

மரமல்லி மரம் 'இந்திய கார்க் மரம்' என்றும் அழைக்கப்படுகிறது.
இது இரவில் பூக்கும் வெள்ளை நிற நறுமணம் மிக்க பூக்களை கொண்ட ஒரு பசுமை மாறா மரம். இது தெற்கு ஆசியா மற்றும் தென்கிழக்கு ஆசியா ஆகியப் பகுதிகளை சேர்ந்தது.
மரமல்லி மரத்தின் பண்புகள்:
உயரமாக வளரும் இந்த மரங்கள் பரந்து விரிந்த கிளைகளுடன் கரும்பச்சை நிறத்தில் சற்றே அகன்ற இலைகளுடன் உருவத்தில் நாதஸ்வரத்தை ஒத்த நீண்ட நறுமணமுடைய வெள்ளை நிறத்தில் எழிலுடன் மணமுடனும் விளங்கும் மலர்களுடன் காட்சியளிக்கும்.
வெள்ளை நிறத்தில் அளவில் சற்றே நீண்ட மலர்கள் தரும் வாசனை மனதுக்கு புத்துணர்வையும், அமைதியையும் அளிக்கும். பன்னீர் மலர்கள் உள்ள இடத்தில் எதிர்மறை எண்ணங்கள் விலகி மனதில் தன்னம்பிக்கை எண்ணங்கள் உருவாகும். பன்னீர் மலர்கள் உடலுக்கும் மனதுக்கும் சக்தியை அளிக்கும்.
மலர்கள் பூக்கும் காலங்களில் மரத்தின் அடியில் பூ மெத்தை போல பரவி அந்த இடங்களில் நறுமணத்தை பரப்பும் பன்னீர் மலர்கள் இயற்கையின் அருட்கொடை என்று சொல்லலாம்.
இது இரவில் மலரும் இயல்பு உடைய இதன்மலர்களை நாடி பறவைகளும், வண்டுகளும், தேனீக்களும் இரவில் இந்த மரத்தை சுற்றி வந்து இதன் தேனை உண்ணும்.
இந்த மரமானது 18 முதல் 25 மீட்டர் உயரம் வரை உயரமாக வளரக்கூடியது. இதன் கிளைகள் ஏழு முதல் 11 மீட்டர் வரை விரிகின்றன. இந்த மரம் ஆறு முதல் 8 ஆண்டுகளில் முதிர்ச்சி அடையும். 40 ஆண்டுகள் வரை வாழும் தன்மை கொண்டது.
இது பல்வேறு மண் வகைகளிலும் தட்பவெப்ப நிலையிலும் வளரக்கூடிய மரம் என்றாலும், ஈரமான தட்பவெப்பநிலையில் இது நன்கு வளரக்கூடியது.
மரமல்லி மரம் பசுமையானதும் உயரமாக பிரமிடு போன்ற தண்டைக் கொண்டது. இந்த மரம் இளம் மஞ்சள், வெள்ளை நிறம் கொண்டது. இந்த மரமானது வலுவான காற்றில் உடைபடக்கூடியது. இதன் இலை வேப்ப இலையை மாதிரியே உள்ளது.
இதன் மலர்களானது மலரடிச் செதில் தோற்றம் இல்லாதது. நீளமான ஐந்து அடுக்கான வெண்மையான மணம் உள்ள பல மலர்கள் இதில் உண்டாகும். இவை இரு பால் சேர்க்கை மற்றும் இருபக்க சமச்சீர் கொண்டவை.
பூவானது மணி வடிவ புள்ளி வட்டத்தில் 5 சிறிய மடல்களை கொண்டிருக்கும். மலர் நான்கு பூக்களை கொண்டுள்ளது.
இந்த தாவர குடும்பத்தில் பிற தாவரங்களைப் போல் அல்லாமல் பூர் துப்பைகள் வேறுபட்டவை. அல்லி வட்டமானது ஐந்து இதழ்கள் அடியில் இணைந்து நீண்ட குழல் வடிவாக இருக்கும். இதன் குழல் நீளமாக இருக்கும். மேலே 5 இதழ்கள், மடல் 2.25 சென்டிமீட்டர் அகன்று விரிந்து மடல்கள் சமம் இல்லாததாக இருக்கும்.
இதன் கனி ஆனது நீண்ட மெலிந்த காப்ஸூலாக தடுப்புச் சுவருக்கு இணையாக அமுங்கி இருக்கும். கனி பல விதைகளை உடையது.
மரமல்லி மரம் தட்டையான அகன்ற கண்ணாடி போன்ற இறகு கொண்ட விதைகளை கொண்டு உள்ளது. இதன் விதைகள் பரவுவதற்கு ஏதுவாக பறவைகளால் இதன் பழங்கள் உண்ணப்படுகின்றன.
இதை வளர்க்கும் விதமாக பழம் பழுத்த உடனேயே விதைக்கப்படாவிட்டால் விதைகளின் முளைப்புத் திறன் குறைவாக இருக்கும். எனவே இந்த தாவரமானது பொதுவாக வெட்ட வெளியின் மூலம் நடப்படுகிறது.
மரமல்லி மரத்தின் ஆரோக்கிய நன்மைகள்:
பெண்களுக்கு ஏற்படும் உடல் நல பாதிப்புகள் நீங்கிவிடும் என்று சாஸ்திரங்கள் கூறுகிறது.
இதன் பூக்கள் மற்றும் இலைகள் மருத்துவ பயன்களை கொண்டுள்ளன. குறிப்பாக பாரம்பரிய மருத்துவத்தில் சுவாசக் கோளாறுகள், காய்ச்சல் மற்றும் வலி நிவாரணத்திற்காக பயன்படுத்தப்படுகிறது. மேலும், இதன் மணம் மன அழுத்தத்தை குறைக்கும்.
பன்னீர் மர பட்டைகளை நீரில் காய்ச்சி சுண்டியதும் குடித்து வந்தால் பேதி மற்றும் வயிற்று கழிச்சல் பாதிப்பு குணமாகும்.
மனிதர்களின் மனதை அமைதிப்படுத்தும் தன்மை மிக்கதால் அரோமா தெரபி என்னும் வாசனை மருத்துவத்திலும், வாசனைத் திரவிய தயாரிப்பிலும் பயன்படுத்துகின்றனர்.
இதன் வேர்கள் உடல் நச்சை போக்கும் தன்மை மிக்கது. ஜீரத்தை போக்கி மனிதர்களின் நுரையீரலுக்கு எதிர்ப்பு சக்தி தரும் ஆற்றல் மிக்கது .இதன் வேரை நீரில் இட்டு காய்ச்சி குடித்தால் நல்லது.
காய்ந்த பன்னீர் மலர்களை சாம்பிராணி புகையில் இட்டு இந்த வாசனை மூலம் சுவாச பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும்.
இதன்மலர்களை காய்ச்சி பருகி வர உடல் நல பாதிப்பால் ஏற்படும் வாந்தி எடுப்பது, தொண்டை வறட்சியை போக்கி, பித்த பாதிப்புகளை சரி செய்யும். நாவின் சுவையினை நீக்கி உணர்வுகளின் சுவை அறிய வைக்கும்.
தற்காலம் கட்டப்படும் வீடுகளின் முன்புறம் வாஸ்து காரணத்துக்காக வீடுகளுக்கு சுபிட்சம் தருபவையாக பன்னீர் மரங்கள் நட்டு வளர்க்கப்படுகின்றன. இந்த மரங்கள் விபத்தை தடுக்கும் தன்மை உடையவை என்பதால் வீட்டில் வளர்க்கின்றனர்.
தெருக்களில், சாலையோரங்களில், நெடுஞ்சாலைகளில் இந்த மரத்தை பரவலாக வளர்க்க ஆர்வம் காட்டுகின்றனர்.
மரமல்லி மருத்துவ குணங்களைக் கொண்டிருந்தாலும் மருத்துவ பயனுக்கு பயன்படுத்தும் ஒரு டாக்டரின் ஆலோசனை பெறுவது மிக அவசியம். இதை சரியான அளவில் பயன்படுத்த வேண்டும்.