தங்கத்தைவிட விலை உயர்ந்ததா? குங்குமப்பூவை ஏன் 'சிவப்பு தங்கம்' என அழைக்கிறார்கள் தெரியுமா?

கலாச்சாரம் முதல் மருத்துவம் வரை - குங்குமப்பூவின் வியக்க வைக்கும் வரலாற்று ரகசியங்கள் இதோ.
குங்குமப்பூ பயன்கள் - Saffron benefits
குங்குமப்பூ பயன்கள் - Saffron benefits
கே.எஸ்.கிருஷ்ணவேனி

"கே.எஸ்.கிருஷ்ணவேனி, வைஷ்ணவ் கல்லூரியின் முன்னாள் மாணவி. கல்கி, மங்கையர் மலர், விகடன் போன்ற இதழ்கள் மற்றும் நாவல்களை படித்து, எழுதும் ஆர்வமும் மேலோங்க, 1992-ல், சமையல் குறிப்புகள் குறித்த சிறு கட்டுரைகளை எழுதத் தொடங்கினார். அவை 'மங்கையர் மலர்' ​​இதழில் தொடர்ந்து வெளியாகின. மேலும் பல இதழ்களில் எழுதிப் பல பரிசுகளை வென்றுள்ளார். 'பட்டிமன்றங்களில்' பங்கேற்ற அனுபவமும் உண்டு. தற்போது கல்கி ஆன்லைனில் எழுதி வருகிறார். ஆர்வம் மிக்கவர். பல்வேறு பிரிவுகளில் பல தலைப்புகளில் சுவாரஸ்யமான கட்டுரைகளை எழுத வல்லவர். மிக விரைவாக எழுதவும் கூடியவர்."

Updated on: 

இந்திய கலாச்சாரத்திலும் பாரம்பரியத்திலும் குங்குமப்பூ என்பது வெறும் ஒரு மசாலாப் பொருள் மட்டுமல்ல, அது தூய்மை, ஆன்மீகம், மங்களம் மற்றும் உயர் அந்தஸ்தின் அடையாளமாக விளங்குகிறது. உலகிலேயே மிக விலையுயர்ந்த மசாலாப் பொருளான இது, இந்திய மக்களின் அன்றாட வாழ்விலும் வழிபாடுகளிலும் ஆழமாக வேரூன்றி உள்ளது.

குங்குமப்பூ பயன்கள்:

பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாக மதச் சடங்குகள், ஆயுர்வேதம் மற்றும் சமையல் கலையில் இது முதன்மையான இடத்தைப் பிடித்துள்ளது. இதற்கு புவிசார் குறியீடு (GI Tag) வழங்கப்பட்டுள்ளது நாட்டின் பெருமையாகும்.

காஷ்மீரின் பாரம்பரியம்:

இந்தியாவின் "குங்குமப்பூ கிண்ணம்" என்று அழைக்கப்படும் காஷ்மீரின் (பம்பூர் பகுதி) கலாச்சாரத்தோடு இது பின்னிப் பிணைந்துள்ளது. காஷ்மீரி 'கஹ்வா' (Kahwa) தேநீர் குங்குமப்பூவின்றி நிறைவடையாது. அங்குள்ள நாட்டுப்புறப் பாடல்களிலும் இதன் பெருமை பேசப்படுகிறது.

இந்திய தேசியக்கொடியின் மேல் பட்டையில் உள்ள காவி நிறம் (Saffron colour) நாட்டின் வீரம் மற்றும் தியாகத்தைக் குறிக்கிறது. காஷ்மீரி கலாச்சாரத்தில் குங்குமப்பூ அவர்களின் வாழ்வாதாரமாகவும், இலக்கியம், கவிதைகள் மற்றும் கலைகளின் உத்வேகமாகவும் திகழ்கிறது.

ஆன்மீகம் மற்றும் மங்களக் குறியீடு:

இந்து சமயத்தில் குங்குமப்பூவின் நிறமான காவி என்பது அக்னி மற்றும் சூரியனின் அடையாளமாகக் கருதப்படுகிறது. இந்து, பௌத்தம் மற்றும் சமண மதங்களில் குங்கும நிறம் (துறவற நிறம்) என்பது புனிதமாகக் கருதப்படுகிறது.

இந்தியத் துறவிகள் மற்றும் ஆன்மீகவாதிகள் பற்றற்ற நிலையைக் குறிக்க காவி நிற ஆடைகளை அணிகின்றனர். கடவுள் வழிபாடுகளில் இறைவனுக்கு நெற்றியில் திலகம் இடுவதற்கும், கடவுள் சிலைகளுக்கு அபிஷேகம் செய்யவும் குங்குமப்பூ நீர் பயன்படுத்தப் படுகிறது. இது நேர்மறை ஆற்றலையும் தெய்வீகத் தன்மையையும் குறிக்கிறது.

குங்குமப்பூ பயன்கள் - Saffron benefits
குங்குமப்பூ பயன்கள் - Saffron benefits

அரச குடும்பத்து சமையல்:

முகலாயர் காலம் முதல் இன்று வரை பிரியாணி, கீர், லட்டு, ஜிலேபி, பேடா போன்ற ஆடம்பரமான மற்றும் பண்டிகைக்கால பாரம்பரிய உணவுகளில் நிறத்திற்காகவும், அதன் தனித்துவமான நறுமணத்திற்காகவும் குங்குமப்பூ சேர்க்கப்படுகிறது.

இந்தியத் திருமண சடங்குகளில் குறிப்பாக 'ஹல்தி' (மஞ்சள் நீர் வைக்கும் விழா) நிகழ்வுகளில் குங்குமப்பூ ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது. மணமக்களின் சருமத்தை பொலிவாக்கவும், திருமண வாழ்வு செழிப்பாக அமையவும் குங்குமப்பூ கலந்த கலவைகள் பூசப்படுகின்றன. இது மகிழ்ச்சி மற்றும் நல்லதிர்ஷ்டத்தின் குறியீடாகப் பார்க்கப்படுகிறது.

ஆயுர்வேத மருத்துவம்:

3000 ஆண்டுகளுக்கும் மேலான ஆயுர்வேத வரலாற்றில் குங்குமப்பூ (குங்குமா) உடலுக்கு புத்துணர்ச்சி அளிக்கும், மன அழுத்தத்தைக் குறைக்கும் மற்றும் சருமப் பொலிவை மேம்படுத்தும் ஒரு மூலிகையாக பயன்படுத்தப்படுகிறது.

குங்குமப்பூ (Saffron) என்பது குரோக்கஸ் சாடிவஸ் (Crocus Sativus) எனப்படும் ஊதா நிற மலர்களின் உள்பகுதியில் இருந்து தயாரிக்கப்படுகிறது. இது இரிடேசியே (Iridaceae) குடும்பத்தைச் சேர்ந்தது. ஒவ்வொரு மலரிலும் உள்ள மூன்று சிவப்பு நிற சூலகமுடிகள் (Stigma) மற்றும் அதன் தண்டுப் பகுதியே குங்குமப்பூவாக பயன்படுத்தப் படுகிறது. 1 கிராம் குங்குமப்பூ தயாரிக்க சுமார் 150 மலர்கள் தேவைப்படுகின்றன.

இதையும் படியுங்கள்:
பூப்புனித நீராட்டு விழா பின்னால் இருக்கும் அதிர வைக்கும் அறிவியல்!
குங்குமப்பூ பயன்கள் - Saffron benefits

இவை அனைத்தும் கைமுறையாகப் பறித்து தேர்ந்தெடுக்கப்படுகின்றன. இந்தியாவில் ஜம்மு-காஷ்மீர் பகுதியில் இது அதிகமாக விளைகிறது. உலக அளவில் ஈரான் முதலிடத்தில் உள்ளது.

குரோக்கஸ் செடியில் அழகாக பூக்கும் ஊதா நிறப் பூக்களின் மையப் பகுதியில் 3 நீளமான, பிரகாசமான சிவப்பு நிற சூலகக்கால்கள் இருக்கும். இவற்றைத் தான் குங்குமப்பூ தயாரிக்க பயன்படுத்துகிறார்கள். ஒரு கிலோ குங்குமப்பூவை எடுப்பதற்கு சுமார் 1,50,000 மலர்கள் தேவைப்படுகின்றன.

இந்த மலர்கள் மிகவும் மென்மையானவை என்பதால் அதிகாலையில் இந்த மலர்கள் மலர்ந்தவுடன் மனிதக் கைகளால் மட்டுமே மிகவும் கவனமாகப் பறிக்கப்பட்டு, உள்ளிருக்கும் மூன்று சூலக முடிகள் பிரித்தெடுக்கப்பட்டு உலர வைக்கப்படுகின்றன.

மருத்துவ குணமிக்க வேதிப்பொருட்கள்:

குங்குமப்பூவின் ஆற்றலுக்கு அடிப்படையாக விளங்குபவை அதில் உள்ள பைக்ரோக்குரோசின் (Picrocrocin) - கசப்பு சுவைக்கு காரணமாகிறது. சாஃப்ரானல் (Safranal)- தனித்துவமான நறுமணத்திற்குக் காரணமாகிறது.

குரோசின் - தங்கம் போன்ற மஞ்சள் நிறத்திற்கு காரணமாகிறது. இவையே குங்குமப்பூவிற்கு அதன் தனித்துவமான நிறம், மயக்கும் நறுமணம் மற்றும் சக்திவாய்ந்த ஆன்டி ஆக்சிடென்ட் பண்புகளை அளிக்கின்றது.

இதையும் படியுங்கள்:
மரமல்லி: உங்கள் வீட்டை சுபிட்சமாக்கும் மணம் வீசும் தெய்வீக மரம்!
குங்குமப்பூ பயன்கள் - Saffron benefits