
உலகில் எண்ணற்ற பணக்காரர்கள் உள்ளனர். ஆனால், தாய்லாந்தின் மன்னர் மகா வஜிரலோங்கோர்ன் (King Maha Vajiralongkorn), ஒரு சிலரால் மட்டுமே பெறக் கூடிய அரச குடும்பத்தையும், ஆடம்பரத்தையும் ஒன்றாக அனுபவிக்கிறார். பத்தாம் ராமா என்று அழைக்கப்படும் இவர் ஒரு ஆட்சியாளர் மட்டுமல்ல, உலகின் மிகப் பெரிய பணக்கார மன்னர் என்றும் தி பிசினஸ் ஸ்டாண்டர்ட் அறிக்கை கூறுகிறது. ஆனால் அவரிடம் பணம் மட்டுமல்லாமல் மிகவும் பிரமாண்டமான வாழ்க்கை முறையும் உள்ளது. இது பிரபலங்களுடன் ஒப்பிடுகையில் இவரின் தன்னடக்கத்தை காட்டுகிறது.
இவரது தந்தை புத்த ராஜ்ஜியத்தை 70 ஆண்டுகள் ஆட்சி செய்தார், உலகில் மிக நீண்ட காலம் ஆட்சி செய்த மன்னர்களில் இவருடைய தந்தையும் ஒருவர். வஜிரலோங்கோர்னின் 88 வயதான தந்தை Bhumibol Adulyadej அக்டோபர் 13, 2016 அன்று காலமானார். பின்னர், மே 2019 ல் இவருக்கு முடிசூட்டப்பட்டது.
மன்னர் வஜிரலோங்கோர்னின் செல்வம் சுமார் ரூ. 3.7 லட்சம் கோடி (தோராயமாக 43 பில்லியன் அமெரிக்க டாலர்கள்) என மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த மகத்தான செல்வத்தில் பெரும்பகுதி இவருக்கு பரம்பரை சொத்தாக வந்தது. இருப்பினும், அதை வெறுமனே தக்க வைத்துக் கொள்வதற்குப் பதிலாக, மன்னர் நிலத்திலும் தாய்லாந்தின் சில பெரிய நிறுவனங்களிலும் முதலீடு செய்வதன் மூலம் தனது பேரரசை மேலும் விரிவுபடுத்தினார்.
தாய்லாந்து முழுவதும் ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களை இவர் வைத்திருக்கிறார். அதில் பாங்காக்கில் மட்டும் 17,000க்கும் மேற்பட்ட சொத்துக்கள் அடங்கும். பெரும்பாலான மக்கள் தங்கள் வாழ்நாள் முழுவதும் ஒரு வீட்டை வாங்க முயற்சிப்பதில் செலவிடுகிறார்கள். ஆனால், இந்த மன்னர் உண்மையில் ஒரு முழு தலைநகரின் சில பகுதிகளுக்குச் சொந்தக்காரராக இருக்கிறார்.
மன்னர் 300க்கும் மேற்பட்ட சொகுசு கார்களை வைத்திருக்கிறார். அவற்றில் மெர்சிடிஸ் பென்ஸ், பிஎம்டபிள்யூ போன்ற சிறந்த மாடல்கள் மற்றும் நீட்டிக்கப்பட்ட லிமோசின்கள் கூட அடங்கும். அது போதாதென்று, அவர் 38 தனியார் ஜெட் விமானங்களையும் வைத்திருக்கிறார், அவற்றில் பல அரச சின்னங்கள் மற்றும் உட்புறங்கள் தங்கத்தால் அலங்கரிக்கப்பட்டுள்ளன.
இவருடைய சேகரிப்பில் மிகவும் அற்புதமாக கருதப்படுவது எதுவென்றால் இவரிடம் இருக்கும் 52 தங்கப் படகுகள். இவை வெறும் சாதாரண படகுகள் அல்ல, அவைகள் முழுமையாக தங்கத்தால் அலங்கரிக்கப்பட்டு இருக்கின்றன. மேலும் அவற்றை மன்னர் அரச விழாக்களின் போது மட்டுமே பயன்படுத்தபடுக்கிறார்.
1952 ஆம் ஆண்டு வஜிரலோங்கோர்ன், தாய்லாந்தின் மறைந்த மன்னர் Bhumibol கும் queen Sirikit கும் பிறந்தார். இவருடைய பெற்றோர்களுக்கு பிறந்த நான்கு குழந்தைகளில் இவர் ஒரே மகனாவார். இவர் மேற்படிப்புக்காக வெளிநாடு செல்வதற்கு முன்பு தாய்லாந்தில் தனது ஆரம்பக் கல்வியைத் தொடங்கினார். இவர் ஐக்கிய இராச்சியம் மற்றும் ஆஸ்திரேலியாவில் உள்ள தனியார் பள்ளிகளில் பயின்றார். இறுதியில் கான்பெராவில் உள்ள டன்ட்ரூனில் உள்ள மதிப்புமிக்க ராயல் மிலிட்டரி கல்லூரியில் சேர்ந்தார்.
இவர் ஆஸ்திரேலியாவில் உள்ள நியூ சவுத் வேல்ஸ் பல்கலைக்கழகத்தில் இராணுவப் படிப்பில் இளங்கலைப் பட்டம் பெற்றார். இவருடைய அதிகாரப்பூர்வ அரச வாழ்க்கை வரலாற்றின் படி, வஜிரலோங்கோர்ன் கல்வியில் சாதனை படைத்தவர் மட்டுமல்ல, பயிற்சி பெற்ற இராணுவ நிபுணரும் கூட. இவர் ஒரு சான்றளிக்கப்பட்ட போர் ஜெட் மற்றும் ஹெலிகாப்டர் விமானி மற்றும் Royal Thai Army ல் முழுநேர அதிகாரியாக பணியாற்றினார்.
1970களில் தனது இராணுவ வாழ்க்கையின் போது, தாய்லாந்திற்குள் கம்யூனிச கிளர்ச்சியாளர்களுக்கு எதிரான நடவடிக்கைகளில் பங்கேற்றார். சர்ச்சைகள் மற்றும் விமர்சனங்கள் அவரைத் தொடர்ந்து வந்த போதிலும், உலகில் மிகச் சிலரால் கூட நினைத்துப் பார்க்க முடியாத ஒரு வாழ்க்கையை மன்னர் தொடர்ந்து வாழ்கிறார். இவருடைய பெயர் பெரும்பாலும் ஆடம்பரம், அதிகாரம் மற்றும் ஒப்பிடமுடியாத அரச ஒளியுடன் தொடர்புடையது.
மே 2025 நிலவரப்படி, முகேஷ் அம்பானியும், கௌதம் அதானியும் இந்தியாவின் மிக முக்கியமான இரண்டு பில்லியனர்களாகத் தொடர்ந்து உள்ளனர். இருப்பினும் அவர்களின் அதிர்ஷ்டம் குறிப்பிடத்தக்க மாற்றங்களைச் சந்தித்துள்ளது. ஆனால், இந்த மன்னரோ இவர்களின் அளவுக்கு பணக்காரராக இல்லை என்றாலும் யாரும் நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு ஒரு அற்புதமான வாழ்க்கையை வாழ்கிறார் என்று சொன்னால் அது மிகையாகாது!!