தலைக்கு மேல் தொங்கும் தண்ணீர் பஞ்சம்: தமிழகத்தின் தற்போதைய நிலையும், மீண்டுவரும் வழிகளும்!

தமிழகத்தில் குறைந்து வரும் நீர்மட்டம் மற்றும் அணைகளின் நிலவரம் என்ன? நிலத்தடி நீரை பாதுகாத்து எதிர்காலத்தை காப்பதற்கான எளிய வழிகள்.
நிலத்தடி நீர் | Water Crisis TN
நிலத்தடி நீர் | Water Crisis TNImage credit: Gemini AI
Updated on

தமிழகத்தின் 90 நீர்த்தேக்கங்களில் தற்போது 31% மட்டுமே தண்ணீர் இருப்பு உள்ளது. தென்மேற்கு பருவமழை குறைவு, எல் நினோ தாக்கம், அதிக வெப்பம் காரணமாக அணைகள், ஏரிகள் வறண்டு வருகின்றன. கடல்நீர் அதிகம், நன்னீர் மிகக் குறைவு என்பதால் மழைநீரையே நம்பும் நிலை உருவாகியுள்ளது. மக்கள் தொகை, தொழிற்சாலை கழிவுகள், நிலத்தடி நீர் அதிக சுரண்டல் ஆகியவை பஞ்சத்தை தீவிரப்படுத்துகின்றன.

தற்போது தமிழகம் முழுவதும் உள்ள 90 முக்கிய நீர்த்தேக்கங்களின் மொத்த கொள்ளளவு 224 டிஎம்சி ஆகும். ஜூலை 2026 மாத நிலவரப்படி, இவற்றில் வெறும் 71.2 டிஎம்சி (சுமார் 31%) தண்ணீர் மட்டுமே இருப்பு உள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அணைகள் மற்றும் பாசன ஏரிகளில் நீர்வரத்து குறைந்துள்ளது. அண்டை மாநிலங்களிலும் மழை குறைந்ததால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து குறைந்துள்ளது.

பல ஏரிகளும், விவசாயக் குளங்களும் நீரில்லாமல் முற்றிலும் வறண்டு காணப்படுகின்றன.தென்மேற்கு பருவமழை எதிர்பார்த்த அளவுக்கு பெய்யாதது, எல் நினோ தாக்கம், அதிக வெப்பம் காரணமாக ஏரிகளில் உள்ள மீதமுள்ள தண்ணீரும் ஆவியாகி வருவது ஆகியவை தண்ணீர் பஞ்சத்திற்கான காரணங்களாகக் கருதப்படுகின்றன.

நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் இந்த பூமியில் 79% தண்ணீர் உள்ளது. ஆனால், இதில் 97.50% கடல்நீர்தான். மீதமுள்ள 2.5% நன்னீராகவும், மூன்றில் ஒரு பங்கு, பனிக்கட்டிகளாகவும் உள்ளன. எனவே, மிக குறைந்த அளவிலான தண்ணீரே நமக்கு கிடைக்கிறது. இதனால், பெரும்பாலும் மழையை மட்டுமே நம்பியிருக்க வேண்டிய நிலை நமக்கு ஏற்பட்டுள்ளது. பெருகி வரும் மக்கள் தொகையால் தண்ணீர் தேவை நாளுக்கு நாள் நமக்கு அதிகரித்து வருகிறது.

இதையும் படியுங்கள்:
நம்பவே முடியாத அமேசான் காடுகளின் திகிலூட்டும் மர்மங்கள்!
நிலத்தடி நீர் | Water Crisis TN

ஆதி காலம் தொட்டே மனிதன் தனது வாழ்விடத்தை நீர் நிலைகளை அண்டியே அமைத்து வந்தான். நீர் குடிப்பதற்கு, சமைப்பதற்கு, போன்ற அன்றாட தேவைகளுக்கு மட்டுமல்லாமல் மின்சக்தி உற்பத்தி, விவசாயம் செய்தல் போன்றனவற்றிற்கும் பயன்பட்டு வருகின்றது.

நிலத்தடி நீர் | TN Water crisis and solution
நிலத்தடி நீர் | TN Water crisis and solutionImage credit: Chatgpt

அதிகளவான தொழிற்சாலைகளின் கழிவுகள் நீர்நிலைகளிலேயே கொட்டப்படுகின்றன. குப்பைளை நீர்நிலைகளில் கொட்டுவதால் அதிக அளவான மாசடைதலை ஏற்படுத்துகின்றது. மேலும் குழாய்கள் மூலம் நிலத்தடி நீரை உறுஞ்சுதல் நீர்வளத்தை அரிதாக்குகின்றது. இந்நிலையில் நீரை மிகவும் சிக்கனமாக பயன்படுத்தினால் மட்டுமே எதிர்கால சந்ததியினருக்கு நீர் அளிப்பினை நாம் உறுதி செய்ய முடியும்.

மழைக்காலத்தில் மழைநீரை தேவையற்று கடலில் சேரவிடாது குளங்கள், அணைக்கட்டுக்களை அமைத்து சேகரித்து அதனை வேளாண்மைக்கு பயன்படுத்த வேண்டும். மழையை உருவாக்குவதற்கு மூல காரணமாக விளங்குபவை காடுகள் ஆகும்.

ஆகவே காடுகளை அழிக்காமல் பாதுகாப்பதும், மேலும் மரங்களை நடுவதும் மிகவும் அவசியமானது. நீர் வளத்தை பாதுகாத்தல் நம் ஒவ்வொருவரினதும் தலையாய கடமையாக மாற வேண்டும். இந்நிலையில் நாம் நீரை அனைத்து நிலைகளிலும் மிகச் சிக்கனமாக பயன்படுத்த வேண்டும்.

வீட்டைச் சுற்றி சிறிதளவேனும் மண்தரையாக விட்டு அதில் சில செடிகளை நட்டு உபயோகப்படுத்தப்பட்ட நீர், குளிக்கும் நீர் அதற்கு உபயோகமாகுமாறு செய்யவேண்டும். அதுபோல வீட்டுக்கு இரண்டு மரம் வளர்க்க வேண்டும் என்பதை கட்டாயமாக்கலாம்.

இதையும் படியுங்கள்:
நேபாளம் வெள்ளப் பெருக்கின் போது நிகழ்ந்த நெகிழ்ச்சியான சம்பவங்கள்...!
நிலத்தடி நீர் | Water Crisis TN

நிலத்தடி நீரைப் பாதுகாக்க அதிக ஆழ்துளை கிணறுகள் அமைப்பதைக் கட்டுப்படுத்த வேண்டும். தற்போது 500அடிக்கு கீழ் நிறைய இடங்களில் நிலத்தடி நீர் சென்று விட்டது. கழிவுநீரை மறுசுழற்சி செய்து விவசாயம் மற்றும் இதர தேவைகளுக்குப் பயன்படுத்தும் முறைகளை விரிவுபடுத்த வேண்டும்.

ஒவ்வொரு வீட்டிலும் நிலத்தடி நீர் சேமிப்பு அமைப்பு மிகவும் அவசியம். இதனை கடுமையாக கடைபிடிக்க வேண்டும். மாடி வீடுகளில் நிலத்தடி நீர் சேமிப்பு அமைப்பு வைக்காதவர்களுக்கு அரசு அபராதம் விதிக்கலாம். அந்த வீட்டிற்கு அந்த அமைப்பினை ஏற்படுத்தி அதற்குண்டான தொகையையும் வசூலிக்கலாம்.

அடை மழை பெய்யும் போதும் அவ்வளவு தண்ணீரும் கடலில் சென்று கலப்பது தடுக்கப்பட வேண்டும். மக்கள் நலன் கருதி குளிர்பானங்கள் மற்றும் நீரை பெரிய வியாபார முறையில் விற்கும் நிறுவனங்களை நிலத்தடி நீரை உபயோகிக்க தடைவிதிக்க வேண்டும், இலவசமாக கிடைக்கும் மழைநீரை ஏன் அளவு கடந்த விலையில் நாம் வாங்க வேண்டும்? இதற்கு நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்துவது ஒன்றே வழியாகும். அதைப் பற்றி நாம் அனைவரும் சிந்திப்போம். உடனே செயல்படுவோம்.

கடுமையான வறட்சியில் இருந்து உங்கள் வீட்டைப் பாதுகாக்கவும், நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்தி எதிர்கால குடிநீர் தேவையை எந்தவித தடையுமின்றி உறுதியாகவும் நம்பிக்கையோடும் பூர்த்தி செய்து கொள்ள வழிகாட்டுகிறது.

logo
Kalki Online
kalkionline.com