நிறுத்தமில்லாமல் பயணிக்கக்கூடியது.
1966 பேட்மேன் திரைப்படத்திற்காக ஹெலிகாப்டர் வடிவில் உருவாக்கப்பட்ட 13.5 பில்லியன் டாலர்கள் மதிப்புள்ள ஏர்பஸ் H145 (Airbus H145) ஹெலிகாப்டரை வைத்துள்ளார். அதை தனது சொகுசு பயணத்திற்காகப் பயன்படுத்துகிறார். இந்த கறுப்பு நிற ஹெலிகாப்டர், "PP-NJR" என அவர் பெயரின் முதல் எழுத்தாக பதிவு செய்யப்பட்டுள்ளது. குறுகிய தூர பயணத்திற்கு பயன்படும் இந்த ஹெலிகாப்டரில் தான் பிரேசில் முழுவதும் சுற்றி வருகிறார்.