மன அழுத்தத்தைப் போக்கும் வீட்டின் இன்டீரியர் சைக்காலஜி!

How interior design of the house cures depression
How interior design of the house cures depressionImage Credits: PLNTS.com

சிலர் அதிகமான மன அழுத்தத்துக்கு ஆளாகியிருப்பார்கள். அப்படியிருப்பவர்கள் தன்னையும், தன்னைச் சுற்றியுள்ள இடத்தையும் அமைதியாகவும், அழகாகவும் மாற்றுவதை வைத்து மன அழுத்தத்திலிருந்து எளிதாக விடுபட முடியும். அப்படி நம் வீட்டில் செய்யவேண்டிய மாற்றங்கள் என்ன என்பதை பற்றி இந்தப் பதிவில் காண்போம்.

1. Avoid sharp edges: வீட்டில் இருக்கும் பொருட்களில் கூர்மையாக இருக்கும் இடங்கள் வருவது போன்றவற்றை தவிர்க்கவும். உதாரணத்திற்கு, பர்னிச்சர்களின் ஓரம் வளைவாக இருப்பது போல பார்த்து வாங்குவது சிறந்தது. வளைவான ஓரங்கள் கொண்ட பொருட்கள் நல்ல மனநிலையை உருவாக்குவதாக சொல்லப்படுகிறது.

2. Indoor plants: வீட்டினுள்ளே செடி, கொடிகளை வளர்ப்பது. வீட்டினுள் செடிகளை வளர்க்கும்போது அது நம் உடலையும், மனதையும் தூய்மைப்படுத்துகிறது. இது நம் மனதிற்கு நல்ல புத்துணர்ச்சியை தரும். அது மட்டுமில்லாமல், செடிகளை பராமரித்து பார்த்துக்கொள்ளும்போது நமக்கு ஒரு நல்ல நண்பன் கிடைத்தது போன்ற உணர்வு ஏற்படும்.

3. Avoid mirrors: கண்ணாடிகள் இன்டீரியர் டிசைன்களுக்கு எவ்வளவோ பயன்பட்டாலும் இங்கு கண்ணாடி தேவைப்படுவதில்லை. ஏனெனில். இங்கே கண்ணாடி பயன்படுத்துவதால் இடத்தை அடைத்துக்கொண்டிருக்கும். மன அழுத்தத்தில் இருப்பவர்களுக்கு எரிச்சல் உணர்வு ஏற்படுவதால், கண்ணாடிகளைத் தவிர்த்து விடுவது நல்லதாகும்.

4. sun light: வீட்டிற்குள் முடிந்த அளவு சூரிய ஒளி வருவது போல அமைப்பது நல்லதாகும். நம்முடைய இருப்பிடத்தை பிரகாசமாக வைத்துக்கொள்வதன் மூலம் நம்முடைய மனநிலையும் பிரகாசமாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படியுங்கள்:
சுமாரான வீட்டை சூப்பராக மாற்ற 5 எளிய ஆலோசனைகள்!
How interior design of the house cures depression

5. Colour psychology: ஒவ்வொரு நிறத்திற்கும் ஒவ்வொரு உணர்வை தூண்டிவிடக்கூடிய ஆற்றல் உள்ளது. Bright, warm colours ஆரஞ்சு, சிவப்பு, மஞ்சள் போன்ற நிறங்கள் நம்மை மகிழ்ச்சியாகவும், புத்துணர்ச்சியாகவும் வைத்துக்கொள்ளும். Cool, subdued colour பச்சை, நீலம், பர்புள் போன்ற நிறங்கள் அமைதியையும், மன நிம்மதியையும் தரும். Warm colours உணவருந்தும் இடம், சமையலறை போன்ற இடங்களுக்கு ஏற்றது. இதுவே Cool colours படுக்கையறை, குளியலறையில் பயன்படுத்தலாம். இதுபோன்ற நிறங்களுக்கு நம் மனநிலையை மாற்றக்கூடிய ஆற்றல் உள்ளது. வீட்டில் பயன்படுத்தும் நிறங்களுக்கும் நம் மனநிலைக்கும் நிறைய தொடர்பு இருப்பதால், சரியான நிறத்தை தேர்வு செய்து அடிப்பது சிறந்தது.  இந்த 5 விஷயங்களையும் நம் வீட்டில் நல்ல முறையில் மாற்றி அமைக்கும்போது அது நம்முடைய மனநிலையை நல்ல நிலைக்கு மாற்றக்கூடிய ஆற்றலுடையது. முயற்சித்து பாருங்களேன்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com