ஸ்பெயின் நாடு பற்றி இதுவரை யாருக்கும் தெரியாத 10 விசித்திரமான ரகசியங்கள்!

ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே வரும் பேருந்து முதல் பாறைக்கு அடியில் உள்ள நகரம் வரை சுவாரசியமான தகவல்கள்!
ஸ்பெயின் நாடு - Spain Tourism
ஸ்பெயின் நாடு - Spain Tourism
Updated on

ஸ்பெயின் நாடு ஆண்கள், பெண்கள் அணிகள் ஒரே நேரத்தில் உலகக் கோப்பை பட்டம் வைத்திருக்கும் முதல் நாடு. வளமான கால்பந்து பாரம்பரியம், டிக்கி-டாக்கா உத்தி, இளம் வீரர் அகாதமிகள், முன்னணி கிளப்புகள் ஆகியவை அதன் பலம். சைவ உணவு விதி, சியஸ்டா ஓய்வு, இரட்டை குடும்பப் பெயர் மரபு, காளைச்சண்டை, தக்காளி திருவிழா போன்றவை ஸ்பெயினின் தனித்துவமான கலாச்சார முகம்.

2023- ல் சிட்னியில் பெண்கள் அணி உலகக் கோப்பையை வென்றது. ஸ்பெயின் ஒரு வளமான கால்பந்து பாரம்பரியத்தைக் கொண்டுள்ளது. அந்நாட்டின் தேசிய விளையாட்டே கால்பந்துதான்.

கால்பந்தில் ஸ்பெயின் புகழ் பெற முக்கிய காரணம், அதன் சிறப்பான இளம் வீரர்களை உருவாக்கும் அகாதமிகள், பந்தைக் கட்டுப்படுத்தி ஆளும் 'டிக்கி-டாக்கா' (Tiki-Taka) உத்தி, மற்றும் முன்னணி கிளப் அணிகளின் பலம் ஆகும். ஸ்பெயின் கால்பந்து வீரர்கள் பயிற்சியின் போது சைவ உணவை மட்டுமே சாப்பிட வேண்டும் என்பது அந்நாட்டின் விதி.

ஐரோப்பிய ஒன்றியத்தின் இரண்டாவது பெரிய நாடான ஸ்பெயின், சுமார் 506,000 சதுர கிலோமீட்டர் நிலப்பரப்பையும், 1 மில்லியன் சதுர கிலோமீட்டருக்கும் அதிகமான கடல் பரப்பையும் கொண்டுள்ளது. இது அட்லாண்டிக் மற்றும் மத்திய தரைக்கடல் பகுதிகளுக்கு இடையில் அவைகளை பிரிக்கும் வகையில் உள்ளது.

இந்நாட்டில் 48 மில்லியனுக்கும் மேற்பட்ட மக்கள் வாழ்கின்றனர். "கார்த்தாஜினியன்" பேரரசு என்பது ஸ்பெயின் பழைய பெயர் இதற்கு 'அலிகள் வாழும் நாடு' என்று அர்த்தம். அந்நாளில் வட்டவடிவ கற்களையே நாணயங்களாக பயன்படுத்தி வந்தனர். ஸ்பானிஷ் மொழி உலகில் பரவலாகப் பேசப்படும் இரண்டாவது மொழி.

இதையும் படியுங்கள்:
தண்ணீருக்கு அடியில் தலைகீழாக நிற்கும் பிரம்மாண்டக் காடு! வெனிஸ் நகரத்தின் அடியில் ஒளிந்திருக்கும் பகீர் உண்மை!
ஸ்பெயின் நாடு - Spain Tourism

உலகில் அதிக எண்ணிக்கையிலான யுனெஸ்கோ உலக பாரம்பரியத் தளங்களைக் கொண்ட மூன்றாவது நாடு ஸ்பெயின் ஆகும். இங்கு 47 பாரம்பரிய தளங்கள் உள்ளன. அழகிய கடற்கரைகள் மற்றும் அழகிய தீவுகளை கொண்ட நாடு. இங்கு 8000 கிமீ நீளமுள்ள கடற்கரைகள் பெரும்பாலும் சுத்தமான நிலையில் உள்ளன. வருடத்திற்கு 3000 மணி நேரம் சூரிய ஒளி கிடைக்கும் நாடு.

ஸ்பெயினில் அரச குடும்பத்தினர் உண்டு. அவர்களுக்கு தலைநகர் மாட்ரிட்டில் அரண்மனையும் உண்டு. ஆனால், அவர்களுக்கு ஆட்சி அதிகாரத்தில் பங்கு இல்லை. அங்கு அரசியலமைப்பு முடியாட்சி நடக்கிறது. அதாவது அரசியலமைப்புபடி அவர்கள் மேற்பார்வையில் ஜனாதிபதி ஆட்சியை செயல்படுத்துகிறார்.

வருடந்தோறும் ஜூலை மாதம் நடைபெறும் காளைச்சண்டை, ஆகஸ்ட் மாதம் நடைபெறும் தக்காளி திருவிழா என வித்தியாசமான பாரம்பரிய திருவிழா, விளையாட்டு மற்றும் வித்தியாசமான நடைமுறை மற்றும் அழகிய தீவுகள் மற்றும் இயற்கை வளங்கள் கொண்ட நாடு.

ஸ்பானிய மக்களுக்கு சட்டப்படி இரண்டு குடும்பப் பெயர்கள் உள்ளன. முதலாவது தந்தையின் குடும்பப் பெயர், மற்றும் இரண்டாவது தாயின் குடும்பப் பெயர். தாயார் பெயரை இனிஷியலாக போடும் நாடு ஸ்பெயின். காலை உணவாக அதிகம் சாக்லேட் எடுத்துக் கொள்கிறார்கள். எங்கு ஏறினாலும் முதலில் வலது காலை எடுத்து வைத்ததே ஏறுவார்கள்.

ஸ்பெயின் நாடு - Spain Tourism
ஸ்பெயின் நாடு - Spain TourismAI Image

ஸ்பெயின் நாட்டில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டாலும் சாலையின் நடுவில் காலியாகவே இருக்கும். அதில் ஆம்புலன்ஸ் மற்றும் தீயணைப்பு வண்டிகள் மட்டுமே செல்ல முடியும். 5 கிமீ தொலைவிற்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டாலும் நடுப்பகுதியில் யாரும் புகுந்து செல்ல மாட்டார்கள்.

ஸ்பெயின் தலைநகர் மாட்ரியாட்டில் உள்ள அலுவலகங்களில், கடைகளில் வேலை பார்ப்பவர்களுக்கு மதியம் 2 மணி முதல் 4 மணி வரை கட்டாய ஓய்வு அளிக்கப்படுகிறது. இது ஸ்பெயினில் பல இடங்களிலும் நடைமுறையில் உள்ளது. இதனை' சியஸ்டா (மதிய உறக்கம்) என்கிறார்கள். வங்கிகள் கூட 2 மணி வரை மட்டுமே இயங்கும்.

ஸ்பெயின் நாட்டில் லா டோர் டி ஒரிஸ்டா (La Torre d'Oristà) என்பது ஒரிஸ்டா நகராட்சியின் நடுப்பகுதியில் உள்ள ஒரு சிறிய கிராமமாகும். இங்கு 18-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பழமையான வீடுகளும், சாந்தா மரியா தே லா டோர் (Santa Maria de la Torre) தேவாலயமும் உள்ளன.

இதையும் படியுங்கள்:
சிமெண்ட் இல்லாத காலத்திலேயே நிலநடுக்கத்தை தாங்கி நிற்கும் சீனப் பெருஞ்சுவரின் ரகசியம்!
ஸ்பெயின் நாடு - Spain Tourism

இந்த கிராமத்திற்கு 'நம்பர் 654' என்ற பஸ் வருடத்திற்கு ஒருமுறை மட்டுமே அதுவும் மார்ச் மாதம் முதல் திங்கள் கிழமை மட்டும் வந்து செல்கிறது. இந்த கிராமத்தில் கிட்டத்தட்ட 300 பேர் மட்டுமே வாழ்ந்து வருகின்றனர். இந்த பஸ் 'சால்ட் சாலண்ட்' எனும் நீர் வீழ்ச்சி வரை செல்லும். அதனை காணவே வருகின்றனர்.

ஸ்பெயின் நாட்டில் பாறைக்கு அடியில் வீடுகள் அமைக்கப்பட்டிருக்கும் ஒரு தனித்துவமான நகரம் செடெனில் டெ லாஸ் போடேகஸ் (Setenil de las Bodegas). ஸ்பெயின் நாட்டின் தெற்கே காடிஸ் (Cádiz) மாகாணத்தில் அமைந்துள்ள இங்கு பெரும்பாலான வெள்ளை நிற வீடுகள் பிரம்மாண்டமான இயற்கை பாறைகளின் கீழ் குடையப்பட்டு அல்லது அவற்றின் அடியில் கூரையாக அமையப் பெற்றுள்ளன. இயற்கையான பாறை அமைப்பு காரணமாக, கோடை காலத்தில் குளிராகவும், குளிர்காலத்தில் கதகதப்பாகவும் இருக்கும்.

ஸ்பெயினின் புகழ்பெற்ற சிவப்பு நதி ரியோ டின்டோ (Rio Tinto) ஆகும். இது அண்டலூசியா மலைகளில் உருவாகி, அதிகப்படியான இரும்பு மற்றும் செம்பு தாதுக்களால் இரத்த சிவப்பு நிறத்தில் ஓடுகிறது. தென்மேற்கு ஸ்பெயினின் ஹுல்வா மாகணத்தில் சுமார் 100 கிலோமீட்டர் தூரம் வரை பாய்கிறது.

உலகின் மிகப் பழமையான உணவகமான 'ரெஸ்டாரன்ட் போட்டின்' மாட்ரிட்டில் இன்றும் செயல்பாட்டில் உள்ளது. இது 1725 முதல் இயங்கி வருகிறது, மேலும் பல ஆளுமைகளைக் கண்டுள்ளது. புகழ்பெற்ற ஸ்பானியக் கலைஞர் பிரான்சிஸ்கோ டி கோயா இங்கு பாத்திரம் கழுவுபவராகப் பணியாற்றியுள்ளார்.

மேலும் எர்னஸ்ட் ஹெமிங்வே, அவர் தனது ' ஃபீஸ்டா' நாவலில் இந்த உணவகத்தைப் பற்றி எழுதியுள்ளார். இன்றும் ஸ்பெயினின் பழங்கால உணவுகள் அங்கே கிடைக்கின்றன.

ரயில், பஸ்கள் கடந்து செல்வதற்காக சாலையில் 'லெவல் கிராசிங்' அமைப்பார்கள்.ஆனால், பறந்து செல்லும் விமானங்களுக்காக லெவல் கிராசிங் அமைக்கப் பட்டிருக்கும் அதிசயத்தை ஸ்பெயின் நாட்டில் ஜிப்ரால்டர் சர்வதேச விமான நிலையத்தில் (Gibraltar International Airport) மட்டும் காணலாம்.

இதையும் படியுங்கள்:
சுவிட்சர்லாந்திலும் தீ மிதி திருவிழாவா? நம்மூர் ராவண தகனத்தோடு ஒப்பிடப்படும் விசித்திர விழா!
ஸ்பெயின் நாடு - Spain Tourism

இது ஸ்பெயின் நாட்டின் எல்லையை ஒட்டி ஜிப்ரால்டர் நகரின் மையப்பகுதியில் இருந்து 500 மீட்டர் தொலைவில் உள்ளது. விமான நிலையத்தின் ஓடுபாதை விண்ஸ்டன் சர்ச்சில் அவென்யூ (Winston Churchill Avenue) என்ற முக்கியச் சாலையை குறுக்காக கடந்து செல்கிறது. இதனால் விமானம் வந்து இறங்கும் போதும் புறப்படும் போதெல்லாம் இந்தச் சாலையில் போக்குவரத்து தற்காலிகமாக மூடப்படுகிறது.

logo
Kalki Online
kalkionline.com