பாரதியாரின் பன்முகப் பயணம் : தமிழைப் போற்றிய மகாகவி!
மகாகவி என்று சொன்னால் எல்லோருக்கும் அது பாரதியாரையே குறிக்கும் என்பது வெட்ட வெளிச்சம். உலகிலேயே இரண்டு பேருக்குத்தான் "மகா" பட்டம் கொடுக்கப்பட்டுள்ளது. ஒன்று மகாத்மா காந்தி, மற்றொன்று மகாகவி பாரதியார். ஆம், மகாகவி பாரதியே.
அவர் பன்முகத்தன்மை பெற்றவர். பல மொழிகளில் புலமை பெற்றவர். ஆனால், "யாமறிந்த மொழிகளிலே தமிழைப்போல் இனியாவது..." என்று தன் தாய்மொழியைப் போற்றினார்.
ஆம், பாரதி யார்?
இதழாசிரியர்
கவிஞர்
எழுத்தாளர்
சுதந்திரப் போராட்ட வீரர்
என்று பன்முகத்தன்மை பெற்றவர். அவரது 'பாஞ்சாலி சபதம்', 'கண்ணன் பாட்டு', 'பாப்பா பாட்டு', 'புதிய ஆத்திசூடி' போன்ற பல்வேறு படைப்புகள் அவருடைய திறமையை உலகுக்கு வெளிப்படுத்தின.
அவர் ஒரு சிறந்த போராட்ட வீரர். காங்கிரஸில் இருந்த தீவிரவாதிகளில் பாரதியும் ஒருவர். அவர் திலகரை தனது அரசியல் குருவாக ஏற்றுக்கொண்டார். அப்போது அவர் விவேகானந்தர் மற்றும் அவரது சீடரான சகோதரி நிவேதிதாவைச் சந்தித்துப் பேசினார். பெண் உரிமை பற்றி அதிகம் பேசினார். நிவேதிதாவின் திறமை மற்றும் அர்ப்பணிப்பைக் கண்டு அவரைத் தனது ஞானகுருவாக ஏற்றுக்கொண்டார்.
காங்கிரஸ் போராட்டங்களில் உற்சாகமாகப் பங்கேற்றார். தனது நண்பர்களான கப்பலோட்டிய தமிழன் வ.உ.சி மற்றும் சுப்ரமணிய சிவாவை பிரிட்டிஷ் அரசு கைது செய்து சிறையில் அடைத்து சித்திரவதை செய்தது. தனக்கும் கைது வரும் என்பதால், 1908-ல் பிரெஞ்சு காலனியாக இருந்த புதுச்சேரிக்குச் சென்று 1918 வரை தங்கினார். அப்போது அரவிந்தரைச் சந்தித்துத் தோழரானார். அரவிந்தர் வெளியிட்ட "கர்மயோகி" பத்திரிகை வெளிவர உதவினார்.
மிகச் சிறந்த இதழாசிரியர். 'சுதேசமித்திரன்', 'பால பாரதா', 'விஜயா', 'தி இந்து', 'இந்தியா' எனப் பல பத்திரிகைகளில் எழுதினார். முதன்முதலில் பத்திரிகையில் "கேலிச்சித்திரம்" அதாவது கார்ட்டூன் வரைந்தவர் பாரதியே. 'சுதேசமித்திரன்' ஆசிரியராகச் சிறப்பாகப் பணியாற்றினார்.
உலக அரசியலும் தெரிந்தவர். பிரெஞ்சுப் புரட்சி மற்றும் ரஷ்யப் புரட்சி பற்றிப் பத்திரிகைகளில் எழுதினார். "ஆஹா… என்று ஒரு யுகப் புரட்சி வந்ததே" என்று ரஷ்யப் புரட்சி பற்றி எழுதினார். லெனினைப் பற்றித் தலையங்கம் எழுதிப் பாராட்டினார்.
அவரது கவிதைகள் புரட்சி செய்தன. மரபுக்கவிதை இலக்கணத்தை மீறி "வசன கவிதை" அற்புதமாக எழுதினார். இந்தியாவில் பெண் உரிமைக்காகப் பாடுபட்டவர் பாரதி. இலக்கியத்திற்கான நோபல் பரிசு அவருக்குக் கிடைத்திருக்க வேண்டும், ஏனோ தவறி விட்டது.
மகாகவியின் மற்றொரு சிறப்பு, அவர் தனது பாடல்களில் மத நல்லிணக்கம் பற்றி உணர்ச்சி பொங்க எழுதினார். அவர் எழுதாத விஷயமே இல்லை.
1918-ல் அவர் திருவல்லிக்கேணி வந்தபோது, பிரிட்டிஷ் அவரை கைது செய்து சிறையில் அடைத்தது. அன்னி பெசன்ட் அம்மையாரின் உதவியால் பாரதியார் விடுதலை செய்யப்பட்டார்.
மகாகவியின் சில பாடல்கள்:
"தனியொருவனுக்கு உணவு இல்லையெனில்... ஜகத்தினை அழித்திடுவோம்!"
"அச்சமில்லை அச்சமில்லை... உச்சிமீது வானிடிந்து விழும்போது..."
"மாதர்தம்மை இழிவு செய்யும் மடமையைக் கொளுத்துவோம்!"
"ஓடி விளையாடு பாப்பா... நீ ஓய்ந்திருக்கலாகாது பாப்பா...!"
"ஆடுவோமே பள்ளு பாடுவோமே...! ஆனந்த சுதந்திரம் அடைந்துவிட்டோம் என...!"
மகாகவிக்கு நிகராக யாரும் இல்லை. இனியும் பிறப்பார்களா என்பது சந்தேகமே! இளம் வயதிலேயே லாவண்யா என்ற யானை தாக்கி உடல்நலம் இழந்து மரணம் அடைந்தார்.
பாரதி புகழ் வாழ்க வாழ்கவே! பாரதி புகழ் ஓங்க ஓங்கவே!!