உலக சினிமாவின் முதல் படமும், முதல் திகில் அனுபவமும்!

Lumière Brothers....
The first film in cinema
Published on

லக அளவில் திரைப்படங்களை விரும்பாதவர்களே இல்லை எனலாம். அந்த அளவிற்கு திரைப்படங்கள் நம் வாழ்வோடு ஒன்றிவிட்டது. திரைப்பட உலகின் முன்னோடிகளாகக் கருதப்படுபவர்கள் அகஸ்டே லூமியர் மற்றும் லூயிஸ் லூமியர்.

லூமியர் சகோதரர்களில் மூத்தவர் அகஸ்டே லூமியர் 1862 ஆம் ஆண்டு பிறந்தார். இளையவர் லூயிஸ் லூமியர் 1864 ஆம் அண்டு பிறந்தார். இவர்களின் தந்தையார் ஆண்டோனி லூமியர் ஒரு போட்டோ ஸ்டூடியோவை நடத்தி வந்தார்.

புகழ்பெற்ற கண்டுபிடிப்பாளர் தாமஸ் ஆல்வா எடிசன் 1892 ஆம் ஆண்டு கினோடோஸ்கோப் எனும் ஒரு திரைப்படக் கருவியை வடிவமைத்தார். கினோட்டோ எனும் கிரேக்க வார்த்தைக்கு நகர்தல் என்பது பொருள். ஸ்கோப் எனும் வார்த்தைக்கு பார்த்தல் என்பது பொருள். நகரும் ஒன்றை பார்த்தல் என்று பொருள்படும் விதமாக எடிசன் தனது கண்டுபிடிப்பிற்கு கினோட்டோஸ்கோப் என்று பெயர் வைத்தார். கினோட்டோஸ்கோப் என்பது ஒரு சிறு ப்ரொஜெக்டர் கருவி. இதில் உள்ள ஒரு சிறு துவாரம் வழியாக கண்களை வைத்துப் பார்த்தால் அதனுள் பொருத்தப்பட்டு வேகமாய் நகரும் பிலிம் ஒரு தொடர்காட்சியை நமக்குக்காட்டும்.

கினோட்டோஸ்கோப் 18 x 27 அங்குல அளவும் 4 அடி உயரமும் உடைய ஒரு மரப்பெட்டியாகும். இந்த கருவியின் மேற்பகுதியில் ஒரு லென்ஸ் பொருத்தப்பட்ட துவாரம் கொண்டதாய் இருந்தது. இந்த கருவியினுள் 50 அடி நீளமுள்ள ஒரு பிலிம் நகரும் பற்சக்கரத்தில் பொருத்தப்பட்டிருந்தது. இந்த பிலிமானது வேகமாய் நகர்த்தப்படும்போது ஒரு இயங்கும் காட்சியை பார்க்க முடிந்தது.

இந்த கருவியின் செயல்முறை பாரீஸ் நகரத்தில் நடத்திக் காட்டப்பட்டது. இந்த கூட்டத்தில் கலந்துகொண்டார் லூமியர் சகோதரர்களின் தந்தையான ஆண்டோனி லூமியர். தாமஸ் ஆல்வா எடிசனின் இந்த கருவியால் மிகவும் கவரப்பட்ட ஆண்டோனி லூமியர் ஊருக்குத் திரும்பியதும் இந்த கருவியைப் பற்றி மிகவும் சிலாகித்து தன் மகன்களிடம் விவரித்தார். தனது மகன்களிடம் இந்த கருவியைவிட உங்களால் ஒரு மிகச்சிறந்த திரைப்படக் கருவியை உருவாக்க முடியும் என்றும் ஊக்குவித்தார்.

இதையும் படியுங்கள்:
விலங்குகளுக்குத் திருவிழா... நீங்க கேள்விப்பட்டதுண்டா?
Lumière Brothers....

லூமியர் சகோதரர்களும் தந்தையாரின் விருப்பத்திற்கிணங்க ஒரே மாதத்தில் ஒரு சிறந்த திரைப்படக்கருவியை வடிவமைத்தார்கள். லூமியர் சகோதரர்களின் கண்டுபிடிப்பைக் கண்டு மகிழ்ந்த அவர்களது தந்தை ஒரு சினிமா தியேட்டரை உருவாக்கித் தந்தார்.

லூமியர் சகோதரர்கள் பலருக்கு கேமிராவை இயக்க பயிற்சி கொடுத்து அவர்களை உலகின் பல பகுதிகளுக்கும் அனுப்பி சிறு சிறு படங்களை பதிவுசெய்து வரச்சொல்லி அந்த படங்களை தந்தையார் உருவாக்கித் தந்த சினிமா தியேட்டரில் பலருக்கும் திரையிட்டுக் காட்டினார்கள்.

உலகின் முதல் திரைப்படம் லூமியர் சகோதரர்களால் உருவாக்கப்பட்டு பொதுமக்களுக்காக பாரீஸ் நகரத்தில் 28.12.1895 அன்று திரையிட்டுக் காட்டப்பட்டது. சிறு சிறு துண்டுப்படங்களாக மொத்தம் பத்து திரைப்படங்கள் திரையிடப்பட்டன. இந்த பத்து திரைப்படங்களும் மொத்தமாக இருபது நிமிடங்களே ஓடின.

சினிமாபடத்தை திரையிட்டுக்காட்ட இவர்கள் பயன்படுத்திய கருவியின் பெயர் சினிமேடோகிராப் என்பதாகும். இந்த கருவி காமிராவாகவும், ப்ரொஜக்ட்டராகவும் பயன்பட்டது. இந்த கருவி அளவில் சிறியதாகவும் எடை மிகவும் குறைவானதாகவும் இருந்தது.

இதையும் படியுங்கள்:
அழகுக்கு அழகு சேர்க்கும் 'ஆண்டாள் கொண்டை'! திருமணங்களில் அணிவது ஏன்?
Lumière Brothers....

லூமியர் சகோதரர்கள் எடுத்த திரைப்படங்கள் அன்றாட வாழ்க்கையில் நாம் பார்க்கும் விஷயங்களாக இருந்தன. இரயில் நிலையத்திலிருந்து ஒரு ரயில் புறப்படும் காட்சியே முதன் முதலில் லூமியர் சகோதரர்களால் படமாக்கப்பட்டது. திரையில் இந்த காட்சியை பார்த்த பார்வையாளர்கள் இரயில் திரையரங்கிற்குள் உண்மையிலேயே நுழைவதாக நினைத்து பயந்து விட்டனர். இந்த படத்திற்கு “The Arrival of a Train at the Station” என்று பெயரிட்டிருந்தார்கள்.

லூமியர் சகோதரர்கள் தங்கள் வாழ்நாளில் சுமார் 1425 மிகச்சிறிய படங்களை உருவாக்கி சாதனை படைத்து உலக திரைப்படஉலகின் முன்னோடிகளாகக் கருதப்படுகிறார்கள்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com