இந்தச் சிறுமியின் கண்களை மட்டும் உற்றுப் பார்க்காதீர்கள்! ஏன் தெரியுமா?

Lombardo's embalmed body
Lombardo's embalmed body Img crdit: wikipedia
Published on

கலை என்பது மனித உணர்வுகளின் பிரதிபலிப்பு. ஆனால் சில சமயங்களில், அந்த உணர்வு ரசிப்பாக இல்லாமல் ஒருவிதமான நடுக்கமாக மாறிவிடுகிறது. உலகெங்கிலும் பல சிலைகள் ஆச்சரியத்தை ஏற்படுத்தினாலும், இத்தாலியின் சிசிலி மாகாணத்தில் உள்ள ரோசாலியா லோம்பார்டோ என்ற சிறுமியின் உடல் வைக்கப்பட்டிருக்கும் விதம், இன்றுவரை தீர்க்கப்படாத ஒரு மர்மமாகவே பார்க்கப்படுகிறது.

1920-ஆம் ஆண்டு, நிமோனியா காய்ச்சலால் தனது இரண்டாவது வயதிலேயே உயிரிழந்த சிறுமிதான் ரோசாலியா. அவரது தந்தை தனது மகளின் பிரிவைத் தாங்க முடியாமல், அவளது உடலைச் சிதைந்து போகாமல் பாதுகாக்க 'ஆல்ஃபிரடோ சலாஃபியா' என்ற நிபுணரிடம் ஒப்படைத்தார். அவர் பயன்படுத்திய விசேஷ ரசாயனக் கலவையால், 100 ஆண்டுகளைக் கடந்தும் அந்தச் சிறுமி இன்றும் தூங்குவது போன்றே காட்சியளிக்கிறாள். இதனாலேயே இவள் 'தூங்கும் அழகி (Sleeping Beauty)' என்று அழைக்கப்படுகிறாள்.

இந்தச் சிறுமியின் உடல் ஒரு கண்ணாடிப் பெட்டிக்குள் வைக்கப்பட்டுள்ளது. அங்கு வரும் சுற்றுலாப் பயணிகள் பலரும் சொல்லும் ஒரு அதிரடித் தகவல்; "அந்தச் சிறுமி அவ்வப்போது கண்ணைத் திறந்து நம்மைப் பார்க்கிறாள்" என்பதுதான். இந்தச் செய்தி காட்டுத்தீ போலப் பரவி, உலகம் முழுவதையும் சிசிலி நோக்கித் திருப்பியது. ஒரு பதப்படுத்தப்பட்ட உடல் எப்படிக் கண்ணைத் திறக்கும்? என்ற கேள்வி பலரையும் உறைய வைத்தது.

இதையும் படியுங்கள்:
மூர் மார்க்கெட் முதல் பட்டாணி சுண்டல் வரை... மெட்ராஸ் நல்ல மெட்ராஸ்!
Lombardo's embalmed body

ஆராய்ச்சியாளர்கள் இந்த நிகழ்வை உன்னிப்பாகக் கவனித்தபோது, இதில் பேய் அல்லது ஆவி போன்ற எந்த மர்மமும் இல்லை என்பது தெரியவந்தது. இதற்குப் பின்னால் இரண்டு முக்கியக் காரணங்கள் உள்ளன:

1. ஒளிச் சிதறல் (Optical Illusion): அந்த அருங்காட்சியகத்தின் ஜன்னல்கள் வழியாக வரும் சூரிய ஒளி, நாள் முழுவதும் வெவ்வேறு கோணங்களில் விழுகிறது. ஒளி அந்தச் சிறுமியின் இமைகளின் மேல் பட்டுத் தெறிக்கும்போது, நிழல்கள் மாறுபடுவதால் அவள் கண்ணைத் திறப்பது போன்ற ஒரு தோற்றம் ஏற்படுகிறது.

இதையும் படியுங்கள்:
சுயமாகக் கற்று சாதிப்பது எப்படி? ஜி.டி. நாயுடுவின் வாழ்க்கைப் பாடம்!
Lombardo's embalmed body

2. முழுமையாக மூடப்படாத கண்கள்: உண்மையில் அந்தச் சிறுமியின் கண்கள் 100% மூடப்படவில்லை. இமைகள் லேசாகத் திறந்தே இருக்கின்றன. அங்கு நிலவும் ஈரப்பதம் மற்றும் ஒளியின் மாறுபாட்டால், மக்கள் பார்க்கும்போது அவள் கண்ணைத் திறந்து மூடுவது போன்ற பிரமை உண்டாகிறது.

அறிவியல் பூர்வமான விளக்கங்கள் இருந்தாலும், அந்த இருண்ட அறையில் அந்தச் சிறுமியை நேருக்கு நேர் உற்றுப் பார்க்கும்போது, அறிவியலையும் தாண்டி ஒருவிதமான இனம் புரியாத நடுக்கம் ஏற்படுவதை யாராலும் மறுக்க முடியாது. இது கலைஞனின் திறமையா அல்லது இயற்கையின் விளையாட்டா என்பது இன்றும் விவாதத்திற்குரியதுதான்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com