meta property="og:ttl" content="2419200" />

தென் கொரியாவை ஆண்ட தமிழச்சி.. யார் இந்த சுரி ரத்ன செம்பவளம்?

Suri Ratna Sembavalam
Suri Ratna Sembavalam
Published on

இந்தியாவிற்கு மட்டுமல்ல தென்கொரியாவிற்கும் அயோத்தி ஒரு முக்கிய இடமாகக் கருதப்படுகின்றது. அதற்குக் காரணம் இந்தியாவிற்கும் தென்கொரியாவிற்கும் இடையே உள்ள உறவு முறைத்தான். இந்தியாவில் தென்கொரிய சீரிஸ் விரும்பிகளும், BTS குழு என்றால் உயிரைக்கொடுக்கும் ஆர்மிகளும் அதிகம் உள்ளன. ஒருவேளை இதற்கு அந்த உணர்வுபூர்வமான கனெக்சன் தான் காரணமோ?

சரியாக 2000 ஆண்டுகளுக்கு முன்னர் அயோத்தியின் இளவரசி தென்கொரியாவின் ராஜாவை திருமணம் செய்துக்கொண்டதுதான் அந்த உறவுமுறை. தென்கொரியாவின் ஒரு வரலாற்று புத்தகத்தில் இதைப் பற்றி குறிப்பிட்டிருக்கிறார்கள். அதாவது அப்போது 'ஆயுத்தா' என்றழைக்கப்பட்ட உத்திரபிரதேசத்தில் உள்ள அயோத்தியாவை சேர்ந்த இளவரசி, தென்கொரிய ராஜாவை திருமணம் செய்ததாக அந்த புத்தகத்தில் குறிப்பிட்டிருந்தது. இதனைப் பற்றி தென்கொரியா தூதுவர் 'சாங் ஜே பாக்' சென்ற ஆண்டே கூறினார். இதன்மூலம் இந்திய மக்களின் ஆர்வம் பெருகியது.

சுரி ரத்ன செம்பவளம் ( தென் கொரியாவில் ஹியோ ஹவாங் – ஓகே) என்ற அயோத்தியின் இளவரசி 2000 ஆண்டுகளுக்கு முன்னர் தென்கொரியாவைச் சேர்ந்த அரசர் 'கிம் சுரோ' என்பவரைத் திருமணம் செய்துக்கொண்டார். பின்னர் இருவரும் சேர்ந்து கராக் ராஜ்யத்தை அமைத்து வெகுக்காலம் ஆட்சி புரிந்தனர். இந்தத் தகவலை சம்கக் யுசா ( Samguk Yusa) என்ற வரலாற்று புத்தகத்தில் மூதாதயர்கள் குறிப்பிட்டிருக்கின்றனர். இருவருக்கும் 10 குழந்தைகள் பிறந்தன. மேலும் ராஜா கிம் மற்றும் ராணி ஹவாங் இருவரும் கிட்டத்தட்ட 150 வருடங்கள் சேர்ந்து வாழ்ந்தனர் என்று அந்த வரலாற்றுப் புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளது.

அதுமட்டுமல்லாமல் இப்போது அந்த ராஜா மற்றும் ராணியின் சந்ததியினர்கள் 6 மில்லியன் ( அதாவது 10 சதவீதம்) மக்கள் தென்கொரியாவில் வாழ்ந்து வருவதாகவும் அராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். இதனை நூல் அறிஞர்கள் ஆராய்ச்சி செய்து பார்த்ததில் இது முற்றிலும் உண்மை என்பது தெரிய வந்தது.

இந்தியாவின் இளவரசி கொரியாவின் ராஜாவை திருமணம் செய்துக்கொண்டது முற்றிலும் உண்மை என்று தெரியவந்தாலும், அந்த இளவரசி அயோத்தியைச் சேர்ந்தவர் என்று மட்டும்தான் அப்புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளது. ஆனால் தாய்லாந்து நாட்டிலும் ஒரு அயோத்தி இருப்பதால் இவர் தாய்லாந்தின் இளவரசி என்றும் தாய்லாந்து மக்கள் கூறுகின்றனர். இன்னும் சிலர் அந்த இளவரசி தென்னிந்தியாவின் புத்த மதத்தை சேர்ந்தவர். புத்த பக்தையான அவர் தென் கொரியாவிற்கு பயணம் செய்தபோது ராஜாவை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார் என்றும் கூறுகின்றனர். என்னத்தான் நிறைய கதைகள் வந்தாலும் இளவரசி இந்திய நாட்டைச் சேர்ந்தவர் என்பது மட்டும் நிரூபனமானது.

இதையும் படியுங்கள்:
பிக்காசோ கலைப்படைப்புகளை பாதுகாத்துவரும் அருங்காட்சியகம்!
Suri Ratna Sembavalam

இதனால்தான் இன்று வரை தென்கொரியாவிற்கும் இந்தியாவிற்கும் பல ஒற்றுமைகள் உள்ளன. இரண்டிலும் மொழி ( அம்மா, அப்பா), கலாச்சாரம் ( கும்மி , கொரியாவில் கங்கான்சுலே), உணவு ( கொழுக்கட்டை, கொரியாவில் மோதகம்), பல்லாங்குழி விளையாட்டு( கொரியாவில் கொங்கி) போன்றவை ஒரே மாதிரி உள்ளன.

தென்னிந்தியா, வட இந்தியா என்ற எந்த வேறுபாடும் இல்லாமல் முழு இந்தியாவின் பல ஒற்றுமைகளை தென்கொரியா கலாச்சாரத்தில் நாம் காணமுடிந்ததற்கு செம்பவளம் இளவரசிதான் காரணம். இன்னும் சொல்லப்போனால் அயோத்திக்கு வந்த தென்கொரியா ராஜா தனது ஆயுதத்தில் இரண்டு மீன்களின் சின்னத்தை வைத்திருந்தது குறிப்பிடத்தக்கது. ஏனெனில், இதுதானே பாண்டியர்களின் சின்னமும் கூட.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com