குத்புதின் மரணமும் சுப்ரக்-ன் தியாகமும்... பெர்சிய வரலாற்றுப் புத்தகங்கள் சொல்வதென்ன?

The death of Qutbuddin
The death of Qutbuddin
Published on

குத்புதீன் குதிரையில் இருந்து தவறி விழுந்து இறந்தார் என வரலாற்றுப் பாடத்தில் படித்திருக்கிறோம். அதனால் பாடத்தில் படித்தவர்களுக்கு இது தெரியும். ஆனால், எப்படி இறந்தார் என்ற வரலாறு யாருக்கும் தெரியாது. எப்படி என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.

குத்புதீன் ராஜபுதனத்துடன் பரஸ்பரம் ஒரு ஒப்பந்தம் செய்து கொண்டார். ஆனால் அதை மீறி, உதய்பூரின் இளவரசர் ராஜ்கன்வர் கர்ணசிங்கை சூழ்ச்சியால் கைது செய்து லாகூருக்கு அழைத்துச் சென்றார்.

ராஜ்கன்வருக்கு 'சுப்ரக்' என்ற சுவாமி பக்தி உள்ள வீரமான குதிரை இருந்தது, குத்புதீன் அந்த குதிரையை மிகவும் விரும்பி அதை அடையும் பொருட்டு ராஜ்கன்வருடன் கொண்டு சென்றார்.

லாகூர் சென்றவுடன் ராஜ்கன்வர் சிறைச்சாலையில் இருந்து தப்பி ஓட முயற்சித்தார் என குற்றம் சாட்டி ராஜ்கன்வருக்கு மரண தண்டனை விதித்தார் குத்புதீன். தண்டனையை நிறைவேற்றுவதற்காக ராஜ்கன்வரை ஜன்னத் பாக் எனப்படும் தூக்குமேடைக்கு அழைத்துச் சென்றனர். இளவரசனின் தலை வெட்டப்பட்ட பின்னர் அந்த தலையை கொண்டு 'போலோ' விளையாட முடிவு செய்யப்பட்டது (அந்த விளையாட்டின் பெயர் மற்றும் விளையாடும் விதம் வேறு)

குத்புதீன், ராஜ்கன்வர் மரணத்தைப் பார்க்க குதிரை சுப்ரக் மீது சவாரி செய்து தனது அணியுடன் ஜன்னத் பாக் க்கு வந்தார். கைதியாக இளவரசர் ராஜ்கன்வரை பார்த்தவுடன், சுப்ரக் குதிரையின் கண்களில் இருந்து கண்ணீர் வழிந்தது. ராஜ்கன்வர் தலையை வெட்ட சங்கிலிகள் அகற்றப்பட்டு தலையை திறந்தவுடன், சுப்ரக் குதிரை தன் மீது அமர்ந்திருந்த குதுபுதீனை தரையில் தள்ளிக் கீழே வீழ்த்தியது.

அத்துடன் நில்லாது குத்புதீனின் மார்பை தன் வலுவான கால்களால் பலமுறை தாக்கியது. அதிபயங்கர தாக்குதலால் அங்கேயே குத்புதீன் உயிர் பிரிந்தது. இதை தடுக்க வந்த இஸ்லாமிய படைவீரர்களால் தடுக்க முடியாது போனதுடன் குதிரையின் செயல் அவர்களை வியப்படைய வைத்தது. இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்ட இளவரசர் ராஜ்கன்வர் சுற்றி இருந்த வீரர்களிடமிருந்து தப்பித்து சுப்ரக் மீது ஏறி சவாரி செய்தார்.

சுப்ரக் காற்றுடன் பந்தயம் கட்டிப் பறப்பது போல் பறந்தது. லாகூரிலிருந்து உதய்பூருக்கு நிற்காமல் ஓடி, உதய்பூரில் அரண்மனை முன் நின்றது. இளவரசன் குதிரையில் இருந்து இறங்கி தன் பிரியமான குதிரை சுப்ரக்கை தடவி கொடுக்கக் கை நீட்டினான். ஆனால் சுப்ரக் சிலையாக நின்றிருந்ததைக் கண்டு அதிர்ச்சியானான். ஆம் சுப்ரக்கின் உயிர் பிரிந்திருந்தது. தலையில் கை வைத்த உடனே சுப்ரக் உடல் உருண்டது.

இந்த உண்மை இந்திய வரலாற்றில் எங்கும் சொல்லப்படவில்லை. தங்கள் எஜமானரின் இழி துயரமான மரணத்தைச் சொல்லத் தயங்கினார்கள். ஆனால், பெர்சியனின் பல வரலாற்றுப் புத்தகங்களில் குத்புதீன் மரணம் இப்படித்தான் விவரிக்கப்பட்டுள்ளது.

இதையும் படியுங்கள்:
கால் பேசும்போது இன்டர்நெட் ஆன்ல வச்சிருக்காதீங்க… ஒரு சைபர் பாதுகாப்பு எச்சரிக்கை!
The death of Qutbuddin

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com