2025 ஆம் ஆண்டிற்கான மிகவும் ஆபத்தான நாடுகளை தரவரிசைப்படுத்தி பொருளாதாரம் மற்றும் அமைதி நிறுவனம் வெளியிட்டுள்ளது. இந்த பட்டியல் பெரும்பாலும் போர் மற்றும் வன்முறை ஆகியவற்றை முதன்மையாக கொண்டு அளவிடப்பட்டுள்ளது.
கடந்த தசாப்த காலமாக அமைதியான நாடாக இருந்த ரஷ்யா , உக்ரைன் மீது படையெடுத்து தனது அமைதியை குலைத்தது. தொடர்ச்சியான போரில் ரஷ்யாவின் குடிமக்களை குறி வைத்து உக்ரைன் தாக்குதல் நடத்தி வருகிறது. நடைபெறும் போரில் மில்லியன் கணக்கான மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர். ரஷ்ய அதிபர் புடினின் கான்வாயில் நடத்தப்பட்ட குண்டுவெடிப்பு ரஷ்யாவின் பாதுகாப்பை பெரிய கேள்விக் குறியாக்கியுள்ளது. இது மிகவும் ஆபத்தான நாடுகளில் முதலிடம் பிடித்துள்ளது.
ரஷ்யாவின் தாக்குதலில் உக்ரைன் நிலை குலைந்துள்ளது. இந்த போரில் உக்ரைன் பெரும்பாலும் காவு கொடுக்கப்பட்டுள்ளது. பல்லாயிரம் மக்கள் போரில் உயிரிழந்துள்ளனர். தொடர் ஏவுகணைத் தாக்குதல்கள், குண்டுவெடிப்புகள் ஆகியவற்றால் குடிமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். நாடு முழுக்க பாதுகாப்பற்ற தன்மை நிலவுகிறது.
நீண்ட காலமாகவே சூடானில் இராணுத்திற்கும் தீவிரவாதிகளுக்கும் இடையேயான சண்டையில் அடிக்கடி பொதுமக்கள் படுகொலை செய்யப்படுகிறார்கள். உள்நாட்டு மோதலில் பெரிய அளவில் வன்முறை, இடப்பெயர்ச்சி, உணவுப் பஞ்சத்தை மக்கள் எதிர் கொள்கின்றனர். நாடு முழுக்க பாதுகாப்பற்ற சூழல் நிலவுகிறது.
ஆப்பிரிக்க நாடுகளில் தீவிரவாதிகள், அரசுக்கு எதிராக அப்பாவி பொதுமக்களை சுட்டு கொள்வது , தொடர்கதையாக உள்ளது. அதில் காங்கோ நாடு நீண்ட காலமாக பாதிக்கப்பட்டுள்ளது. பெரும் உணவுப் பஞ்சம் , விவசாயம் பாதிப்பு , வறட்சி , மில்லியன் கணக்கில் இடம்பெயரும் மக்கள் , அடிக்கடி நடைபெறும் தாக்குதலில் நாடு முழுக்க மக்கள் அச்சத்தில் உள்ளனர்.
தொடர்ச்சியான உள்நாட்டுப் போரில் ஏமன் நிர்வாகம் சீர்குலைந்து உள்ளது. இங்குள்ள கிளர்ச்சியாளர்கள் அவ்வப்போது பொதுமக்களை தாக்கி கொலை செய்வதால் , நாட்டில் அமைதியின்மை நிலவுகிறது. மொத்த பொருளாதாரம் தீவிரவாதம் காரணமாக பாதிக்கப்பட்டுள்ளது. எப்போது வேண்டுமானாலும் தீவிரவாதிகள் தாக்குதல் நிகழ்வதால் ஆபத்தான நாடாக உள்ளது.
ஆப்கான் தாலிபான் தீவிரவாதிகள் கையில் சிக்கி , கடுமையான அச்சுறுத்தலில் சிக்கியுள்ளது. கடுமையான சட்ட திட்டங்கள் பொது மக்களை அதிகம் பாதித்துள்ளது. பெண்கள் வெளியில் வரவே கடுமையான கட்டுப்பாடு உள்ளது. அடிக்கடி மற்ற தீவிரவாத குழுக்களுடன் சண்டை இடுவதாலும் மோசமான, மிகவும் ஆபத்தான நாடாக, உலக நாடுகளால் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.
சிரியா உலக தீவிரவாதிகளின் சொர்க்க பூமியாக இருக்கிறது. நாட்டில் ராணுவத்தின் தாக்குதல் ஒருபுறம் , பல நாட்டு தீவிரவாதிகள் தாக்குதல் ஒருபுறம் , இடையில் அமெரிக்க ரஷ்யா போன்ற நாடுகளின் தாக்குதலிலும் , அரசியலிலும் சிரியா சின்னாபின்னமாகி உள்ளது. அவ்வப்போது இஸ்ரேல் நடத்தும் தாக்குதல் என மொத்தமாக பாதுகாப்பற்ற நாடாக உள்ளது.
அடிக்கடி வன்முறை நிகழும் நாடாக இருக்கிறது. இன கலவரங்கள், அரசியல் போட்டிகள் , கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் என மிகவும் அபாயகரமான நாடாக உள்ளது. உணவுப் பஞ்சம் , பசி, பட்டினி , தீவிரவாதிகளின் திடீர் தாக்குதல் ஆகியவற்றால் உலகின் மிகவும் மோசமான நாடாக உள்ளது.
இஸ்ரேல் தொடர்ச்சியாக காசாவில் பேரழிவை ஏற்படுத்தினாலும், அந்த பகுதியும் இஸ்ரேலின் ஒரு பகுதி தான். மேலும் ஹமாஸ் பயங்கரவாதிகளின் பதில் தாக்குதலில் இஸ்ரேலும் அடிக்கடி பாதிக்கப்படுகிறது.
அரசியல் சதிகள் மற்றும் பயங்கரவாதத்தால் மற்ற ஆப்பிரிக்க நாடுகளை போலவே மாலியும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. ஒரு புறம் இராணுவ ஆட்சி , மறுபுறத்தில் தீவிரவாதிகளின் ஆக்கிரமிப்பு என ஜனநாயகம் இல்லாத நாடாக உள்ளது. இதனால் நாட்டின் பாதுகாப்பும் மோசமான நிலையில் உள்ளது.