

நைஜீரியாவில் உபங் என்ற இடத்தில் ஒரே வார்த்தையை ஆண்கள் ஒருவிதமாகவும், பெண்கள் ஒருவிதமாகவும் பேசும் கலாசாரம் வியப்பாக உள்ளது. இதில் ஆச்சர்யம் என்னவென்றால் இருவர்களுக்கும் அவர்கள் பேசுவது புரிந்து கொள்ளப்படுவதுதான். உதாரணமாக உபங் மொழியில் பெண்கள் இரு என்றும், ஆண்கள் இடாங் என்றும் கூறுகிறார்கள். உடையை பெண்கள் அரிக்கா என்றும் ஆண்கள் நிகி என்றும் கூறுகிறார்கள். இப்படி பலவிதமான வார்த்தைகளை ஆண்களும் பெண்களும் வெவ்வேறாக குறிப்பிடுகிறார்கள்
அதுசரி இவர்களின் குழந்தைகளுக்கு குழப்பமாக இருக்காதா என்று தானே யோசிக்கிறீர்கள். ஆனால் குழந்தைகள் சிறுவயதிலிருந்து தங்கள் தாய் மற்றும் தந்தையிடமிருந்து கற்றுக்கொண்டு விடுகிறார்கள். ஆண் பிள்ளைகள் தங்கள் பத்து வயதிலிருந்தே ஆண்கள் பேசும் வார்த்தைகளை கற்று விடுகிறார்கள்.
இப்படி ஒரே வார்த்தையை ஆண்கள் ஒருவிதமாகவும், பெண்கள் ஒருவிதமாகவும் குறிப்பிடுவதால் எந்த குழப்பமும் இல்லாமல் இருவரும் அவர்கள் சொல்வதைப் புரிந்துகொள்கிறார்கள். தினசரி நடவடிக்கையில் எந்த குழப்பமும் இல்லாமல் அவர்களின் புரிதல் சிறப்பானவை உள்ளது. இரண்டு டிக்ஷனரி போன்று இது உள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் கருத்து தெரிவிக்கிறார்கள்.
இந்த கலாசாரம் எப்போது தோன்றியது எனபது மட்டும் புதிராகவே உள்ளது. இது இறைவனிடமிருந்து கிடைக்கப்பட்ட பரிசாக அவர்கள் நினைக்கிறார்கள். மேலும் இந்த கலாசாரம் இவர்களுக்கு தனி அடையாளத்தைத் தருவதாக நினைக்கிறார்கள். ஆண்கள் மற்றும் பெண்களுக்குள் தங்கள் இனத்தின் பாரம்பரியம சமூக ஒழுங்கை இக்கலாசாரம் ஏற்படுத்துவதாக எண்ணுகிறார்கள்.
மேலும் எல்லா வார்த்தைகளுமே ஆண்களுக்கு என்றும் பெண்களுக்கு என்றும் இருப்பதில்லை. ஒரு சில வார்த்தைகள் மட்டுமே அப்படி இருப்பதால் இவர்களுக்குள் உரையாடல்களில் எந்தவித குழப்பமும் இல்லாமல் நன்றாக செல்கிறது. இரண்டு வித மாக ஒரே வார்த்தை பேசப்படுவதால் இவர்களுக்குள் எந்தவித குழப்பமும் ஏற்படுவதில்லை என்பது வியக்கத்தக்க விஷயம்.
உலகில் இவர்கள் இரட்டை பாஷையால் எல்லா இடங்களிலும் இருப்பதைப் போன்று சவாலாக உள்ளன. இளைய தலைமுறை அதிக அளவில் ஆங்கிலத்தில் பேசுவதுடன் அதை தங்கள் தினசரி பழக்கத்தில் உபயோகிப்பதால் இவர்களுக்கு இந்த கலாச்சாரத்தால் பிரச்னையின்றி இருக்கிறார்கள்.
இங்குள்ள பள்ளிகளில் ஆங்கிலமே அதிக அளவில் போதிக்கப்பட்டது. மேலும் பள்ளி மாணவர்கள் தங்கள் தாய் மொழியில் பேச பள்ளிகள் தடைவிதித்து இருப்பதால் இந்த கலாசாரத்தில் ஊறிய உபங் மக்கள் இளைய தலைமுறையாய் தங்கள் மொழியை சரளமாகப் பேசுவது மிகவும் கடினமாக உள்ளதாக எண்ணுகிறார்கள். இதனால் தங்கள் பிள்ளைகள் அதிகமாக பாரம்பர்ய மொழியை கற்பது கடினமாகிறதாக அவர்கள் வருத்தப்படுகிறார்கள்
இந்தியாவில் பல ஊர்களில் பல மொழிகள் பேசுபவர்கள் உண்டு. ஆனால் ஒரே இடத்தில் ஒரே மொழியை ஆண்களும் பெண்களும் வெவ்வேறாக பயன்படுத்திப் பேசியும் அவர்கள் குழப்பம் இல்லாமல் உரையாட முடிகின்ற கலாசாரம் வித்தியாசமாகவும் வியப்பாகவும் உள்ளது.
ஒவ்வொரு ஊருக்கு ஒரு கலாசாரம் அவர்களை அடையாளப் படுத்துகிறது. நைஜீரியாவில் உபங் - இடத் ஆண்களும் பெண்களும் ஒரே பாஷையை வெவ்வேறு விதமாகப் பேசுவது அவர்களின் தனிப்பட்ட கலாசாரத்தின் அடையாளமாகவே திகழ்கிறது.
உலகில் மொழியியல் ரீதியாக இன்றும் நீடிக்கும் ஒரு பெரும் அதிசயத்தைப் பற்றிய தெளிவான பார்வையை நீங்கள் பெறுவீர்கள். ஆண், பெண் இருவருக்குமான மொழி வேறுபாடுகளுக்குப் பின்னால் இருக்கும் சமூக ஒழுங்கையும், உலகமயமாக்கலால் ஒரு தனித்துவமான கலாசாரம் அழியும் நிலைக்குத் தள்ளப்படும்போது ஏற்படும் சவால்களையும் புரிந்துகொண்டு, பன்முகத்தன்மையின் மதிப்பை உணர்வீர்கள்.