
சீக்ரெட் சான்டா என்பது ஒரு மகிழ்ச்சியான பாரம்பரியமான விளையாட்டாகும். கிறிஸ்துமஸ் பண்டிகை உலகளவில் கொண்டாடப்படும் பண்டிகையாகும். டிசம்பர் 25-ம்தேதி கொண்டாடப்படும் கிறிஸ்துமஸ், இயேசு கிறிஸ்துவின் பிறப்பைக் கொண்டாடுகிறது. மேலும் இந்த பண்டிகை அன்பை பகிர்வதற்கான ஒரு நேரமாகும்.
தற்போது கிறிஸ்துமல் கொண்டாட்டங்கள் ஆரம்பமாகி விட்டன. உங்கள் அலுவலகத்தில் உங்களுடன் பணி புரிபவர்களுடன் சீக்ரெட் சான்டா விளையாட்டில் பங்கேற்கலாம். இந்த விளையாட்டு பரிசு வழங்குவதில் மர்மத்தையும், மகிழ்ச்சியையும், உற்சாகத்தையும் சேர்க்கிறது. உங்கள் சகாக்களுக்கு சிறந்த ரகசிய சான்டா பரிசுகளைத் தேர்ந்தெடுக்க வழி செய்கிறது.
இந்த விளையாட்டில் யார் கலந்து கொள்ள விரும்புகிறார்களோ அவர்களின் பெயர்களை பேப்பரில் எழுதி குலுக்கி போட வேண்டும். ஒவ்வொருவரும் ஒரு சீட்டை எடுத்து அதில் யாருடைய பெயர் வந்துள்ளது என்று தெரிந்து கொள்ள வேண்டும். ஆனால் அவர்களின் பெயரை வெளியில் சொல்லக்கூடாது. இந்த விளையாட்டு கிறிஸ்துமஸ்கு ஒரு நாள் முன் முடியும். அந்த நாளில் தான், எந்த நபரை நாம் தேர்ந்தெடுத்தோமோ அவருக்கு பிடித்த பரிசை கொடுத்து 'நான் தான் உங்களுடை சான்டா' என்பதை தெரிவிக்க வேண்டும்.
இந்த கிறிஸ்துமஸில் உங்கள் சகாக்களுக்கு என்ன பரிசளிப்பது என்று குழப்பத்தில் உள்ளீர்களா? இந்த 7 சிறந்த ரகசிய சான்டா பரிசு யோசனைகள் உங்களுக்குதான்...
1. வாசனை திரவியங்கள் :
வாசனை திரவியம் என்பது ஒரு இனிமையான வாசனையை வெளியிட பயன்படும் திரவ கலவையாகும். ஒரு ரகசிய சான்டா பரிசாக வாசனை திரவியத்தை கொடுக்கலாம். இது மதிப்பு மிக்க பரிசுப் பொருளாகும்.
2. புத்தகங்கள் :
உங்கள் சக ஊழியர் புத்தகங்களைப் படிப்பதில் ஆர்வமாக இருந்தால், ரகசிய சான்டாவின் போது புத்தகத்தை பரிசளிக்கலாம். பரிசளிப்பவருக்கு எந்த மாதிரியான புத்தகம் பிடிக்கும் என்று தெரிந்து கொண்டு பரிசளிப்பது நல்லது.
3. essential oils:
essential oils உங்கள் ஆரோக்கியத்தை மேம்படுத்த அல்லது சருமத்திற்கு மேற்பூச்சாகப் பயன்படுத்தலாம். essential oils பரிசளிக்க மிகவும் உகந்தது. உங்கள் சக ஊழியர்களுக்கு இதை பரிசளிக்கவும்.
4. கேஜெட்டுகள்:
இயர்போன் முதல் பவர்பேங்க் வரை உங்கள் அலுவலகப் பணியாளருக்கு வாழ்க்கையை எளிதாக்கும் கேஜெட் ஒரு திடமான பரிசாக இருக்கும்.
5. வாசனை மெழுகுவர்த்திகள்:
சரியான பரிசு என்றால், அது வாசனை மெழுகுவர்த்தியாக இருக்க வேண்டும். நவநாகரீக நறுமண மெழுகுவர்த்திகள் மேசை அலங்காரத்திற்கு ஏற்றவை மற்றும் உங்கள் சுற்றுப்புற வாசனையை அற்புதமாக்கக் கூடியவை.
6. பரிசு அட்டை:
பரிசு பெறுபவரின் ஆளுமை வகையை உங்களால் கண்டுபிடிக்க முடியாவிட்டால், அவர்களுக்கு ஒரு பரிசு அட்டையை (gift coupon) வழங்குவதே பாதுகாப்பானது.
7. desk plant :
சரியான கார்ப்பரேட் பரிசுக்கான தேடலில், வணிகங்கள் பெரும்பாலும் கிடைக்கக்கூடிய மிகவும் பயனுள்ள மற்றும் வாழ்க்கையை மேம்படுத்தும் விருப்பங்களில் ஒன்று desk plant. இவை மன ஆரோக்கியத்தை மேம்படுத்தும் திறனைக் கொண்டுள்ளன. சரியான desk plant-ஐ தேர்ந்தெடுப்பது முக்கியமானது.