செங்கோட்டை பிரானூர் 'பார்டர் கடை புரோட்டா'! குற்றாலம் சீசன் முடிஞ்சாலும்... புரோட்டா சீசன் தொடரும்!

Parotta & Gravy
Parotta & Gravy
Published on

தென்காசி மாவட்டம் செங்கோட்டை - கேரளா எல்லை பகுதியில் அமைந்துள்ளது பிரானூர் பார்டர்.

இந்த ஊரின் சிறப்பு அம்சம் புரோட்டா கடைகள் தான். இந்த பார்டர் கேரளா எல்லைப் பகுதியில் அமைந்துள்ளதால் பிரானூர் பார்டர் என பெயர் பெற்றது. பசியோடு வருபவர்களுக்கு ருசியாக உணவு வழங்கி வருகிறார்கள் இங்குள்ள புரோட்டா கடைக்காரர்கள்.

சாப்பிட வருபவர்களை அன்பாக உபசரித்து சுகாதாரமான முறையில் உணவு பரிமாறுவது இங்கு உள்ளவர்களின் ஸ்பெஷல் திறமையாகும். அவர்களை மீண்டும் மீண்டும் தங்கள் கடைக்கு வரவழைக்கும் சாமர்த்தியம் படைத்தவர்கள். இங்கு வரும் வாடிக்கையாளர்கள் சாப்பிட்டுவிட்டு தங்கள் வீட்டுக்கும் பார்சல் வாங்கி செல்கின்றனர்.

இந்த உணவுகளை தரம் குறையாமல் கெட்டுப் போகாமல் தயாரித்து வழங்குகின்றனர். இங்குள்ள புரோட்டாக்களுக்கு அனைவரும் அடிமை என்று தான் சொல்ல வேண்டும். தமிழகத்தில் ஏராளமான புரோட்டா கடைகள் இருந்தாலும், இந்த செங்கோட்டை பிரானூர் பார்டர் கடைக்கு ஈடாகாது.

மாலை 5 மணி தாண்டி விட்டால் குற்றால தென்றல் காற்றோடு இங்குள்ள சால்னா வாசனையும் கமகம என்று மணக்கும்; நம் மூக்கைத் துளைக்கும்.

கொத்து புரோட்டா சத்தம் நம் காதுகளை அதிர வைக்கும். இந்த மாவட்டத்துக்காரர்கள் அதிகம் உண்பது புரோட்டாவும் சிக்கனும் தான். தென் மாநில புரோட்டா கடைகளுக்கு சவால் விடும் வகையில் இங்குள்ள கடைகள் அமைந்துள்ளன.

இதையும் படியுங்கள்:
வேட்டிக்கு ஏன் வேட்டி என்று பெயர் வந்தது? தெரியாத வேட்டி, சட்டை, துண்டு வரலாறு!
Parotta & Gravy

குற்றாலம் சீசன் மூன்று மாதம் தான். ஆனால், இங்கு ஆண்டு முழுவதும் புரோட்டா சீசன் தான். 30 லட்சம் குற்றாலம் சீசன் பயணிகள் வந்தால் அதில் 70% பேர் இங்கு வந்து சாப்பிடாமல் போக மாட்டார்கள். அந்த அளவுக்கு புரோட்டா கடைகள் பெயர் பெற்றவை.

விஐபி முதல் விருமாண்டி வரை இந்த கடைக்கு வாடிக்கையாளர்கள். இங்கு பிலால் கடை வைத்திருக்கும் முகமது அனிபாவும் ரஹ்மத்து ஹோட்டல் இஸ்மாயில் இருவரும் என்ன மாயாஜாலம் செய்கிறார்கள் என்று தெரியவில்லை.

பூப்போல மென்மையான சிறிய சைஸ் புரோட்டாக்களும் நாக்கில் எச்சில் ஊற வைக்கும் சால்னாவும் நம்மை சுண்டி இழுக்கிறது. இந்த இரு கடைகளும் முழுக்க முழுக்க நாட்டுக்கோழிகளை வைத்து தான் சால்னா தயாரிக்கிறார்கள்.

இதையும் படியுங்கள்:
வட்ட வடிவ நாணயம்: இந்த வடிவத்துக்குப் பின்னால் உள்ள சுவாரஸ்யமான காரணம்!
Parotta & Gravy

இந்த சால்னாவில் முந்திரி பருப்பு ஏலக்காய் கசகசா கிராம்பு சின்ன வெங்காயம் சேர்க்கின்றனர். புரோட்டாவை எப்படி பூ போல செய்கின்றனர் என்றால், மாவை ஒரு மணி நேரம் பிசைந்து அதனை எண்ணெய் தடவிய பின் சிறிது நேரம் கழித்து கல்லில் வீசி அடிப்பதால் மென்மையான புரோட்டா கிடைக்கிறது.

இதையும் படியுங்கள்:
ஒரு தவறு, ஒரு வரலாறு: சாக்லேட் சிப் கதை!
Parotta & Gravy

அரசியல்வாதிகள் சினிமா சூட்டிங் குழுவினர் நடிகர் நடிகைகள் இந்த கடையில் வாடிக்கையாளர்கள் ஆவார்கள். தென்காசி குற்றாலத்திற்கு வரும் அரசியல் தலைவர்கள் இந்த கடைகளில் பார்சல் வாங்கி வர சொல்லி சாப்பிடுவார்கள்!

இந்தக் கடைகள் தமிழக கேரள எல்லைப் பகுதியில் அமைந்துள்ளதால் பார்டர் கடை என பெயர் பெற்றன.

இதையும் படியுங்கள்:
உலகின் மூன்றில் ஒரு பங்கு விலங்கினங்களைக் கொண்ட வெள்ளை யானை நாடு!
Parotta & Gravy

கரூர் நாமக்கல் பகுதியில் இருந்து கேரளாவுக்கு செல்லும் லாரிகள் அனைத்தும் இந்த நின்று இங்குள்ள புரோட்டாக்களை சாப்பிட்டு விட்டு தான் செல்வார்கள்.. இந்தப் பகுதியில் 150 க்கும் மேற்பட்ட மர அறுவை ஆலைகள் உள்ளன.

இந்தக் கடை உரிமையாளர்கள் சால்னாவுக்கு தேவையான மசாலா கலவைகளை வீட்டிலிருந்து தயாரித்துக் கொண்டு வருகிறார்கள். சால்னா தயாரிப்பு சூட்சுமத்தை யாரிடமும் சொல்ல மாட்டார்கள். அது ராணுவ ரகசியம் என்று கூறுகிறார்கள்.

தென்னிந்திய மக்கள் இதனை தேசிய உணவாக கருதுகிறார்கள்!

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com