இந்தியாவில் கவனிக்க வேண்டிய 7 ஆபத்தான உணவுகள்!

unhealthy foods
unhealthy foods
Published on

நம்ம இந்திய உணவு வகைகள் உலகம் முழுக்க ஃபேமஸ். பலவிதமான சுவைகள், சத்துக்கள்னு நிறைய நல்லது இருக்கு. ஆனா, சில உணவுகள், நாம சமைக்கிற விதத்தாலயோ, இல்ல சாப்பிடுற அளவாலயோ, உணவுப் பழக்கத்தாலயோ நமக்கு ஆபத்தானதா மாறலாம். ஒரு ஆரோக்கியமான வாழ்க்கைக்கு, எந்த உணவுகள்ல கொஞ்சம் கவனமா இருக்கணும்னு தெரிஞ்சுக்கிறது ரொம்ப முக்கியம். சில உணவுகள்ல கவனக்குறைவா இருந்தா என்ன ஆகும்னு பார்ப்போம் வாங்க.

1. மைசூர்பாகு, லட்டு போன்ற அதிக சர்க்கரை இனிப்புகள்: நம்ம இந்தியர்களுக்கு இனிப்புனா உயிர். மைசூர்பாகு, லட்டு, ஜாங்கிரி, குலாப் ஜாமுன்னு ஏகப்பட்ட இனிப்பு வகைகள் இருக்கு. ஆனா, இந்த இனிப்புகள்ல அதிகமா சர்க்கரை இருக்கும். இதை தினமும் அதிகமா சாப்பிட்டா சர்க்கரை நோய், உடல் பருமன், இதய நோய் இதெல்லாம் வர வாய்ப்பு அதிகம். இதுல சத்துக்களும் குறைவாதான் இருக்கும்.

2. ஊறுகாய் மற்றும் அப்பளம்: சாப்பாட்டுக்கு ஊறுகாயும், அப்பளமும் இருந்தா சிலருக்கு தனி டேஸ்ட். ஆனா, இந்த ரெண்டுலயுமே உப்பு ரொம்ப அதிகமா இருக்கும். அதிகமான உப்பு ரத்த அழுத்தத்தை அதிகரிக்கும், இதனால இதய நோய், சிறுநீரகப் பிரச்சனைகள் வரலாம். பதப்படுத்தப்பட்ட உணவுகளையும் கவனமா பார்த்து சாப்பிடணும்.

3. பஜ்ஜி, போண்டா சமோசா: பஜ்ஜி, போண்டா, சமோசா, பூரி, சமோசா, கட்லெட்னு நம்ம இந்தியர்கள் பொரிச்ச உணவுகளை விரும்பி சாப்பிடுவாங்க. ஆனா, இந்த உணவுகளை மறுபடியும் மறுபடியும் சூடுபடுத்தப்பட்ட சுத்திகரிக்கப்பட்ட எண்ணெயில பொரிக்கிறது ரொம்ப ஆபத்து. இதுல ட்ரான்ஸ் ஃபேட் (Trans Fat) உருவாகி, கொலஸ்ட்ரால், இதய நோய் அபாயத்தை அதிகரிக்கும். நல்லெண்ணெய், தேங்காய் எண்ணெய், கடலை எண்ணெய் போன்ற பாரம்பரிய எண்ணெய்களை உபயோகிக்கலாம்.

4. பானி பூரி, சாட் வகைகள்: பானி பூரி, சாட் வகைகள், கபாப்னு தெருவோர உணவுகள் சுவையா இருக்கும். ஆனா, இதுல சுகாதாரப் பிரச்சனைகள் அதிகம். பயன்படுத்தப்படும் தண்ணீர், எண்ணெய், பாத்திரங்கள் சுத்தமா இல்லாம இருக்கலாம். இதனால வயிற்றுப் போக்கு, வாந்தி, டைபாய்டு போன்ற நோய்கள் வர வாய்ப்பு இருக்கு. நல்ல, சுத்தமான இடங்கள்ல மட்டும் சாப்பிடறது நல்லது.

இதையும் படியுங்கள்:
படித்து முடித்தவுடன் அதிக வருமானம் பெற்றுத் தரும் 5 தொழில் துறைகள்!
unhealthy foods

5. அதிக காரமான அசைவ உணவுகள்: நம்ம இந்திய உணவுகள்ல காரம் கொஞ்சம் தூக்கலாவே இருக்கும். கோழிக்கறி மிளகு வறுவல், ஆந்திரா கறி மாதிரி சில உணவுகள்ல மிளகாய், மசாலான்னு அதிகமா சேர்ப்போம். மிதமான காரம் நல்லது. ஆனா, அதிக காரம் நெஞ்செரிச்சல், அசிடிட்டி பிரச்சனைகளை உண்டு பண்ணும். சில சமயம் குடல் புண்ணுக்கு கூட வழிவகுக்கலாம்.

6. பதப்படுத்தப்பட்ட இறைச்சி: இறைச்சி சமைக்கிற கலாச்சாரம் நம்ம ஊர்லயும் இருக்கு. ஆனா, கடைகள்ல கிடைக்கிற பதப்படுத்தப்பட்ட இறைச்சி வகைகள் மற்றும் சில வகை இறைச்சிகள் அதிக உப்பு, கொழுப்பு மற்றும் ரசாயனங்கள் கலந்திருக்கும். இது புற்றுநோய், இதய நோய் அபாயத்தை அதிகரிக்கலாம்.

7. கலப்படம் செய்யப்பட்ட மஞ்சள் தூள், மிளகாய் தூள், பால், நெய்: மஞ்சள் தூள், மிளகாய் தூள், பால், நெய்னு பல உணவுப் பொருட்கள்ல கலப்படம் நடக்குறதா செய்திகள் வருது. இந்த கலப்படம் செய்யப்பட்ட பொருட்களை சாப்பிடுறதுனால பலவிதமான உடல்நலக் குறைபாடுகள் வரலாம். நம்பகமான கடைகள்ல, தரமான பொருட்களை பார்த்து வாங்கணும்.

இதையும் படியுங்கள்:
எடை குறைப்பு இலக்குகளை பாதிக்கும் 10 இரவு உணவு தவறுகள்!
unhealthy foods

இந்த உணவுகள் எல்லாமே நம்ம கலாச்சாரத்தோட பின்னிப் பிணைஞ்சதுதான். ஆனா, அளவோட சாப்பிடுறது, சுகாதாரமான முறையில சமைக்கிறது, தரமான பொருட்களை தேர்ந்தெடுக்கிறது மூலமா, இந்த உணவுகள்னால வர்ற ஆபத்துகளை குறைக்க முடியும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com