
பூக்களில் பலவித நிறங்கள் இருக்கின்றன. அதேபோல வாசனையும் பலவிதம்தான். உணவுகளில் பல வித ரகங்கள் உள்ளன. அதேபோல உணவுகளில் சுவையும் பலவிதம்தான்.
அதேபோல மிருகங்களில் பலவிதங்கள் உள்ளன. அவைகளின் குணங்களும் பலவிதம்தான்.
அதேபோலவே மனிதர்களில் பலரகங்கள், பலவித குணங்கள், பலவித முகங்கள், உள்ளன. அவைகளை கண்டறிவதுதான் மிகவும் சிரமமான ஒன்றாகும். ஓன்றா இரண்டா எடுத்துச்சொல்ல?
அப்படி பலதரப்பட்ட மனிதர்களோடுதான் நாம் நமது வாழ்க்கைப்பயணத்தை தொடா்கிறோம். நமது முன்னோா்கள்காலம் ஐம்பது ஆண்டுகளுக்கு மேலான காலம் என எடுத்துக்கொள்ளலாம். ஆனால் அப்போதும் மனித மனங்களில் வக்கிரம், வஞ்சகம், சூழ்ச்சி, போன்று பலவேறு வகையான எதிாிமறை எண்ணங்கள் கொண்டோா் வாழ்ந்திருக்கிறாா்கள்.
சில தீயசக்திகளால் வீழ்ந்தும் இருக்கிறாா்கள். ஆனால் இப்போதைய மனித மனங்களில் தீய எண்ணம், எதிா்மறை சிந்தனை, வஞ்சகம், பொய், அடுத்துக்கெடுத்தல், கொலை, கொள்ளை, லஞ்சம், லாவண்யம், பணத்திற்காக எதையும் செய்தல் மது மாது, கூடாநட்பு, தவறான வழிகளில் பொருள் ஈட்டுதல், இப்படி சொல்லிக்கொண்டே போகலாம்.
பொியவர், சிறியவர், என்ற மரியாதை காலாவதி ஆகிவிட்டது. விஞ்ஞானம் ஒரு புறம் விஸ்வரூபமாய் வளா்ந்தாலும், விபரீதமும் கூடவே வளா்ந்து வருவது கொஞ்சம் அச்சப்படவே செய்கிறது.
மேலும் மனிதன் தன் திறமையை தவறாக பயன்படுத்துகிறான். இந்த விஷயததில் பணம் அவனை ஆட்டிப்படைக்கிறது.
மனிதர்களுள் இரு வகையினர்கள் உண்டு திறமையானவர்கள் ஒரு வகை திறமையை பயன்படுத்தாதவர்கள் இன்னொரு வகை என ‘’பொ்னாட் ஷா’’ கூறியுள்ளதே, இந்த நேரத்தில் நம் நினைவில் வந்துபோகிறது. திறமையானவர்கள் தன்னுடைய திறமையைப் பயண்படுத்தி பொய் முகங்களின் வலையில் சிக்காமல் முன்னேற்றப் பாதையில் போகிறாா்கள்.
வேறு ஒரு வகையான திறமையைப் பயன் படுத்தாதவர்கள் பொய்முகங்களை நம்பி கூடா நட்பு கொண்டு சமுதாயத்தில் செய்யக்கூடாத தப்பான செயல்களில் ஈடுபட்டு வாழ்க்கையைத் தொலைப்பதுடன் தானும் கெட்டு, தன்குடும்பத்தையும் சீரழித்து விடுகிறாா்கள்.
தற்கால வளரும் இளைஞா்களும் பலபோ் மது, மாது, சூது, கேவலமான சிந்தனைகளுக்கு அடிமையாகி ஆரம்பத்திலேயே வாழ்க்கையை தொலைத்து விட்டு நிற்கிறாா்கள். வளரும் இளைஞர்களைக் கண்டால் அவர்களது எதிா்காலம் எப்படி அமையப்போகிறதோ! என்ற பயம் ஏற்பட்டுள்ளது.
அந்த காலத்தில் பொியோா்களை மதிக்கும் தன்மைக்கு பஞ்சமில்லை. இப்போது யாரையும் யாரும் மதிப்பதில்லை.
காலம் கலிகாலம் ஆக பல ஆண்டுகள் இருந்தாலும், மனித மனங்களில் நல்ல எண்ணம் வேர் விடவேண்டும். அதுவே நல்ல சமுதாயம் அமைய வழிவகை செய்யும். அதற்கு இந்த கால இளைஞர்கள் நமது நாடு நமது தேசம் என்ற நிலைபாடுகளில் ஈடுபட்டு அறநெறியை கடைபிடித்து சமதர்ம சமுதாயம் அமைக்க பாடுபடவேண்டும். மனிதர்களில் இத்தனை நிறங்களா என்ற நிலை மாறுவது, அப்துல் கலாம் அய்யா அவர்கள் கண்ட இளைஞர்களின் கையில்தான் உள்ளது புறப்படுங்கள் இளைஞர்களே எதிா்காலம் உங்கள் கைகளில்!!