நிலத்தடி நீர்மட்டம் உயற மழைநீர் சேகரிப்பு: தப்பாமல் செய்யவேண்டிய 6 விஷயங்கள்!

வடகிழக்கு பருவமழை தொடங்கும் முன் உங்கள் வீட்டில் செய்ய வேண்டிய எளிய மாற்றங்கள் இதோ!
மழைநீர் சேகரிப்பு - Rainwater Harvesting Tamil Nadu
மழைநீர் சேகரிப்பு - Rainwater Harvesting Tamil Nadu
ம.வசந்தி

மங்கையர் மலரின் நீண்டகால வாசககயான எனக்கு, புதிய புதிய விஷயங்களை தெரிந்து கொள்வதில் ஆர்வம் அதிகம். ஊக்கப்படுத்துவதும் உற்சாகப்படுத்துவதும் செயலற்றவர்களையும் ,செயல்பட வைக்கும் என்பதால், மோட்டிவேஷன் கட்டுரைகள் எழுவது மிகவும் பிடித்தமான ஒன்று .எனது எண்ணங்கள் நேர்மறையான சிந்தனை கொண்ட   கல்கி குழுமத்தோடு ஒன்றிப் போவதால் அவர்களுடன் கைகோர்த்து வீறு நடை போட்டுக் கொண்டிருக்கிறேன்.

Updated on: 

மழைநீர் சேகரிப்பு, மரங்கள் வளர்த்தல், தண்ணீர் சேமிப்பு குட்டைகள் அமைத்தல் போன்ற முறைகள் மூலம் நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்த முடியும். தண்ணீர் வீணாவதை தவிர்த்து, சுற்றுச்சூழலுக்கு உதவியாக செயல்படுவது ஒவ்வொரு குடிமகனின் பொறுப்பாகும்.

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை காலம் ஆரம்பமாகப் போகிறது. இயற்கையின் வரமான மழை நீரை சேமித்து வைப்பது ஒவ்வொருவரின் கடமையாகும். அதிகப் படியான மழை பெய்யும் காலமான வடமேற்கு பருவமழை காலத்தில் முறையாக மழை நீரை சேமித்து வைத்தால் நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்த முடியும். இதனால் தண்ணீர் பற்றாக்குறையை தவிர்ப்பதோடு விவசாயம் செழித்து வளரவும் உதவிகரமாக இருக்கும். அந்த வகையில் ஒவ்வொரு தனி நபரும் நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்த செய்ய வேண்டியவை குறித்து இப்பதிவில் காண்போம்.

மழைநீர் சேகரிப்பு அமைப்பு (Rainwater Harvesting)

புதிதாக கட்டும் வீடுகளிலும் அல்லது ஏற்கனவே கட்டிய பழைய வீடுகளிலும் நிலத்தடி நீர் உறிஞ்சும் குழிகள் அமைத்து குழாய்கள் மூலம் கட்டிடத்தின் கூரைகளில் விழும் மழை நீரை சேமிக்கவேண்டும்.

திறந்தவெளி கிணறுகளுக்கு மழைநீர் செல்லும் வகையில் குழாய்களை அமைத்து மண்ணுக்குள் செலுத்துவது நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்த உதவும். இதனை ஒவ்வொருவரும் கடைபிடிக்க தண்ணீர் வீணாவது தடுக்கப்படுவதோடு சுற்றுச்சூழலுக்கு நாம் செய்யும் சிறந்த உபகாரமாகவும் இருக்கும்.

மரங்கள் நடுதல் (Reforestation)

அதிக மரங்கள் உள்ள பகுதிகளில் மழை பெய்தால் மழை நீர் உடனடியாக மண்ணுக்குள் எளிதாக ஊடுருவிச் செல்லும். மேலும் மண் அரிப்பும் தடுக்கப்படும் என்பதால் அரசு கூறிய `வீட்டுக்கு ஒரு மரம் வளர்ப்போம்` என்ற கொள்கையை தனிநபர் ஒவ்வொருவரும் கண்டிப்பாக பின்பற்றுவதோடு முடிந்தவரை முடிந்த இடங்களில் மரங்களை வளர்த்தால் இயற்கை உங்களைப் பார்த்து புன்னகைக்கும்.

மழைநீர் சேகரிப்பு - Rainwater Harvesting Tamil Nadu
மழைநீர் சேகரிப்பு - Rainwater Harvesting Tamil Nadu

திறந்தவெளி கிணறுகள் மற்றும் நீர்நிலைகளைப் பராமரித்தல்

உங்கள் வீட்டிலும் அல்லது வீட்டிற்கு அருகிலும் உள்ள திறந்தவெளி கிணறுகளை முறையாக பராமரிப்பதோடு அருகில் உள்ள நீர் நிலைகளை மாசு படுத்தாமல் பராமரிப்பது நிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்த உதவும். அதோடு ஏரிகள், குளங்கள், கண்மாய்கள் மற்றும் திறந்தவெளி கிணறுகளில் உள்ளூர் மக்களும் அல்லது தன்னார்வலர்களும் அல்லது நண்பர்களும் இணைந்து பொழுதுபோக்காக தூர்வாரி ஆக்கிரமிப்புகளை தவிர்த்தால் நிலத்தடி நீர்மட்டம் உயர்வதோடு நாளைய தலைமுறை நம்மை வாழ்த்தும்.

தண்ணீர் பயன்பாட்டைக் குறைத்தல்

தண்ணீர் அதிகம் கிடைக்கும் மழைக்காலமானாலும் அல்லது வெயில் காலமானாலும் தண்ணீர் பயன்பாட்டை அதிகரிக்கும் குழாய்களை (Hose) பயன்படுத்துவதற்கு பதிலாக வாளி மற்றும் துணிகளை பயன்படுத்தி வாகனங்களை கழுவி தண்ணீர் பயன்பாட்டை குறைக்க வேண்டும். துணி துவைத்த நீர் (Grey water) சமையலறையில் இருந்து வெளியேறும் நீர் போன்றவற்றை தோட்டங்களுக்கு பயன்படுத்த நிலத்தடி நீர்மட்டம் உயர்வதோடு தண்ணீர் பயன்பாட்டை பெருமளவு குறைக்க முடியும்.

தண்ணீர் சேமிப்பு குட்டைகள் அமைத்தல்

நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்த விவசாய நிலங்களில் நீர் குட்டைகள் அல்லது சிறிய தடுப்பணைகளை அமைத்து மழை நீரை தேக்கி வைக்கலாம்.

இதையும் படியுங்கள்:
தலைக்கு மேல் தொங்கும் தண்ணீர் பஞ்சம்: தமிழகத்தின் தற்போதைய நிலையும், மீண்டுவரும் வழிகளும்!
மழைநீர் சேகரிப்பு - Rainwater Harvesting Tamil Nadu

சொட்டு நீர் பாசனம் (Drip Irrigation)

விவசாயம் செழிக்கவும், உணவுப் பற்றாக்குறையை போக்கவும், நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்தவும், அதிக நீர் தேவைப்படும் வெள்ளப் பாசனத்தை தவிர்ப்பதோடு, சொட்டு நீர் அல்லது தெளிப்பு நீர் பாசன முறைகளை பின்பற்றுவது சிறந்ததாகும்.

ஒவ்வொரு குடிமகனும் மேற்கூறியவற்றை தங்களது கடமையாகக் கொண்டு கண்ணும் கருத்துமாக பின்பற்றினால் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து விவசாயம் செழித்து நாடு சுபிட்சமாக இருக்கும். நாம் வாழும் காலத்திற்கும் நமக்குப் பிறகும் இச்செயல் உதவிகரமாக இருக்கும்.

logo
Kalki Online
kalkionline.com