‘அஜந்தா’ ஒவியங்களுக்கு டஃப் கொடுக்கும் ‘சித்தன்னவாசல்’ ஓவியங்கள்!

இந்தியாவில் உள்ள அஜந்தா குகை ஓவியங்களுக்கு அடுத்தாற் போல் புகழ்மிக்கது சித்தன்னவாசல் ஓவியங்கள் என சமணர்களின் குகை கோயில்களில் எழுதப்பட்டுள்ளது.
Sittanavasal
Sittanavasal
Published on

சித்தன்னவாசல் குகை என்பது இந்தியாவின் மாநிலமான தமிழ்நாட்டில் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள சித்தனவாசல் என்ற கிராமத்தில் அமைந்துள்ள ஒரு குகையாகும். இது குடைவரை ஓவியங்கள் மற்றும் குகை ஓவியங்களுக்கும் மிகப்புகழ் பெற்றது. சித்தன்னவாசல் குடை வரை ஓவியம். இது 7-ம் நூற்றாண்டில் தீட்டியது. இதில் பயன்படுத்தப்பட்ட நிறங்கள் தாவரங்களில் இருந்து பெற்றவை. இது கி.மு முதலாம் நூற்றாண்டில் சமண காலத்தில் கட்டப்பட்டது.

மூலிகையால் தயாரிக்கப்பட்ட ஓவியங்கள் :

சமணர் காலத்து ஓவியங்களான இவை 7ம் மற்றும் எட்டாம் நூற்றாண்டை சேர்ந்தவை. குன்றுகளால் சூழப்பட்ட சித்தன்னவாசல் ஓவியங்கள், சமணர்களால் மூலிகையால் தயாரிக்கப்பட்ட வர்ணங்களை கொண்டு வரையப்பட்டவை. இந்தியாவின் வட பகுதியில் காணப்படும் அஜந்தா ஓவியங்களைக் போன்று தனிப் சிறப்புமிக்க இந்த ஓவியங்கள் 1000 - 1200 ஆம் ஆண்டு பழமையானவை.

செயற்கை வர்ணம் :

இந்தியா விடுதலை அடைந்த பிறகும் போதிய பராமரிப்பின்றி புகைபடிந்து இருந்த இக்குகைகளும், ஓவியங்களும் கி.பி 1990களில் நிறம் மங்கத் துவங்கியதால் செயற்ககையாக நாம் தற்போது பயன்படுத்தும் வர்ணம் போன்ற பொருளைக் கொண்டு புதுப்பிக்கப்பட்டது.

இதையும் படியுங்கள்:
தமிழரின் ஓவியக்கலை வரலாற்றை சுமந்து நிற்கும் சித்தன்னவாசல்!
Sittanavasal

சுமார் 70 மீட்டர் உயரமே உள்ள இந்த குன்றுகளின் மேல் சமணர்களின் படுக்கையும், தவம் செய்யும் இடமும் பல இடங்களில் குடைவரைகளும் காணப்படுகின்றன.

சிறு மற்றும் பெரும் பாறைகளும் உள்ள இடமாக சமண முனிவர்கள் தவம் செய்த இடமாக அறியப்படுகிறது. இவ்விடத்தில் மிக அருகில் உள்ள ஏலடிப் பட்டம் என்ற இடத்தில் சமணர்களின் படுக்கைகளும் தமிழ்க் கல்வெட்டுகளும் காணப்படுகின்றன. அறிவர் கோயில் எனப்படுகின்ற சமண கோயில் ஒன்றும் உள்ளது.

சமணர்களின் குகை கோயில்கள் :

இந்தியாவில் உள்ள அஜந்தா குகை ஓவியங்களுக்கு அடுத்தாற் போல் புகழ்மிக்கது சித்தன்னவாசல் ஓவியங்கள் என சமணர்களின் குகை கோயில்களில் எழுதப்பட்டுள்ளது.

சித்தன்னவாசல் ஏழடி பட்டம் கூரையில் ஓவியங்கள் இருந்ததற்கான அடையாளங்களை புதுக்கோட்டை முதன்மை கல்வி அலுவலர் கண்டறிந்துள்ளார். சித்தன்னவாசல் மலையில் புராதன ஓவியங்களை கண்டறிந்துள்ளார். இது 4 வகையான ஓவியங்கள் இங்கு வரையப்பட்டிருக்க வேண்டும் என்று கருதப்படுகிறது. நான்கு ஓவியம் பெயர் குறிப்பு பட்டை ஓவியம், புள்ளி ஓவியம், கோண ஓவியம், சக்கர ஓவியம் என பெயரிட்டு இருக்கிறார் ஆய்வாளர்.

தமிழில் கல்வெட்டுகள் :

சித்தன்னவாசலில் தமிழில் கல்வெட்டுகள் காணப்படுவதால், இது கிமு மூன்றாம் நூற்றாண்டு தொட்டே சமயம் மெய்யியல் தொடர்பான, பயன்பாட்டில் இருந்த இடம்.

முதலில் இக்குகை ஓவியங்கள் முதலாம் மகேந்திரவர்ம பல்லவன் காலத்தை சேர்ந்தது என்று கருதப்பட்டாலும் இங்குள்ள கல்வெட்டு ஒன்றில் இதை மாறன் என்ற பாண்டிய மன்னன் சீர் செய்தான் என கூறுகிறது.

இந்த ஓவியம் சேந்தன் மாறன் காலத்திலோ, மாறவர்மன் அரிகேசரி காலத்திலோ சீர் அமைக்கப்பட்டது என்பது உறுதியானது.

ஏழடிப் பட்டம் :

குன்றின் நடுவில் கிழக்கு முகத்தில் அமைந்திருக்கும் இயற்கையான குகையின் பெயர் தான் ஏழடி பட்டம். இங்குதான் சமண முனிவர்கள் தங்கி இருந்தார்கள். இக்குகைக்குச் செல்ல மேற்குப் பகுதியில் இருந்து குன்றின் மீது ஏறி குகை வாயிலில் ஏழு படிக்கட்டுகளை கடந்து குகையின் உள்ளே செல்வதால் இவ்விடம் ஏழடிப் பட்டம் என்று அழைக்கப்படுகிறது. இந்த இயற்கைக் குகை பளிங்கு போல ஆன வழுவழுப்பான தலையணை போன்ற அமைப்புடன் ஆன 17 எண்ணிக்கையிலான கற்படுக்கைகள் இங்கு காணப்படுகின்றன.

இங்குள்ள படுக்கைகளில் பழமையானதும் மிகப்பெரியதுமான படுக்கையில், கல்வெட்டு ஒன்று தமிழ் பிராமி எழுத்துக்களால் உருவாக்கப்பட்டுள்ளது. அதில் கி.பி ஒன்பதாம் நூற்றாண்டை சேர்ந்த தமிழ் கல்வெட்டு ஒன்றில் கடுந்தவம் புரிந்த சமணத் துறவிகளைப் பற்றி அறிய முடிகிறது.

இதையும் படியுங்கள்:
இந்திய ஓவியக்கலையின் பெருமையினைக் கூறும் சித்தன்னவாசல் குகை ஓவியங்கள்!
Sittanavasal

சித்தன்னவாசல் இதனை சுற்றுலாவாக சென்று பழமையான ஓவியங்கள் கண்டுபிடிப்பையும், அரிய பொக்கிஷமான குகை ஓவியங்கள், சமணர் படுக்கைகளை சென்று பார்த்து வாருங்கள்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com