
மும்பையில் உள்ள ஆல்ட் மவுண்ட் சாலையில் இந்த பங்களா அமைந்துள்ளது. ஸ்பெயினில் உள்ள மாய தீவு போன்று அமையப் பெற்றுள்ளது இதன் சிறப்பு அம்சமாகும். இதன் பெயர் ஆண்டிலியா. ஆடம்பரமான மாளிகை போன்ற தோற்றத்துடன் காணப்படுகிறது. 27 மாடிகள் கொண்டது சுமார் 560 அடி உயரத்தில் உள்ளது.
இங்கு இல்லாதவை எதுவும் இல்லை. மூன்று ஹெலிபேடுகள், 50 பேர் அமர்ந்து பார்க்கக்கூடிய திரையரங்கம், ஐஸ் கிரீம் பார்லர், நீச்சல் குளம், பனி அறை, பாபிலோனாவில் உள்ளது போன்ற தொங்கும் தோட்டம், யோகா மையம், உடற்பயிற்சி மையம், 168 கார்கள் நிறுத்துமிடம்...
அமெரிக்காவைச் சார்ந்த பெர்கின்சு அண்ட்வில் என்ற நிறுவனம் வடிவமைத்துக் கொடுத்துள்ளது. பில்லி முறியா என்ற நிறுவனம் இதை கட்டி முடித்துள்ளது. 2006 இல் தொடங்கி 2010ல் நிறைவு பெற்றது. உலகில் பக்கிங்ஹாம் அரண்மனைக்கு அடுத்த இடத்தில் உள்ளது. அம்பானியின் சொத்து மதிப்பு 119 அமெரிக்க பில்லியன் டாலராக உள்ளது.
இவை தவிர அம்பானிக்கு அமெரிக்கா, துபாய், குஜராத் போன்ற இடங்களிலும் பங்களாக்கள் உள்ளன. மும்பையில் உள்ள பங்களா ஒவ்வொரு தளமும் இரட்டை மாடிகள் கொண்டது. எட்டு ரிக்டர் அளவுகோலில் பூகம்பத்தை தாங்கக்கூடிய அளவில் கட்டப்பட்டுள்ளது. ஒன்பது ஸ்பீடு லிப்ட்கள் உள்ளது. குடும்பம், விருந்தினர்கள், ஊழியர்கள் என அனைவருக்கும் தனித்தனி லிஃப்ட் வசதி உள்ளது.
இவரிடம் உள்ள மே பேக்கர் என்ற கார் ஒரு மில்லியன் டாலர் விலை உள்ளது. இவை தவிர விலை உயர்ந்த ஆஸ்டன் மார்ட்டின் ரேப்பிட் போன்ற விலை உயர்ந்த கார்கள் உள்ளன.
மகன்கள் ஆகாஷ், ஆனந்த் அம்பானி மற்றும் மகள் ஈஷா அம்பானி உடன் இந்த பங்களாவில் வசித்து வருகிறார்கள். இந்த பங்களாவின் மதிப்பு 15,000 கோடி ஆகும். ஒவ்வொரு அறையிலும் ஆடம்பர பொருட்கள் விலை உயர்ந்த சரவிளக்குகள் வண்ண வண்ண ஓவியங்கள், அழகான திரை சீலைகள் கண்ணை கவரும் விதத்தில் சிலைகள் அமைந்துள்ளன.
இங்கு 600 ஊழியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். அறை எங்கும் பழுப்பு நிறத்தினால் ஆன சோபாக்கள் நிறைந்து காணப்படுகிறது. மங்கலான தங்க நிறத்தில் வண்ண ஓவியங்கள் தீட்டப்பட்டுள்ளன. தரைகளில் அடர் நிறத்தில் ஆன துருக்கி கம்பளங்கள் விரிக்கப்பட்டுள்ளன.
வரவேற்பு அறையில் பிரம்மாண்டமான புத்தர் சிலை உள்ளது. இந்த பங்களாவில் மொத்தம் 50 படுக்கை அறைகள் உள்ளன. பசுமை நிறமான தொட்டிகள் பூந்தோட்டங்கள் இயற்கை தோட்டங்கள் ஆகியவை வடிவமைக்கப்பட்டுள்ளன.
பங்களாவில் தனியாக ஒரு கோவில் அழகாக உள்ளது. யோகா, நடனத்திற்கு என்று தனி இடம் உள்ளது. பனித்துளிகள் போல சொரியும் பனி அறை இயற்கையாக உள்ளது போல் அமைக்கப்பட்டுள்ளது. சுமார் 4 லட்சம் சதுர அடி பரப்பளவில் இந்த பங்களா கட்டப்பட்டுள்ளது.
ஸ்பெயின் நாட்டில் உள்ள மாய தீவு போன்று அமைக்கப்பட வேண்டும் என்று அம்பானி விரும்பினாராம். அதைப் போன்று இந்த பங்களா வடிவமைக்கப்பட்டுள்ளது. உலகில் பக்கிங் ஹாம் அரண்மனைக்கு அடுத்த இடத்தில் இந்த ஆண்டிலியா பங்களா உள்ளது உண்மையாகவே வியப்பாகத்தான் உள்ளது.