தஞ்சாவூர் தலையாட்டி பொம்மை: கீழே விழாமல் நிமிர்ந்து நிற்கும் அறிவியலும் வரலாறும்!

தமிழரின் பாரம்பரிய கைவினைக் கலைக்கு பின்னால் இருக்கும் வியப்பூட்டும் இயற்பியல் ரகசியங்கள் இதோ.
தலையாட்டி பொம்மை - Tanjore dancing doll
தலையாட்டி பொம்மை - Tanjore dancing dollAI Image
Updated on

ஞ்சாவூர் தலையாட்டி பொம்மை சிறிய அசைவிலும் கீழே விழாமல் மீண்டும் நிமிர்ந்து நிற்கும் தன்மையால் பிரபலமான பாரம்பரிய கைவினைப் பொருள். 19ம் நூற்றாண்டில் மராட்டிய மன்னர் சரபோஜி காலத்தில் வளர்ந்த இந்த பொம்மை, கீழ் பகுதியில் எடை குவிக்கப்பட்டிருப்பதால் ஈர்ப்பு மையம் தாழ்ந்து சமநிலையைப் பேணுகிறது. குழந்தைகள் விளையாட்டுப் பொருளாகவும், வீட்டு அலங்காரமாகவும், பரிசுப் பொருளாகவும் பயன்படும் இது வாழ்க்கையில் தடுமாறினாலும் மீண்டும் எழுந்து நிற்கும் பாடத்தை நினைவூட்டுகிறது.

ஒரு சிறிய அசைவுக்கே தலையை ஆட்டிக்கொண்டே கீழே விழாமல் மீண்டும் மீண்டும் நிமிர்ந்து நிற்கும் அந்தப் பொம்மை வெறும் விளையாட்டு பொருள் அல்ல. பல நூற்றாண்டுகளைக் கடந்து வந்த தமிழரின் கைவினைக் கலை!

தலையாட்டி பொம்மை என்ற பெயர் ஏன் வந்தது?" தலையாட்டி"என்பது தலையை ஆட்டுவது. பொம்மை என்பது "doll".அசைத்தாலும் தட்டினாலும் அல்லது சிறிய காற்று வீசினாலும் தலை மெதுவாக ஆடும் என்பதால் இந்த பெயர் வந்தது.

தலையாட்டி பொம்மை உருவான சுவாரசியமான வரலாறு:

இந்த கைவினைப் பொருள் 19ம் நூற்றாண்டில் மராட்டிய மன்னர் சரபோஜி ஆட்சி காலத்தில் தஞ்சாவூரில் வளர்ச்சி பெற்றதாக கூறப்படுகிறது.

விழாமல் ஆடும் ரகசியம்

வேறென்ன அறிவியல்தான். பொம்மையின் பெரும்பாலான எடை அதன் கீழ் பகுதியில் குவிக்கப் பட்டிருக்கும் அதன் ஈர்ப்பு மையம் (centre of gravity) கீழே அமைந்திருப்பதால் பொம்மையைத் தள்ளினாலும் அது மெதுவாக ஆடி விட்டு மீண்டும் சமநிலைக்கு வருகிறது. இதனால்தான் அது கீழே விழாமல் தொடர்ந்து தலையாட்டுகிறது.

இதையும் படியுங்கள்:
இறந்த உடலையும் உயிர்ப்புடன் வைக்கும் 'பறை' - ஆதி தமிழன் தந்த இசை!
தலையாட்டி பொம்மை - Tanjore dancing doll

இப்படி நாம் குழந்தைப் பருவத்தில் ரசித்த அந்தத் தலையாட்டி பொம்மைக்குள் ஒரு சிறிய இயற்பியல் பாடமே மறைந்திருக்கிறது. முக்கியமான வகைகளைப் பார்க்கலாம்.. வாருங்கள்.

தலையாட்டி பொம்மையில் ராஜா ராணி பொம்மை, குண்டு சட்டி பொம்மை / உருளும் பொம்மை போன்ற வடிவங்கள் காணப்படுகின்றன. சில பொம்மைகளின் தலை மட்டும் ஆடும். சில பொம்மைகளின் உடலும் மெதுவாக ஆடிக்கொண்டு இருக்கும்.

கைகளால் உருவாக்கப்படும் கலை பாரம்பரியமாக மண், களிமண், டெரகோட்டா, பேப்பர் மேஷ் போன்ற பொருட்களை கொண்டு பொம்மைகள் உருவாக்கப்பட்டு பின்னர் கைகளால் வண்ணம் தீட்டப்படுகின்றன. ஒவ்வொரு பொம்மைக்கும் கைவினைக் கலைஞர்களின் பொறுமையும் திறமையும் தேவைப்படுகிறது.

தஞ்சாவூர் தலையாட்டி பொம்மைக்கு geographical Indication கிடைத்துள்ளது. அதாவது இந்தக் குறிப்பிட்ட பாரம்பரிய பொருள் தஞ்சாவூர் பகுதியுடன் தொடர்பு உடையது என்பதற்கான அதிகாரப்பூர்வ அங்கீகாரம்தான் அது.

"சிறிய அசைவிலும் சமநிலையை இழக்காமல் மீண்டும் நிமிர்ந்து நிற்கும் தஞ்சாவூர் பொம்மை வாழ்க்கைக்கும் ஒரு அழகான பாடம் சொல்கிறது". அதாவது வாழ்க்கையில் எத்தனை முறை தடுமாறினாலும் மீண்டும் நிமிர்ந்து நிற்கவேண்டும் என்பதை இந்த சிறிய பொம்மை நமக்கு கற்றுத் தருகிறது.

தலையாட்டி பொம்மை - Tanjore dancing doll
தலையாட்டி பொம்மை - Tanjore dancing dollAI Image

நவராத்திரி கொலுவில் தலையாட்டி பொம்மை பிடிக்கும் தனி இடம்:

இது குழந்தைகளுக்கான விளையாட்டுப் பொருள் மட்டும் அல்லாமல் வீட்டு அலங்காரப் பெருளாகவும்,பரிசுப் பொருளாகவும் பயன்படுத்தப்படுகிறது. பாரம்பரியத்தைப் பாதுகாக்கிறது. எப்படி என்றால் இயந்திரத்தில் தயாரிக்கப்படும் பொருட்கள் அதிகரித்தாலும் கைவினைக் கலைஞர்களின் கைகளால் உருவாகும் தஞ்சாவூர் தலையாட்டி பொம்மைகளுக்கு இன்னும் தனி மதிப்பு உள்ளது.

'நவராத்திரி கொலு என்றாலே பலவிதமான பொம்மைகள் நினைவுக்கு வரும்‌‌. அவற்றில் தலையாட்டி பொம்மைக்கு தனி இடம் உண்டு. வண்ணமயமான ராஜா ராணி வடிவங்களில் கம்பீரமாக காட்சி அளிக்கும் இந்த தலையாட்டி பொம்மைகள் கொலுவின் அழகை மேலும் அதிகரிக்கின்றன.

தலைமுறை தலைமுறையாக வீடுகளில் பாதுகாக்கப் படும் இந்த பொம்மைகள் வெறும் அலங்காரப் பொருட்கள் அல்ல. நம் பாரம்பரியத்தையும், கைவினைக் கலையையும் அடுத்த தலைமுறைக்கு அறிமுகப்படுத்தும் கலாச்சார சின்னங்களாகவும் விளங்குகின்றன. நம் பாரம்பரியம் இன்னும் உயிரோடு இருப்பதை சொல்லும் அழகான அடையாளம்தான் தஞ்சாவூர் தலையாட்டி பொம்மைகள்.

இதையும் படியுங்கள்:
மூர் மார்க்கெட் முதல் பட்டாணி சுண்டல் வரை... மெட்ராஸ் நல்ல மெட்ராஸ்!
தலையாட்டி பொம்மை - Tanjore dancing doll

ஒரு தலைமுறையில் இருந்து அடுத்த தலைமுறைக்கு கைகளில் பயணிக்கும் இந்த பொம்மைகள் தமிழர்களின் கைவினைத் திறனையும் கலாச்சார பெருமையையும் பாதுகாத்து வரும் சிறிய அழகிய தூதுவராக விளங்குகிறது என்றே சொல்லலாம்.

இந்தத் தகவல்களை அறிவதன் மூலம், தஞ்சாவூர் தலையாட்டி பொம்மையின் பின்னால் உள்ள அறிவியல் மற்றும் வரலாற்றுச் சிறப்புகளைப் புரிந்துகொண்டு, நம் பாரம்பரிய கைவினைக் கலையின் மதிப்பைப் போற்றி அடுத்த தலைமுறைக்கு பெருமையோடு கடத்த முடியும்.

logo
Kalki Online
kalkionline.com