தூக்கக் கடவுளர் யார்?

தூக்கக் கடவுள் என்பது தூக்கத்துடனும் கனவுகளுடனும் தொடர்புடைய ஒரு ஆன்மீக உருவம் ஆகும்.
தூக்கக் கடவுள்
தூக்கக் கடவுள்img credit- Wikipedia
Published on

தூக்கக் கடவுள் என்பது தூக்கத்துடனும் கனவுகளுடனும் தொடர்புடைய ஒரு ஆன்மீக உருவம் ஆகும். பல கலாச்சாரங்களிலும் மதங்களிலும் தூக்கக் கடவுள் ஒரு முக்கிய உருவமாக உள்ளார். குறிப்பாக பண்டைய கிரேக்க, ரோமானிய பண்பாடுகளில், தூக்கக் கடவுள் தூக்கத்தை ஒழுங்குபடுத்துபவராகவும், கனவுகளை உருவாக்கும் பணிகளை செய்பவராகவும் நம்பப்படுகிறார்.

ரோமானிய கலாச்சாரங்களில் தூக்கக் கடவுள் சோம்னஸ் (Somnus) என அழைக்கப்படுகிறார். பல்வேறு மதங்கள் தூக்கத்தை கடவுளின் ஆசீர்வாதமாகவும், உடலையும், மனத்தையும் புதுப்பிப்பிக்கும் ஒரு வழியாகவும் கருதுகின்றன.

அடினோசின் தூக்கக் கடனின் ஒரு நரம்பியல் வேதியியல் குறிகாட்டியாக கருதப்படுகிறது. தூக்கமின்மை, மிகை தூக்கமின்மை, மயக்கம், தூக்கத்தில் மூச்சுத்திணறல் போன்ற தூக்கக் கோளாறுகள் நமக்கு ஏற்படலாம்.

1800 களில், அதிக தூக்கம் சோம்பலின் அடையாளமாகக் கருதப்பட்டது. தூக்கம் என்பது ஒரு இயல்பான செயல்முறை, ஆனால் தூக்கக் கோளாறுகள் இருந்தால், மருத்துவரின் ஆலோசனையைப் பெற வேண்டும்.

தூக்கமின்மை வகை 2 நீரிழிவு போன்ற பிற உடல்நலப் பிரச்சினைகளை ஏற்படுத்தும்.

தூக்கமின்மை, மிகை தூக்கமின்மை , மயக்கம் மற்றும் தூக்கத்தில் மூச்சுத்திணறல் போன்ற பல்வேறு தூக்கக் கோளாறுகளால் மனிதர்கள் பாதிக்கப்படலாம்.

ஹிப்னோஸ் (Hypnos), கிரேக்க கலாச்சாரங்களில் தூக்கத்தின் கடவுள். ஹிப்னோஸ் நிக்ஸின் (இரவு) மற்றும் எரீபஸ் (இருட்டு) மகனும், தனடோஸின் (இறப்பு) இரட்டைச் சகோதரனும் ஆவார். கிரேக்க புராணங்களில், ஹோமரின் கூற்றுப்படி அவர் பாதாள உலகில் அல்லது லெம்னோஸ் தீவில் இருப்பதாக கூறப்படுகிறது.

உறக்கத்தின் கிரேக்க கடவுளின் நான்கு மகன்கள் மார்பியஸ் , ஃபோபெட்டர், பாண்டசஸ் மற்றும் இகெலோஸ் ஆகியோர் ஆவர். தூக்கக் கடவுள் பயன்படுத்தக்கூடிய சக்தியில் ஹிப்னோஸின் மகன்கள் முக்கிய பங்கு வகித்தனர்.

இதையும் படியுங்கள்:
'கடவுள் இருக்கிறார்' - கணித ஆதாரத்துடன் நிரூபித்த விஞ்ஞானி!
தூக்கக் கடவுள்

தூக்கம் என்பது குறைந்த மன மற்றும் உடல் செயல்பாடுகளின் நிலை. தூக்கத்தின் போது, தசை செயல்பாடு மற்றும் சுற்றியுள்ள சூழலுடன் தொடர்புகளில் குறிப்பிடத்தக்க குறைவு உள்ளது. நம் அனைவருக்கும் ஒரு நாளைக்கு குறைந்தது எட்டு மணிநேர தூக்கம் அவசியம். தினமும் குறிப்பிட்ட நேரத்தில் படுத்து குறிப்பிட்ட நேரத்தில் எழுந்திருக்கும் பழக்கத்தை முறைபடுத்திக் கொள்ள வேண்டும். இரவு உணவை எட்டு மணிக்கு முன்பு உண்தோடு, மாலை 4 மணிக்குப் பிற்கு டீ, காஃபீ போன்றவற்றை குடிப்பதையும் தவிர்க்க வேண்டும். இரவில் மிதமான உணவு மட்டுமே உண்ண வேண்டும். காலை, மாலை இரண்டு வேளையும் நடைபயிற்சி செல்ல வேண்டும். நடைபயிற்சி நமது மன அழுத்தத்தை குறைக்கும். சீரான உடல் எடையை உடல் அடைய உதவும். உயர் இரத்த அழுத்தத்தை குறைக்கவும். இரத்தத்தில் சர்க்கரையின் அளவை குறக்கவும் உதவும். ஆழ்ந்த தூக்கம் நம் அனைவருக்கும் மிகவும் அவசியமாகும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com