நாடோடிகளின் கைவண்ணம்: டெக்ஸ்டைல் உலகையே வியக்க வைக்கும் 'ரபரி எம்பிராய்டரி'!

பாலைவனக் கதைகள் முதல் சர்வதேச ஆடைகள் வரை: கட்ச் பகுதி பெண்களின் சாதனைப் பயணம்.
ரபரி எம்பிராய்டரி - Gujarat Handicrafts
ரபரி எம்பிராய்டரி - Gujarat Handicrafts
இந்திரா கோபாலன்

மங்கையர் மலரின் 40 வருஷத்து வாசகியான எனக்கு படிப்பது எழுதுவது மிகவும் பிடித்த விஷயம். புத்தக வடிவிலிருந்து ஆன் லைன் அவதாரத்தை ம.மலர் எடுத்தபின்பும் என்எழுத்து. ஆர்வத்தை ஊக்குவிக்கும் படி என் படைப்புகளை வெளியிடுவதில்.மகிழ்ச்சி. பி.எஸ சி பட்டதாரியான நான் திருமணத்திற்குப் பிறகு தான் எழுத்துப் பணியைத் தொடர்ந்தேன். ஃபெமினா சவ்வி உமன்ஸ்ஈரரசொசைடி போன்ற பல பத்திரிகைகளில் பல கடிதங்கள் எழுதி பரிசு பெற்றுள்ளேன்.தொடர்ந்து மங்கையர் மலருக்கு படைப்புகளை அனுப்புவதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்.

Updated on: 

குஜராத்தில் ரபரி எம்பிராய்டரி வேலைப்பாடு இதன் அடையாளமாகத் திகழ்கிறது.‌ குஜராத்தில் நாடோடி இனத்தைச் சேர்ந்த ரபரி இன மக்களால் இந்த எம்பிராய்டரி வேலைப்பாடு செய்யப்படுகிறது. இந்த ரபரி எம்பிராய்டரி பல பாலைவனங்களின் கதைகளை சில்க் நூல் மற்றும் கண்ணாடி அலங்கார வேலைப்பாடையும் பலவிதமான டிசைன்களையும் இணைத்து உலகில் ஒரு முக்கியத்துவத்தைப் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. இதற்கு டெக்ஸ்டைல் தொழிலில் நல்ல வரவேற்பு உள்ளது.

குஜராத்தின் கட்ச் பகுதியில் உள்ள பரி என்ற நாடோடி இன மக்களுக்கு விவசாயத்துக்கு மேல் ரபரி கைவேலைப்பாடும் ஒரு தொழிலாக உள்ளது குறிப்பிடத்தக்கது.‌ இவர்களின் டிசைன்களில் ஒட்டகங்கள் அதிகம் காணப்படும். இவர்களின் வாழ்க்கை முறையை எடுத்துரைப்பதாக விளங்குகிறது. இந்த எம்பிராயாடரி‌ பாரம்பரிய டிசைன்களில் சிறந்த அளவில் தங்கள் கைவினைக் திறனை வெளிப்படுத்துகிறார்கள்.

இதையும் படியுங்கள்:
வீட்ல கிஃப்ட் பேக்ஸ் குவியுதா? தூக்கி வீசாதீங்க... இப்படி ஸ்மார்ட்டா பயன்படுத்துங்க!
ரபரி எம்பிராய்டரி - Gujarat Handicrafts

இந்த ரபரி எம்பிராய்டரியில் மிகவும் குறிப்பிட்டுச் செல்லப்பட வேண்டிய விஷயம் இவர்கள் கைகளாலேயே சிறிய அளவில் கண்ணாடிகளை வெட்டூ எம்பிராய்டரி மில் சேர்ப்பது தனிச்சிறப்பான விஷயமாகும். இப்படி கண்ணாடி வேலைப்பாடுடன் கூடிய எம்பிராய்டரியை அப்லஸ் (Ablas) என்று கூறுகிறார்கள்.

அடர்த்தியான செயின் ஸ்டிச்சுகளோடு இந்த சிறிய கண்ணாடிகள் பொருத்தப்படுகின்றன.

இந்த கண்ணாடி வேலைப்பாடு ஒரு சாதாரண துணியைக் கூட அழகாக மாற்றுகிறது. நாடோடிகள் எப்போதும் அலைந்து கொண்டுடே இருப்பதால் இந்த கண்ணாடி வேலைப்பாடு சூரிய ஒளி படும்போது பிரதிபலிப்பதால் இது அவர்கள் பயணத்தில் திருஷ்டியை நீக்கி நன்மை பயக்கும் என்று நம்பிக்கை இந்த இன மக்களுக்கு இருக்கிறது.‌ சூரிய வெளிச்சத்தில் கண்ணாடி வேலைப்பாடுடன் கூடிய எம்பிராய்டரி துணிக்கு ஒரு பளபளப்பைத் தருகிறது. அனைவரையும் இது ஈர்க்கிறது.

ரபரி எம்பிராய்டரியில் பெரும்பாலும் வீட்டு வேலைகள், பாலைவன வாழ்க்கைமுறை ஆகியவற்றை நேர்த்தியாக எம்பிராய்டரி செய்யப்படுகிறது.‌ மேலும் இவர்கள் பல டிசைன்களையும் பயன்படுத்துகிறார்கள்.

மயில்கள், தேளின் கொடுக்கு, தண்ணீர் தொட்டிகள் மற்றும் பூக்கள் நிறைந்த மரங்கள் போன்ற டிசைன்களையும் பயன்படுத்துகிறார்கள். பரம்பரை பரம்பரையாக இந்த இனமக்கள் இந்த ரபரி எம்பிராய்டரி வேலைப்பாட்டை செய்து வருகிறார்கள்.

ரபரி எம்பிராய்டரி - Gujarat Handicrafts
ரபரி எம்பிராய்டரி - Gujarat HandicraftsImage credit: Gemini

தற்போதைய நவீன உலகிற்கேற்ப பாரம்பரிய டிசைன்களில் மாற்றங்களை புகுத்தியும் தங்கள் திறமையை வெளிப்படுத்துகிறார்கள். இந்த ரபரி எம்பிராய்டரியை நவீன ஜாக்கெட்டுகள் ஸ்கார்ஃப்கள் போன்றவற்றிற்கு ஏற்றாற்போல் தயாரிக்கிறார்கள். என்னதான் பல நவீனத்தைப் புகுத்தினாலும் இவர்களின் வாழ்க்கை முறையையும் பாலைவனக் கதைகளையையும் இவர்கள் தவிர்க்காமல் தங்கள் பாரம்பர்யம் குறையாமல் பார்த்துக் கொள்கிறார்கள். இதன் காரணத்தால் இவர்களின் திறமை பல வெளி இடங்களில் பரவி இவர்களுக்கு ஒரு சரியான அடையாளத்தையும், அங்கீகாரத்தையும் தந்திருக்கிறது.

நாடோடி மக்கள் இனத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் இவர்களின் கைவேலைப்பாடான ரபரி எம்பிராய்டரி மூலம் இவர்களின் வாழ்க்கை மேம்பட்டு வருவதும் அதன்மூலம் உலகமே இவர்களின் திறமையை திரும்பிப் பார்த்து டெக்ஸ்டைல் உலகில் ஒரு நல்ல புரட்சியை ஏற்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கதாகும். மேலும் இந்த ரபரி கைவேலைப்பாட்டில் ஈடுபடும் அனைவரும் பெண்கள் என்பதும் இந்த தொழில் அவர்களை முன்னேற்றி வருவதும் குறிப்பிடத்தக்கது.

logo
Kalki Online
kalkionline.com