

சம்பாரி மேளம் (Sambari Melam) என்பது கேரளாவிலும் தமிழகத்திலும் சில பகுதிகளிலும் கோவில்கள் மற்றும் திருவிழாக்கள் போன்றவற்றில் இசைக்கப்படும் பாரம்பரிய தாள வாத்திய குழுவாகும். இதில் செண்டை மேளம் போன்ற கருவிகள் பயன்படுத்தப்பட்டு தெய்வீகமான உற்சாகமான இசை உருவாகிறது. இந்த இசை கேட்போரை மெய் மறக்க செய்யும்.
சம்பாரி மேளத்தில், நாயனம் மற்றும் தாள வாத்திய கருவிகள் இசைக்கப்படும். இது சக்தி வாய்ந்த தாளங்களையும் மெய் மறக்கச் செய்யும் இசையையும் கொண்டது. இந்த இசையானது ஆயிரம் பேர் கூடும் கூட்டத்தையும் ஆட்டுவிக்கும் திறன் கொண்டது.
பெரும்பாலும் கேரளா மற்றும் தமிழக கோவில் திருவிழாக்கள் ஊர்வலங்கள் விசேஷ நிகழ்ச்சிகள் போன்றவற்றில் வாசிக்கப்படுகிறது. இது கேரளாவில் பஞ்சாரி மேளத்துடன் நெருங்கிய தொடர்பு கொண்டது.
இது தமிழ் வாத்தியமான கொடு கொட்டி என்பதை குறிக்கும். சுருக்கமாகச் சொன்னால் சம்பாரி மேளம் என்பது பாரம்பரியமான கலை இசைக்கருவிகள் வாசிக்கும் ஒரு மேளக் குழுவாகும். இது கேட்போரை பரவசப்படுத்தும். துளு நாட்டில் இது செண்டே என அழைக்கப்படுகிறது.
செண்டை மேளம் பதினெட்டாம் நூற்றாண்டில் முழுமையான வடிவம் பெற்றது.
செண்டை என்பது நீண்ட உருளை வடிவத்தில் உள்ள மர கருவியாகும். இது இரண்டு அடி நீளமும் ஒரு அடி விட்டமும் கொண்டது. இதன் இரண்டு முனைகளும் செண்டை விட்டங்களால் மூடப்பட்டு இருக்கும் பொதுவாக இது பசு மாட்டின் தோலால் உண்டாக்கப்பட்டது.
காளை மாட்டின் தோலை இதற்கு பயன்படுத்த மாட்டார்கள். தரம் மிக்க ஒலிக்காக பசு மாட்டின் அடி வயிற்று தோல் பயன்படுத்தப்படுகிறது. இந்த இசை கருவி வாசிப்பவர்களில் தோளில் தொங்க விடப்படுகிறது செண்டையின் மேல் பகுதியில் மட்டும் கோல் கொட்டப்படும். உரத்த ஒலிக்காக இந்த பறை பிரசித்தி பெற்றது. செண்டைக்கு இரண்டு பக்கம் உண்டு. இடம் தலை, வலம் தலை என இரண்டு பக்கங்கள் உள்ளது.
இடம் தலையில் இரண்டு அடுக்கு மாட்டு தோலும் வலந்தலையில் ஐந்தடுக்கு மாட்டுத் தோலும் கொண்டது. செண்டை வட்டம் ஈரப்பனை மூங்கில் மரத்தால் செய்யப்பட்டது. இதை கட்டுவதற்கு பணிச்சை மரத்தின் பசை உபயோகப்படுத்தப்படுகிறது. செண்டையில் உடற்பகுதி பலாமரத்தால் செய்யப்படும். நன்கு அதிர் ஒலிக்காக இது செய்யப்படுகிறது.
செண்டை அக்காலத்தில் சமஸ்தான நிகழ்ச்சிகளில் பிரதானமாக இடம்பெறும். வெள்ளார்க்காடு செண்டை மேளம் மிகவும் புகழ்பெற்றது. கேரளத்தில் திருச்சூர் பூரதிருவிழா செண்டை கலைஞர்கள் ஒன்று கூடி இதனை இசைப்பார்கள்.
இந்த இசையை கேட்டால் குழந்தைகளுக்கு கூட தூக்கம் வரும். இந்த இசையில் கருப்பு நிலாக்களின் கதைகள் மிகவும் பிரசித்தம். இதனை சிங்காரி மேளம் எனவும் வர்ணிக்கிறார்கள். கர்நாடகத்தில் யட்சகான நிகழ்ச்சியில் பயன்படுத்துகிறார்கள்.
செண்டை மேளம் 300 ஆண்டுகள் பழமையானது. இதில் பஞ்சாரி மேளம், பாண்டிமேளம், சம்பமேளம், செம்பட மேளம், அடந்த மேளம், துருவ மேளம் என பல வகைகள் உள்ளன. சிங்காரி மேளம் குறைந்த விலை கொண்டது. இந்த இசையை வாசிக்கும் போது கணபதி பாடலுடன் தொடங்கி கணபதி இசையுடன் முடிவடைகிறது.
தமிழ்நாட்டில் தூத்துக்குடி மாவட்டம் கழுகுமலை அருகில் உள்ள கரடிகுளம் என்ற ஊரில் சம்பாரி இசைக் குழுவினர் கடந்த 40 ஆண்டுகளுக்கு முன்பு கொடிகட்டி பறந்தனர். இந்தக் குழுவினர் வாசிக்காத இடமே கிடையாது. தூத்துக்குடி மாவட்டம் நெல்லை மாவட்டம் தவிர பிற மாவட்டங்களுக்கும் திருவிழாக்கள் கலை நிகழ்ச்சிகள் போன்றவற்றில் கலந்து கொண்டு இவர்கள் இசையை பரப்பி வந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.