வாழ்க்கைப் புதிர்களை உடைக்கும் பழமொழிகள்: முன்னோர்களின் ரகசிய வழிகாட்டி!

Ancient Proverbs - பழமொழிகள்
Ancient Proverbs - பழமொழிகள்AI Image
Updated on

ம் இந்தியாவில் பல்வேறு மாநிலங்களும் பலவிதமான மக்களும் இருக்கிறார்கள். எல்லா மாநிலங்களிலும் அவரவர்களின் மொழிகளுக்கும் கலாச்சாரத்திற்கும் ஏற்றவாறு இந்த பழமொழிகள் இன்றளவும் பின்பற்றப்பட்டுதான் வருகின்றன. எல்லா மாநிலத்திலும் முன்னோர்கள் தங்களுடைய அனுபவத்தை இந்த பழமொழியின் மூலமாக கூறியிருக்கிறார்கள்.

இதில் வேடிக்கை என்னவென்றால் உலகம் எங்கேயோ போய்க்கொண்டு எத்தனையோ வளர்ச்சியை அடைந்த போதிலும் நம் இந்தியா மட்டுமல்லாமல் உலகளவில் இந்த பழமொழிகளை இன்றளவும் கடைபிடிக்கதான் செய்கிறார்கள்.

ஆங்கிலேயர்களும் ஆங்கிலத்தில் பழமொழிகளை Proverbs என்று எழுதி இருக்கிறார்கள். ஆங்கிலேயர்கள் மட்டுமல்லாமல் உலகத்தில் உள்ள அனைத்து நாடுகளிலுமே இந்த பழமொழிகள் அவரவர்களுடைய மொழிகளில் எழுதப்பட்டு தான் இருக்கின்றன. அந்தந்த நாட்டினர் தங்களுடைய அனுபவங்களை பழமொழிகளாக எழுதி இருக்கிறார்கள்.

எந்த நாட்டினுடைய பழமொழியைப் படித்தாலும் நமக்கு அதில் ஒரு விளக்கமும் புது அனுபவமும் கிடைக்கும். பல்வேறு நாட்டை சேர்ந்த பழமொழிகளை நாம் படிக்கும்போது நிச்சயமாக நமக்கு சில தீர்க்கப்படாத பிரச்னைகளுக்கு தீர்வு கிடைக்கலாம். சரி, இந்த பழமொழிக்கான விளக்கத்தை நான் இரண்டு வகைகளில் வேறுபடுத்தி விளக்கப்போகிறேன்.

மனதிற்கு ஆரோக்கியம் தரும் பழமொழிகள் என்னும் சுவைமிகு பழம்!

முதலாவது விளக்கம்:

பழமொழி என்றால் பழமை + மொழி என்று பொருளாகும். அதாவது பழமையான காலத்தில் இருந்தே முன்னோர்கள் தாங்கள் அனுபவித்ததை வசனங்களாக எழுதியதையே நாம் பழமொழிகள் என்று கூறுகிறோம். ஆகவே, பழமொழி என்றால் பழமை வாய்ந்த வசனங்களை கொண்டதாகும் அதேசமயம் முன்னோர்களின் அனுபவத்திலும் எழுதியதாகும். இதில் இருக்கும் வசனங்கள் அவர்களின் அனுபவத்தை மிக அழகாக எடுத்துரைக்கின்றன.

Ancient Proverbs - பழமொழிகள்
Ancient Proverbs - பழமொழிகள்AI Image

இரண்டாவது விளக்கம்:

இரண்டாவது விளக்கமாக பழமொழி என்றால் பழம் + மொழி என்று பொருளாகும். ஒரு பழத்தை நான் உண்பதால் நமக்கு என்ன பலன் கிடைக்குமோ அதைப்போலவேதான் இந்த பழமொழியை படிக்கும் போதும் நமக்கு பலன் கிடைக்கும். இன்னும் சற்று விரிவாக பார்க்கலாம்.

ஏதாவது ஒன்று அல்லது இரண்டு பழங்களையும் நாம் நம்முடைய உணவில் தினமும் உட்கொள்ளும்போது நமக்கு என்ன பலன் கிடைக்கும்? தினமும் பழங்களை உண்பதால் நம்முடைய ஜீரண சக்தி மேம்படும். அதன் காரணமாக உடல் உறுப்புக்கள் நன்றாக செயல்படும் ஆகவே பழத்தை உண்ணும்போது நாவிற்கு சுவையாகவும் அதேசமயம் உடல்நலத்திற்கு ஆரோக்கியமாகவும் இருக்கும். பழத்தை உண்பதால் நாவிற்கும் இனிமை, உடலுக்கும் ஆரோக்கியம்.

இதைப் போலவே பழத்தைப்போல் உள்ள இந்த பழமொழிகளை நாம் தினமும் படித்தால் நமக்கு என்ன பலன் கிடைக்கும்?

தினமும் ஒன்று அல்லது இரண்டு பழமொழிகளை படிக்கும்போது முதலில் நமது செவிக்கு அது இனிதாகிறது. அதற்குப் பிறகு அந்த பழமொழிகளை படித்து அதன் அர்த்தத்தை புரிந்துகொள்ளும்போது நம்முடைய எண்ணங்களும் சிந்தனைகளும் தெளிவு பெறுகின்றன. எண்ணங்களும் சிந்தனைகளும் தெளிவு பெறும் காரணத்தினால் நம்முடைய மனமானது ஆரோக்கியமாக இருக்கும். ஆகவே பழமொழியைப் படிப்பதால் செவிக்கூ விருந்தாகுவதோடு மட்டுமல்லாமல் மனமும் ஆரோக்கியமாக இருக்கும்.

இதையும் படியுங்கள்:
மனமே மாமருந்து: அமைதியும் நிதானமும் தரும் ஆச்சரியமான மாற்றங்கள்!
Ancient Proverbs - பழமொழிகள்

ஆகவே, இறுதியாக இரண்டு விளக்கங்களின் அடிப்படையில் பழமையான மற்றும் பழத்தைப்போல் பலன் தரும் பழமொழிகளை நாம் தினமும் படித்தால் உடலும் உள்ளமும் ஆரோக்கியமாக இருக்கும் என்பதில் சிறிதளவும் ஐயமே இல்லை என்பதே என் கருத்தாகும்.

இந்தப் பதிவை வாசிப்பதன் மூலம், தினசரி வாழ்க்கையில் ஏற்படும் குழப்பங்களுக்குப் பின்னால் இருக்கும் மன அழுத்தத்தை நீக்கி, தெளிவான சிந்தனையையும், எதையும் எதிர்கொள்ளும் மன வலிமையையும் நீங்கள் பெற்றுக்கொள்வீர்கள். உங்கள் அன்றாட முடிவுகளை மிகச் சரியாகவும், நிதானமாகவும் எடுக்கக்கூடிய ஒரு புதிய வாழ்வியல் பார்வையை இது உங்களுக்குள் விதைக்கும்.

logo
Kalki Online
kalkionline.com